Published:Updated:

கொரோனாவால் பெரும் சரிவைச் சந்திக்கும் கால்பந்து பிசினஸ்... தண்டனையால் தப்பித்திருக்கும் செல்சீ!

Lampard ( Photo: Chelsea FC )

இந்த சீசனில் அதிகமாக player exchange நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே சில அணிகள் அப்படியான டிரான்ஸ்ஃபர்களை ஆலோசித்துக்கொண்டிருக்கின்றன.

கொரோனாவால் பெரும் சரிவைச் சந்திக்கும் கால்பந்து பிசினஸ்... தண்டனையால் தப்பித்திருக்கும் செல்சீ!

இந்த சீசனில் அதிகமாக player exchange நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே சில அணிகள் அப்படியான டிரான்ஸ்ஃபர்களை ஆலோசித்துக்கொண்டிருக்கின்றன.

Published:Updated:
Lampard ( Photo: Chelsea FC )

``யுவன்டஸ் அணி போக்பாவை 150 மில்லியன் டாலர் கொடுத்து மீண்டும் வாங்கத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறது”

``எம்பாப்பேவை 200 மில்லியன் யூரோவுக்கு வாங்கத் திட்டமிடுகிறது ரியல் மாட்ரிட்”

``120 மில்லியன் பவுண்டுக்கு ஜேடன் சான்சோவை வாங்க மான்செஸ்டர் யுனைடர், செல்சீ அணிகளுக்கு இடையே போட்டி”

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜூன் மாதம் தொடங்கிவிட்ட நிலையில், கால்பந்து உலகில் இந்நேரம் இப்படியான செய்திகள்தான் வலம் வந்துகொண்டிருக்கவேண்டும். ஆனால், நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. சீசனை முடிக்கவே ஒவ்வொரு கால்பந்து சங்கமும் போராடிக்கொண்டிருக்கிறது. ஜூன் மாதத்துக்குப் பிறகும் இந்த சீசனின் போட்டிகளை நடத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. ஜுனில் முடிவுக்கு வரும் வீரர்களின் ஒப்பந்தங்களை எப்படி நீட்டிப்பது எனக் குழம்பிக்கொண்டிருக்கின்றது. சரி, சீசன் முடிந்ததும் டிரான்ஸ்ஃபர்களை வழக்கம்போல் தொடங்கலாம் என்றால், கொரோனா ஏற்படுத்தியிருக்கும் பொருளாதாரத் தாக்கம் அதற்கும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

போட்டிகள் நடக்கவில்லை, ஒளிபரப்புகள், அதனால் வரும் வருமானம் ஏதும் இல்லை. ரசிகர்களும் வரப்போவதில்லை. பல ரீதியிலும் அணிகளுக்கு வரும் வருமானம் தடைபட்டிருக்கிறது. அப்படியிருக்கையில் முன்பைப்போல் மில்லியன்களில் எந்த அணிகளாலும் செலவு செய்திட முடியாது. ரியல் மாட்ரிட், பார்சிலோனா, மான்செஸ்டர் யுனைடட் போன்ற பெரிய அணிகளுக்குமே இது அசாத்தியமான சூழல்தான். அதனால், இந்த சீசனில் அதிகமாக player exchange நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே சில அணிகள் அப்படியான டிரான்ஸ்ஃபர்களை ஆலோசித்துக்கொண்டிருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த சில மாதங்களாக இன்டர் மிலன் அணியின் ஸ்ட்ரைக்கர் லடாரோ மார்டினஸை வாங்கத் துடித்துக்கொண்டிருக்கும் பார்சிலோனா, அவருக்கான முழுத் தொகையைக் கொடுக்கத் தயங்குகிறது. அதனால், ரகிடிச், விடால் போன்ற சீனியர் வீரர்களை அந்த டீலில் சேர்க்க நினைக்கிறது. ஆனால், ஆர்தர் போன்ற இளம் வீரர் வேண்டுமென்று அடம்பிடிக்கிறது இன்டர். அதேபோல் யுவன்டஸ், செல்சீ அணிகள் ஜார்ஜினோவையும் பியானிச் அல்லது பெர்னார்டேஷி இருவரில் ஒருவரை மாற்றிக்கொள்ளக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது. பொருளாதாரச் சிக்கல் நிலவி வரும் இந்தச் சூழலில் இதுபோன்ற பல டீல்கள் இந்த சீசனில் நடக்கக்கூடும்.

எப்போதும் காட்டுத்தீ போல் பரவிக்கொண்டிருக்கும் டிரான்ஸ்ஃபர் வதந்திகள்கூட இப்போது குறைவாகவே காணப்படுகின்றன. ஓய்வில்லாமல் உலாவிக்கொண்டிருந்த நெய்மர் பற்றிய வதந்திகளே இப்போது சத்தில்லாமல் இருக்கின்றன. புதிய வீரர்களுக்கு அதிகம் செலவிட முடியாததால், மற்ற அணிகளில் ஒப்பந்தம் முடியும் வீரர்களை தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்ய பெரும் போட்டி நிலவும். அபாமயாங், பெட்ரோ, வில்லியன் போன்ற பிரீமியர் லீக் வீரர்களுக்கு ஏற்கெனவே சில அணிகள் வரிசைகட்டி நிற்கின்றன. அதேபோல், தங்கள் பழைய வீரர்களின் ஒப்பந்தத்தை நீட்டிப்பதில் பெரும்பாலான அணிகள் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன.

இத்தனைக்கும் மத்தியில் ஒரு அணி மட்டும் கடந்த சில நாள்களாக கால்பந்து மார்கெட்டில் மிகவும் ஆக்டிவாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. செல்சீ! அயாக்ஸ் வீரர் ஹகிம் ஜியெச்சை ஒப்பந்தம் செய்திருந்த செல்சீ, இப்போது ஐரோப்பிய கால்பந்தின் முன்னணி ஸ்டிரைக்கராக வலம் வரத் தொடங்கியிருக்கும் டிமோ வெர்னரை அவரது ரிலீஸ் க்ளாஸை இயக்கி, 60 மில்லியன் யூரோவுக்கு வாங்கியிருக்கிறது. அதே வேகத்தில் டிஃபண்டர் பென் சில்வெல்லைக் கையெழுத்திடவும் முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறது அந்த நிர்வாகம்.

Timo Werner
Timo Werner
AP

மற்ற அணிகளெல்லாம் அமைதியாக இருக்கும்பொது செல்சீ இவ்வளவு துடிப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் காரணமே வேடிக்கையானது. டிரான்ஸ்ஃபர் விதிமுறைகளை மீறியதற்காக அந்த அணி ஒரு சீசனுக்கு எந்த வீரர்களையும் ஒப்பந்தம் செய்வதற்குத் தடை விதிக்கப்பட்டது. அதனால், 2019-20 சீசன் தொடக்கத்தில் அந்த அணியால் எந்த வீரரையும் வாங்க முடியவில்லை. அதனால், ஈடன் ஹசார்டை விற்றதன் மூலம் கிடைத்த 100 மில்லியன் யூரோவை அவர்களால் செலவு செய்ய முடியாமல் இருந்தது. அதுமட்டுமல்லாமல், அல்வாரோ மொராடாவை 48.5 மில்லியன் பவுண்டுக்கு விற்க இந்தப் பிரச்னைக்கு முன்பே அத்லெடிகோ மாட்ரிட் அணியோடு ஒப்பந்தம் செய்திருந்தது செல்சீ.

இந்தச் சூழ்நிலையில் நிச்சயம் 30 மில்லியன் பவுண்டுக்கு மேல் மொராடாவின் மதிப்பு கூடியிருக்காது. ஆனால், செல்சீ முன்பே செய்திருந்த வியாபாரம் இந்தப் பெரிய தொகையையும் அவர்களுக்குப் பெற்றுக் கொடுத்தது. இவற்றையெல்லாம்தான் அந்த அணி இப்போது செலவு செய்துகொண்டிருக்கிறது. ஜியெச், வெர்னர் முடித்து சில்வெல் பக்கம் இப்போது கவனத்தைத் திருப்பியிருக்கும் அந்த அணி, ஜேடன் சான்சோ, கை ஹாவர்ட்ஸ் போன்ற வீரர்களையும் டார்கெட் செய்யலாம் என்று தெரிகிறது. இப்போது யோசித்தால், கடந்த ஆண்டு செல்சீ பெற்ற தண்டனை அவர்களுக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்திருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism