Published:Updated:

UEFA: மெஸ்ஸி vs ரொனால்டோ இல்லை... சாம்பியன்ஸ் லீக் டிராவில் என்ன குழப்பம்?

UCL draw

அரங்கேறிய குளறுபடி பற்றி அணிகள் முறையீடு செய்ய, அதைப் பற்றி விசாரணை நடத்தியது ஐரோப்பிய கால்பந்து சங்கமான UEFA. அதன்பிறகு, இந்தக் குலுக்கல் மீண்டும் நடக்கும் என முடிவு செய்யப்பட்டது.

UEFA: மெஸ்ஸி vs ரொனால்டோ இல்லை... சாம்பியன்ஸ் லீக் டிராவில் என்ன குழப்பம்?

அரங்கேறிய குளறுபடி பற்றி அணிகள் முறையீடு செய்ய, அதைப் பற்றி விசாரணை நடத்தியது ஐரோப்பிய கால்பந்து சங்கமான UEFA. அதன்பிறகு, இந்தக் குலுக்கல் மீண்டும் நடக்கும் என முடிவு செய்யப்பட்டது.

Published:Updated:
UCL draw
சாம்பியன்ஸ் லீக் தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கான போட்டிகளை முடிவு செய்யும் 'டிரா' நேற்று நடந்தது. முதலில் நடந்த குலுக்கலில் குழப்பம் நிகழ்ந்ததால், சில அணிகள் புகார் எழுப்பின. அதனால், அது ரத்து செய்யப்பட்டு மீண்டும் குலுக்கல் நடந்தது. முதல் குலுக்கலில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி மான்செஸ்டர் யுனைடெட்டை எதிர்கொள்வதாக இருந்தது. லயோனல் மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் மோதுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், இப்போது அந்த கனவு கலைந்துவிட்டது!

ஐரோப்பிய கால்பந்தின் மிகப்பெரிய தொடரான சாம்பியன்ஸ் லீகின் குரூப் சுற்றுகள் கடந்த வாரம் நடந்து முடிந்தன. கலந்துகொண்ட 32 அணிகளில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பிடித்த 16 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. இதில் எந்தெந்த அணிகள் நேருக்கு நேர் மோதும் என்பதை முடிவு செய்யும் டிரா (குலுக்கல் முறை) நேற்று மாலை நடந்தது.

UCL draw
UCL draw

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுவாக ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், குரூப் பிரிவில் முதலிடம் பிடித்த 8 அணிகள், இரண்டாம் இடம் பிடித்த ஒரு அணியோடு இரண்டு முறை மோதும். இரண்டு அணிகளின் சொந்த மைதானத்திலும் ஒவ்வொரு போட்டி நடக்கும். முதலில் இரண்டாம் இடம் பிடித்த 8 அணிகளுள் ஒன்று குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும். அதன்பின் குரூப் வின்னரான அணிகளிலிருந்து ஒன்று எடுக்கப்படும். அந்த அணிகள் முதல் நாக் அவுட் சுற்றில் மோதும். ஆனால், இதில் பல விதிவிலக்குகள் இருக்கின்றன.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

லீக் சுற்றில் ஒரே குரூப்பில் இடம்பெற்ற இரு அணிகள் இந்தப் பிரிவில் மோத முடியாது. அதேபோல், ஒரே நாட்டைச் சேர்ந்த இரண்டு கிளப்களும் மோத முடியாது. உதாரணமாக குரூப் ரன்னர்களான 8 அணிகளுள் ஒன்று எடுக்கப்படும். அந்த அணி வியேரல் என்று எடுத்துக்கொள்வோம். இப்போது குரூப் வின்னர்களான 8 அணிகளுள் ஒன்றோடு இந்த அணி மோதும். அந்த எட்டு அணிகளுக்கு குலுக்கல் நடப்பதற்கு முன் அந்த விதிகள் பொருத்திப் பார்க்கப்படும். லீக் சுற்றில் வியேரலின் குரூப்பில் இடம்பெற்றிருந்த அணி மான்செஸ்டர் யுனைடெட். அந்த அணி இந்தக் குலுக்கலில் இடம்பெறாது. அதேபோல், வியேரல் ஸ்பெய்னைச் சேர்ந்த கிளப் என்பதால், ரியல் மாட்ரிட் அணியும் அந்தக் குலுக்கலில் இடம்பெறாது. ஆக, மிச்சமிருக்கும் ஆறு அணிகளே குலுக்கலில் இடம்பெறும். இந்தக் குலுக்கல் மென்பொருளின் உதவியோடு நடத்தப்படும்.

UCL draw
UCL draw
நேற்று நடந்த குலுக்கலில் இந்த மென்பொருளில் ஏதோ குளறுபடி நடந்திருக்கிறது. அதனால்தான் அத்தனை பிரச்னையும்.

முதலில் பென்ஃபிகா அணி, ரியல் மாட்ரிட் அணியோடு மோதும் என குலுக்கலில் முடிவானது. இரண்டாவது குலுக்கலில் முதலில் வியேரல் வந்தது. இப்போது விதியின்படி, மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் தவிர்த்து மற்ற 6 அணிகள் மட்டுமே குலுக்கலில் இடம்பெறவேண்டும். ஆனால், குலுக்கலில் மான்செஸ்டர் யுனைடெட் அணியின் சீட்டும் சேர்த்து 7 அணிகளின் சீட்டுகளும் இடம்பெற்றன. நேரம் எப்படி இருந்ததோ, சரியாக மான்செஸ்டர் யுனைடெட் சீட்டையே எடுத்தார், அந்த சீட்டுகளை எடுத்துக்கொண்டிருந்த முன்னாள் ஆர்செனல் வீரர் ஆண்ட்ரே அர்ஷாவின். அதனால், மற்ற 6 சீட்டுகளுள் ஒன்றை மீண்டும் எடுத்தார். இம்முறை மான்செஸ்டர் சிட்டி வந்தது.

அடுத்ததாக, அத்லெடிகோ மாட்ரிட். இந்த அணி லீக் சுற்றில் மோதிய லிவர்பூல், ஸ்பெய்ன் கிளப்பான ரியல் மாட்ரிட் ஆகிய அணிகளோடு மோத முடியாது. மான்செஸ்டர் சிட்டி ஏற்கெனவே போய்விட்டதால், மற்ற 5 அணிகள் குலுக்கலில் இடம்பெற்றிருக்கவேண்டும். ஆனால், மான்செஸ்டர் யுனைடெட் சீட்டுக்குப் பதிலாக லிவர்பூலின் சீட்டு அதில் இடம்பெற்றுவிட்டது. இது அப்போது தெரியவில்லை. அத்லெடிகோ, பேயர்ன் மூனிச்சோடு மோதுமென்று முடிவு செய்யப்பட்டது. அதன்பிறகு மொத்த குலுக்கலும் நடந்து முடிந்தது. அதில், கடைசியாக பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், மான்செஸ்டர் யுனைடெட் அணிகளே மீதமிருக்க, மெஸ்ஸியும் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் நேருக்கு நேர் மோதப்போகிறார்கள் என்று கால்பந்து ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.

ஆனால், அரங்கேறிய குளறுபடி பற்றி அணிகள் முறையீடு செய்ய, அதைப் பற்றி விசாரணை நடத்தியது ஐரோப்பிய கால்பந்து சங்கமான UEFA. அதன்பிறகு, இந்த குலுக்கல் மீண்டும் நடக்கும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் குலுக்கல் தொடங்கியது. நடந்த பிரச்னைகளுக்கு மென்பொருளில் ஏற்பட்ட பிரச்னைகள் காரணம் என்பதால், UEFA நிர்வாகிகள் இரண்டாவது குலுக்கலை நேரடியாக மேற்பார்வையிட்டனர்.

இந்தக் குலுக்கலில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு ரியல் மாட்ரிட்டும், மான்செஸ்டர் யுனைடெடுக்கு அத்லெடிகோ மாட்ரிட்டும் எதிரணிகளாக அமைந்தன. அதனால், மெஸ்ஸி vs ரொனால்டோ போட்டியைக் காண முடியும் என்ற ரசிகர்களின் கனவு கலைந்தது. சாம்பியன்ஸ் லீக் போன்ற ஒரு மிகப்பெரிய தொடரின் குலுக்கலில் பிரச்னை ஏற்பட்டு அது மீண்டும் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.