Published:Updated:

'டி புருய்னா இல்லாட்டி என்ன, நான் இருக்கேன்' - கார்டியோலாவின் கதாநாயகன் பெர்னார்டோ சில்வா!

Bernardo Silva ( AP )

கெவின் டி புருய்னா, ஃபில் ஃபோடன், இல்கே குண்டோகன், ஜாக் கிரீலிஷ், ரஹீம் ஸ்டெர்லிங் என சிட்டி அணியின் ஒவ்வொரு நட்சத்திர வீரரும் விட்டுவிட்டு காயம் காரணமாக அவதிக்குள்ளாகி இருக்க, பெர்னாண்டோ சில்வா அதற்கெல்லாம் ஈடு கட்டும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

'டி புருய்னா இல்லாட்டி என்ன, நான் இருக்கேன்' - கார்டியோலாவின் கதாநாயகன் பெர்னார்டோ சில்வா!

கெவின் டி புருய்னா, ஃபில் ஃபோடன், இல்கே குண்டோகன், ஜாக் கிரீலிஷ், ரஹீம் ஸ்டெர்லிங் என சிட்டி அணியின் ஒவ்வொரு நட்சத்திர வீரரும் விட்டுவிட்டு காயம் காரணமாக அவதிக்குள்ளாகி இருக்க, பெர்னாண்டோ சில்வா அதற்கெல்லாம் ஈடு கட்டும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

Published:Updated:
Bernardo Silva ( AP )

2021 சீசன் இங்கிலீஷ் பிரிமீயர் லீக் பட்டத்தை மான்செஸ்டர் சிட்டி வென்றிருந்தது. பல வீரர்கள் சிறப்பாக விளையாடியபோதும், இரண்டு ஆண்டுகள் முன்பு பிளேயர் ஆஃப் தி சீசன் விருது வென்றிருந்த போர்ச்சுக்கல் வீரர் பெர்னார்டோ சில்வா தன்னுடைய ஃபார்மை தவறவிடிருந்தார்.அதனால் இந்த சீசன் தொடங்கும் முன் வேறொரு அணிக்கு மாற முயற்சி செய்தார். கடைசி நேரத்தில் தன்னுடைய முடிவை மாற்றி சிட்டி அணியிலே தொடர்ந்த சில்வா தற்போது அணியின் சிறந்த வீரருக்கான விருதை தொடர்ந்து மூன்று மாதங்களாக வெல்லும் அளவிற்கு தன்னுடைய ஃபார்மை மீட்டிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கெவின் டி புருய்னா, ஃபில் ஃபோடன், இல்கே குண்டோகன், ஜாக் கிரீலிஷ், ரஹீம் ஸ்டெர்லிங், கேப்ரியல் ஜிசுஸ் என சிட்டி அணியின் ஒவ்வொரு நட்சத்திர வீரரும் விட்டுவிட்டு காயம் காரணமாக அவதிக்குள்ளாகி இருக்க, பெர்னாண்டோ சில்வா அதற்கெல்லாம் ஈடு கட்டும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

சிட்டியின் முக்கியமான அங்கமாக விளங்கிய டேவிட் சில்வா 2020-ம் ஆண்டு அணியை விட்டு வெளியேறியபோது, அவருடைய இடத்தை யாரை வைத்து எப்படி சரிகட்டுவது என யோசித்து கொண்டிருந்தோம். தற்போது பெர்னார்டோ சில்வா அந்த இடத்தை நிரப்பி கொண்டு இருக்கிறார்
பெப் கார்டியோலா
Bernardo Silva
Bernardo Silva
AP

சிட்டி அணியின் நடுகள வீரரான பெர்னார்டோ சில்வா கடந்த 12 பிரிமீயர் லீக் போட்டிகளில் 7 கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். துல்லியமாக பந்தை பாஸ் செய்வதில் கில்லாடியான அவர், கார்டியோலாவின் எதிர்பார்ப்புகளை தன் அட்டகாச ஆட்டத்தால் பூர்த்தி செய்துகொண்டிருக்கிறார். தற்போதைய கால்பந்து உலகின் சிறந்த நடுகள வீரர் என வர்ணிக்கப்படும் கெவின் டி புருய்னா தொடர்ந்து காயத்தால் அவதிப்பட, அவர் இடத்தில் இருந்து சில்வா அனைத்து வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார்.

சென்ற வாரம் நடைபெற்ற ஆஸ்டன் விலா அணிக்கெதிரான போட்டியில் சில்வா அடித்த அசாத்திய கோல் பலராலும் பாராட்டப்பட்டது. சிட்டி அணியின் பகுதியில் இருந்த பந்தை ஃபெர்னான்டினோ பாதி மைதானம் தாண்டி பாஸ் செய்ய, ஜிசுஸ் அதைப் பெற்று சில்வாவுக்கு கிராஸ் செய்தார். வானத்தில் பறந்து வந்த கிராஸை சில்வா மிக துல்லியமாக போஸ்ட்டை நோக்கி அடித்து கோலாக்கினார். அதற்கடுத்து வாட்ஃபோர்டு அணிக்கு எதிரான போட்டியிலும் பந்தை எடுத்து வந்து மிக அழகாக சுழற்றிவிட்டு,கம்பத்தின் முனையில் ஷார்பாக கோலடித்தார். இந்த கோலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

பிரிமீயர் லீகில் தற்போதைக்கு சிறந்த வீரர் சில்வா தான். அவர் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடுகளத்திலிருந்து ஆட்டத்தை டிக்டேட் செய்வதுலும், கோல் அடிப்பத்திலும் துல்லியமாக செயல்படுகிறார். இரண்டு சீசனுக்கு முன் 98 புள்ளிகளுடன் பிரிமீயர் தொடரை வென்றபோது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அதை இப்போதும் செயல்படுத்திக்கொண்டிருக்கிறார்
பெப் கார்டியோலா
Bernardo Silva
Bernardo Silva
AP

இந்த பிரிமீயர் லீக் தொடரில் தொடர்ந்து 7 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் சிட்டி அணியில் சில்வா பங்கு அளப்பரியது. "சில்வா கோல் அடிக்காவிட்டாலும் கோல் அடிக்க உதவி செய்யாவிட்டாலும் ஆட்டத்தின் வெற்றி போக்கில் முக்கிய பங்கு வகிக்கிறார்" என்று அவர் பங்களிப்பின் தாக்கம் பற்றிக் கூறியிருக்கிறார் சக சிட்டி வீரர் கேப்ரியல் ஜிசுஸ். வழக்கமாக கார்டியோலாவின் அணியில் ரொடேஷன் அளவு கடந்து இருக்கும். டி புருய்னா, ரூபன் டியாஸ் போன்ற ஒரு சில வீரர்கள் மட்டுமே முந்தைய சீசன்களில் தொடர்ந்து ஸ்டார்டிங் லெவனில் இடம்பிடிப்பார்கள். அப்படி இந்த சீசனில் சிட்டியின் அசைக்கமுடியாத அங்கமாய் விளங்கிக்கொண்டிருக்கிறார் பெர்னார்டோ சில்வா. சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஏற்கெனவே குரூப்பை வென்றுவிட்டதால், கடைசி லீக் போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது.

ரெட்புல் லெய்ப்ஸிக் அணிக்கு எதிரான அந்தப் போட்டியில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியது சிட்டி.

இதுவரை 20 கோல்கள் அடித்து,கோல் மழை பொழிந்து வரும் லிவர்பூல் அணியின் முன்கள வீரரான முகமது சலா தான் பிரிமீயர் லீக் தொடரில் சிறந்த வீரர் என்றாலும், ஒட்டுமொத்த ஆட்டத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்து விளையாடி வரும் சில்வாவும் அவருக்கு இணையாக சிறந்த வீரராக தான் கருதப்படுகிறார். 2017-ம் ஆண்டு ஏ.எஸ் மோனகோ அணியில் இருந்து சிட்டியில் இணைந்த சில்வா, தன் ஆட்டத்தின் உச்சபட்ச ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார்.