Published:Updated:

Euro 2020: பொங்கிய உணர்வுகளின் நடுவே பெல்ஜியம் கொடுத்த அசத்தல் கம்பேக்!

எரிக்சன் மைதானத்தில் விழுந்த பிறகு டென்மார்க் ரசிகர்களுக்கு மத்தியில் நடந்த இந்தப் போட்டியில் 1 கோல் பின்தங்கியிருந்த பெல்ஜியம், இரண்டாவது பாதியில் 2 கோல்கள் அடித்து வெற்றி பெற்றது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நேற்று நடந்த முதல் போட்டியில் உக்ரைன், நார்த் மெசடோனியா அணிகள் மோதின. இரண்டு அணிகளும் தங்கள் முதல் போட்டியில் தோற்றிருந்ததால், இந்த பொட்டியில் வெற்றி பெறுவது மிகவும் அவசியமானது. நடுகளத்தில் மாற்றங்களோடு களமிறங்கிய உக்ரைன் ஆரம்பத்தில் இருந்தே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தியது. அதன் விளைவாக 29-வது நிமிடத்தில் அந்த அணிக்கு கோல் கிடைத்தது. மலினோவ்ஸ்கி எடுத்த கார்னரை, கரவேவ் அழகாக ஃபிளிக் செய்ய, அதை கோலாக மாற்றினார் கேப்டன் யார்மலென்கோ.

அடுத்த 5 நிமிடங்களில் அந்த அணிக்கு இரண்டாவது கோலும் கிடைத்தது. யார்மோலென்கோ ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக ஃபினிஷ் செய்து இரண்டாவது கோலை அடித்தார் ஸ்டிரைக்கர் யரேம்சுக். நெதர்லாந்து அணிக்கெதிரான முதல் போட்டியிலும் இவர்கள் இருவருமே கோல் அடித்திருந்தனர். இன்னும் சில வாய்ப்புகளை உக்ரைன் வீரர்கள் ஏற்படுத்தியிருந்தாலும், அதை அவர்களால் கோலாக்க முடியவில்லை.

Andriy Yarmolenko
Andriy Yarmolenko
AP

இரண்டாவது பாதியில் இரண்டு மாற்றங்களோடு களமிறங்கிய நார்த் மெசடோனியா அணிக்கு 56-வது நிமிடத்தில் ஒரு பெனால்டி கிடைத்தது. கேப்டன் கோரன் பாண்டேவ் கரவேவ் ஃபவுல் செய்ததால் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. பெனால்டியை எடுத்த அலியோஸ்கி கோல்கீப்பரின் இடது புறம் அடிக்க, அதை அட்டகாசமாகத் தடுத்தார் புஷான். இருந்தாலும் ரீபௌண்டில் அதை கோலாக்கினார் அலியோஸ்கி. அதன்பிறகு உக்ரைனுக்குக் கிடைத்த பெனால்டி வாய்ப்பை அந்த அணி வீரர் மலினோவ்ஸ்கி தவறவிட்டார். இறுதியில் ஆட்டம் 2-1 என முடிவுக்கு வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Euro 2020 ஆட்டத்தின் நடுவே மயங்கி விழுந்த வீரர்... ஆட்டத்தை தொடர்ந்து நடத்திய கால்பந்து அமைப்பு!

பெல்ஜியம், டென்மார்க் அணிகள் மோதிய போட்டி டென்மார்க்கில் நடந்தது. ஃபின்லாந்து அணியுடனான போட்டியில் மாரடைப்பால் கிறிஸ்டியன் எரிக்சன் கீழே விழுந்திருந்ததால், இந்தப் போட்டி டென்மார்க் ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் மிகவும் எமோஷனலான ஒன்றாக இருந்தது. ஒட்டுமொத்த மைதானமும் எரிக்சனின் பெயர் பாட, ஆட்டத்தின் 90-வது நொடியிலேயே கோலடித்து போட்டியைத் தொடங்கியது டென்மார்க். இன்னும் ரசிகர்களின் ஆரவாரம் அதிகரிக்க பரபரப்பு கூடிக்கொண்டே இருந்தது. எரிக்சன் 10-ம் நம்பர் ஜெர்சி அணிவதால், 10-வது நிமிடம் ஆட்டம் நிறுத்தப்பட்டு ரசிகர்களும், இரு அணி வீரர்களும் அவர் மீண்டு வருவதற்கு கரகோஷம் எழுப்பினர். இப்படி எமோஷன்களுக்கு நடுவிலேயே நடந்துகொண்டிருந்தது இந்த ஆட்டம்.

Kevin de Bruyne
Kevin de Bruyne
AP

முதல் பாதியில் எதிர்பாராத பின்னடைவைச் சந்தித்த உலகின் நம்பர் 1 அணியான பெல்ஜியம், இரண்டாவது பாதியில் ஆட்டத்தை மாற்றியது. கெவின் டி ப்ருய்னா, ஈடன் ஹசார்ட் ஆகியோர் களமிறங்கியதும் பல கோல் வாய்ப்புகள் உருவானது. 55-வது நிமிடத்தில் டி ப்ருய்னா பெனால்டி ஏரியாவுக்குள் அனுப்பிய பாஸை தோர்கன் ஹசார்ட் கோலாக்கி ஆட்டத்தை சமன்படுத்தினார். 70-வது நிமிடம், லுகாகு வலது விங்கில் அட்டகாசமாக பந்தை கன்ட்ரோல் செய்து பாக்சுக்கு அனுப்பிய பந்தை தன் அட்டகாசமான டச் மூலம் தன் அண்ணன் ஈடனுக்குக் கொடுத்தார் ரோர்கன் ஹசார்ட். அதை இடது பக்கமிருந்த வந்த டி ப்ருய்னாவுக்கு ஹசார்ட் செட் செய்துகொடுக்க, அவர் அட்டகாசமாக ஃபினிஷ் செய்தார். பெல்ஜியம் 2, டென்மார்க் 1. கடைசி கட்டத்தில் டென்மார்க் பல வாய்ப்புகளை உருவாக்கியும் அவர்களால் கோலடிக்க முடியவில்லை. இறுதியில் 2-1 என வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது பெல்ஜியம்.

2 அசிஸ்ட், ஒரு பெனால்ட்டி மிஸ்... சொதப்பல் + கலக்கல் கேரத் பேல் #Euro2020

நள்ளிரவு 12.30 மணிக்கு அயாக்ஸின் யோஹன் கிரயூஃப் அரேனாவில் தொடங்கிய போட்டியில் நெதர்லாந்து, ஆஸ்திரியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் அலாபா பாக்சுக்குள் செய்த ஃபவுலால் நெதர்லாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை கோலாக்கி அந்த அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார் மெம்ஃபிஸ் டிபாய். ஆரம்பத்திலேயே கோல் அடிக்கப்பட்டிருந்தாலும், முதல் பாதியில் இரண்டு அணிகளுமே அதன்பிறகு கோல் நோக்கி எந்த ஷாட்டும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில், டிபாய் செய்த ஒரு அமர்க்களமான மூவால் பெனால்டி ஏரியாவுக்குள் பந்தோடு நுழைந்தார் மாலன். வலது விங்கில் இருந்து புயல் வேகத்தில் வந்த டம்ஃப்ரீஸுக்கு அதை அவர் பாஸ் செய்ய, இந்தத் தொடரில் தன் இரண்டாவது கோலை அடித்தார் டம்ஃப்ரீஸ்.

Denzel Dumfries
Denzel Dumfries
AP

அலாபாவை டிஃபன்ஸின் நடுவே ஆடவைத்ததால் அவரது அட்டாகிங் திறனை ஆஸ்திரியாவால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இறுதியில் 2-0 என அந்த அணி தோல்வியடைந்தது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது நெதர்லாந்து.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு