Published:Updated:

ஒரே அணியிடம் ஓயாமல் தோற்கும் பேயர்ன் மூனிச்! FA கோப்பையில் இருந்து வெளியேறிய ஆர்செனல்!

Bayern Munich vs Borussia Monchengladbach
News
Bayern Munich vs Borussia Monchengladbach ( AP )

உலகின் அனைத்து கிளப்களையும் பந்தாடிவிட்டு, பொருஷியா மொன்சன் கிளாட்பேச் அணியிடம் தோற்பது பேயர்ன் மூனிச் அணியின் வாடிக்கை. அதை இந்த வாரமும் தொடர்ந்திருக்கிறது பேயர்ன் மூனிச். மொன்சன்கிளாட்பேச் அணியுடனான புண்டஸ்லிகா போட்டியில் 1-2 என தோல்வியடைந்திருக்கிறது.

அலயன்ஸ் அரீனாவில் நடந்த இந்தப் போட்டியில் பல முன்னணி வீரர்கள் இல்லாமல் களமிறங்கியது பேயர்ன் மூனிச். மார்சல் சபிட்சர் லெஃப்ட் பேக் பொசிஷனில் ஆடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருந்தாலும் சிறப்பான முறையிலேயே போட்டியைத் தொடங்கியது அந்த அணி. வெறித்தனமாக ஃபார்மில் இருக்கும் ராபர்ட் லெவண்டோஸ்கி ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். 18-வது நிமிடத்தில் அவர் கோல் கணக்கைத் தொடங்கிவைத்திருந்தாலும், மொன்சன்கிளாட்பேச் அசத்தலான கம்பேக்கை அரங்கேற்றியது.

27-வது நிமிடத்தில் நடுகள வீரர் ஃப்ளோரியன் நௌஹாஸ் கோலடித்து ஆட்டத்தை சமனாக்கினார். அதே உத்வேகத்தோடு அடுத்த நான்காவது நிமிடத்திலேயே இன்னொரு கோலையும் அடித்தது அந்த அணி. லூகா நெட்ஸ் ஏற்படுத்திக்கொடுத்த வாய்ப்பை, விங்பேக் ஸ்டீஃபன் லெய்னர் அசத்தலாக கோலாக்கினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளாலும் அதற்கு மேல் கோலடிக்க முடியவில்லை. பெஞ்சில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இல்லாமல் போனதால், ஜூலியன் நகில்ஸ்மேனால் தாக்கம் ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் எதுவும் செய்யமுடியவில்லை. ஆனால், பேயர்ன் அணியின் இந்தத் தோல்விக்கு முன்னணி வீரர்கள் இல்லாததை காரணமாகச் சொல்லிவிட முடியாது. மொன்சன்கிளாட்பேச் அணிக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து சொதப்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக ஆடிய கடைசி 6 புண்டஸ்லிகா போட்டிகளில் மூன்றில் பேயர்ன் தோற்றிருக்கிறது!

Bayern Munich vs Borussia Monchengladbach
Bayern Munich vs Borussia Monchengladbach
AP

இந்தப் போட்டியில் தோற்றிருந்தாலும், புள்ளிப்பட்டியலில் அந்த அணியின் முதலிடத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 18 போட்டிகளில் 43 புள்ளிகள் பெற்றிருக்கும் அந்த அணி, பொருஷியா டார்ட்மண்ட் அணியை விட 6 புள்ளிகள் அதிகம் பெற்றிருக்கிறது. எய்ன்டிராக்ட் ஃபிராங்ஃபர்ட் அணிக்கெதிராக விளையாடிய டார்ட்மண்ட் 3-2 என வெற்றி பெற்றது. 70 நிமிடம் வரை 2 கோல்கள் பின்தங்கியிருந்தது அந்த அணி. அதன்பிறகு 3 கோல்கள் அடித்து 3 புள்ளிகளைக் கைப்பற்றியது.

சீரி-ஆ தொடரில் ரோமாவின் தோல்விகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. யுவன்டஸ் அணியுடனான போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் தோற்றிருக்கிறது அந்த அணி. ஒருகட்டத்தில் 3-1 என முன்னிலை பெற்றிருந்தது. 70-வது நிமிடத்துக்கு மேல் யுவன்டஸ் அட்டாக்கர்கள் பிரித்து மேய, 8 நிமிட இடைவெளியில் 3 கோல்கள் வாங்கி தோற்றது அந்த அணி. ரோமாவின் பிரதான கோல்ஸ்கோரர் டேமி ஆபிரஹாம் இந்தப் போட்டியிலும் கோலடித்தார். 11-வது நிமிடத்தில் அவர்தான் ஆட்டத்தின் முதல் கோலை அடித்தார். 18-வது நிமிடத்தில் டிபாலா போட்டியை சமன் செய்ய, முதல் பாதி 1-1 என முடிந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இரண்டாவது பாதி தொடங்கிய முதல் 8 நிமிடங்களில் 2 கோல்கள் அடித்து மிரட்டியது ரோமா. மிகிதார்யன், பெல்லகிரினி இருவரும் கோலடித்தனர். ஆனால், 70-77 என அதே 8 நிமிட இடைவெளியில் லோகடெல்லி, குலுசெவ்ஸ்கி, டி ஷிக்லியோ ஆகியோரின் கோல்கள் அந்த அணியைப் பதம்பார்த்துவிட்டன. 21 போட்டிகளில் 32 புள்ளிகளுடன், ஏழாவது இடத்தில் இருக்கிறது ரோமா.

Roma vs Juventus
Roma vs Juventus
AP

லீக் ஒன் தொடரின் முக்கிய போட்டியில் 1-1 என லயான் அணியோடு டிரா செய்தது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன். நெய்மர், மெஸ்ஸி இருவரும் இல்லாமல் களமிறங்கிய அந்த அணி, ஏழாவது நிமிடத்திலேயே கோல் வாங்கியது. லூகாஸ் பகேடாவின் கோல், லயானுக்கு வெற்றியைப் பரிசளித்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 76-வது நிமிடத்தில் பி.எஸ்.ஜி டிஃபண்டர் டிலோ கேரர் கோலடித்து அந்த அணிக்கு 1 புள்ளியைப் பெற்றுக்கொடுத்தார்.

FA கோப்பை போட்டிகளில் முன்னணி அணிகள் தங்கள் போட்டிகளில் வெற்றி பெற்றன. மான்செஸ்டர் சிட்டி 4-1 என ஸ்விண்டன் அணியை வீழ்த்தியது. அதே ஸ்கோர் வித்யாசத்தில் வாட்ஃபோர்டை லெஸ்டரும், போர்ட் வேல் அணியை பிரென்ட்ஃபோர்டும், ஷ்ரூஸ்பெரியை லிவர்பூலும் வீழ்த்தினர். 5-1 என செஸ்டர்ஃபீல்டை வீழ்த்தியது செல்சீ. வெஸ்ட் ஹாம் யுனைடட், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர், நார்விச் சிட்டி, வோல்வர்ஹாம்ப்டன் வாண்டரர்ஸ், சௌதாம்ப்டன், எவர்டன், பிரைட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான், கிறிஸ்டல் பேலஸ் என பிரீமியர் லீக் அணிகள் தங்கள் போட்டிகளில் வெற்றி பெற்றன. நியூகாசிள் யுனைடட் 0-1 என லீக் 1 அணியான கேம்ப்ரிட்ஜிடம் தோற்றது. அதைவிடப் பெரிய அதிர்ச்சியாக, சாம்பியன்ஷிப் அணியான நாட்டிங்ஹம் ஃபாரஸ்டிடம் 0-1 எனத் தோற்றது ஆர்செனல். முன்னணி வீரர்கள் பலர் பிளேயிங் லெவனில் இருந்தபோதும் அவர்களால் கோலடிக்க முடியவில்லை!