Published:Updated:

யூரோப்பா லீகுக்குத் தள்ளப்பட்ட பார்சிலோனா... சாம்பியன்ஸ் லீகில் இருந்து வெளியேற்றம்!

FC Barcelona ( AP )

ஜாவி ஏதாவது மேஜிக் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட, அப்படி எதுவும் நிகழவில்லை. போட்டி ஆரம்பித்த அரை மணி நேரத்திலேயே ஜோர்டி ஆல்பா காயத்தால் வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களிலேயே ராபர்ட் லெவண்டோஸ்கி அசிஸ்ட் செய்ய, தாமஸ் முல்லர் கோலடித்தார்.

யூரோப்பா லீகுக்குத் தள்ளப்பட்ட பார்சிலோனா... சாம்பியன்ஸ் லீகில் இருந்து வெளியேற்றம்!

ஜாவி ஏதாவது மேஜிக் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட, அப்படி எதுவும் நிகழவில்லை. போட்டி ஆரம்பித்த அரை மணி நேரத்திலேயே ஜோர்டி ஆல்பா காயத்தால் வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களிலேயே ராபர்ட் லெவண்டோஸ்கி அசிஸ்ட் செய்ய, தாமஸ் முல்லர் கோலடித்தார்.

Published:Updated:
FC Barcelona ( AP )

இரண்டு ஆண்டுகள் முன்புவரை கொடிகட்டிப் பறந்த அணி பார்சிலோனா. ஸ்பெய்னின் லா லிகா தொடராகட்டும், ஐரோப்பாவின் டாப் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் தொடராகட்டும், இரண்டிலுமே தன்னிகரற்ற அணியாக விளங்கியது. ஆனால், இந்த இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து தடுமாறுகிறது. கடந்த ஆண்டு மெஸ்ஸியாவது ஓரளவு காப்பாற்றினார். இந்த சீசன் அவரும் இல்லாததால், அந்த அணியால் எதுவும் செய்ய முடியவில்லை. சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து தோற்றது. அதனால், பயிற்சியாளர் ரொனால்ட் கூமன் மாற்றப்பட்டு, கிளப் ஜாம்பவான் ஜாவி அந்த இடத்தை நிரப்பினார்.

அவர் வந்த பிறகு ஓரளவு தாக்குப்பிடித்துக்கொண்டிருக்கும் பார்சிலோனா, சாம்பியன்ஸ் லீக் தொடரில் ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது. பென்ஃபிகா அணியுடனான இரண்டு போட்டிகளிலும் சேர்த்தே ஒரு புள்ளி மட்டும் எடுத்ததால், கடைசி போட்டியில் வெற்றி பெற்றே ஆகவேண்டிய சூழ்நிலை. ஆனால், அந்தப் போட்டியோ பலமான பேயர்ன் மூனிச் அணிக்கெதிராக, அலயன்ஸ் அரீனாவில் நடைபெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஜாவி ஏதாவது மேஜிக் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட, அப்படி எதுவுமே நிகழவில்லை. போட்டி ஆரம்பித்த அரை மணி நேரத்திலேயே ஜோர்டி ஆல்பா காயத்தால் வெளியேறினார். அடுத்த சில நிமிடங்களிலேயே ராபர்ட் லெவண்டோஸ்கி அசிஸ்ட் செய்ய, தாமஸ் முல்லர் கோலடித்தார். இரண்டாவது பாதி முடியும் தறுவாயில் லெராய் சனே இன்னொரு கோலடித்து முன்னிலையை அதிகப்படுத்தினார். கிங்ஸ்லி கோமன் கொடுத்த பாஸை சிறப்பாகக் கடத்தி வந்து கோலடித்தார் அவர். முதல் பாதி 2-0 என முடிவுக்கு வந்தது.

Xavi
Xavi
AP

கோலடித்தே ஆகவேண்டிய கட்டாயத்தால் இரண்டாம் பாதியில் ஒரு மாற்றம் செய்தார் ஜாவி. செர்ஜினோ டெஸ்ட் நீக்கப்பட்டு, நிகோ கொன்சாலஸ் களமிறக்கப்பட்டார். ஆனால், யாராலும் எந்தத் தாக்கமும் ஏற்படுத்த முடியவில்லை. மாறாக, இளம் வீரர் ஜமால் மூசியாலா கோலடித்து ஸ்கோரை 3-0 என மாற்றினார். அவரது கோலுக்கு அசிஸ்ட் செய்தார் மற்றொரு இளம் வீரர் அல்ஃபோன்சா டேவிஸ். அதன்பிறகு ஜாவி சிலபல மாற்றங்கள் செய்தும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. ஆட்டம் 3-0 என முடிவுக்கு வந்தது.

இந்த வெற்றியின் மூலம் 18 புள்ளிகளுடன் இந்தப் பிரிவில் முதலிடம் பிடித்தது பேயர்ன் மூனிச். விளையாடிய 6 போட்டிகளிலும் வென்று அசத்தியது அந்த அணி. மற்றொரு போட்டியில் டைனமோ கியவ் அணியை 2-0 என வீழ்த்திய பென்ஃபிகா, 8 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்தது. பார்சிலோனா 7 புள்ளிகளுடன் மூன்றாவது இடமே பிடித்தது. டைனமோ கியவ் அணி 1 புள்ளி மட்டுமே பெற்றது.

FC Barcelona
FC Barcelona
AP

சாம்பியன்ஸ் லீக் குரூப்பில் மூன்றாவது இடம் பிடிக்கும் அணிகள், யூரோப்பா லீக் தொடரின் முதல் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும். அதன் அடிப்படையில் பார்சிலோனா அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. இதற்கு முன்பு 2004-05 சீசனில் அந்த அணி யூரோப்பா லீக் தொடரில் விளையாடியது. அதன்பிறகு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் சாம்பியன்ஸ் லீகில் கோலோச்சிய அந்த அணிக்கு இது பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

B பிரிவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அத்லெடிகோ மாட்ரிட் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. போர்டோ அணியுடனான போட்டியில் 3-1 என வென்று 7 புள்ளிகள் பெற்றது அந்த அணி. லிவர்பூல் அணியுடனான போட்டியில் 2-1 என தோற்ற மிலனும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து அத்லெடிகோவை அடுத்த சுற்றுக்கு அனுப்பி வைத்தது. G பிரிவில் RB சால்ஸ்பர்க் அணியிடம் தோற்று வழக்கம்போல் யூரோப்பா லீகுக்கு நடையைக் கட்டியது செவியா. அந்தப் போட்டியை வென்றதன் மூலம் சால்ஸ்பர்க் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது.

அடலான்டா, வியேரல் அணிகள் மோதும் போட்டி மட்டும் இன்னும் நடக்கவேண்டியிருக்கிறது. அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். டிரா ஆனால் வியேரல் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும்.

அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அணிகள்

குரூப் A - மான்செஸ்டர் சிட்டி, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன்
குரூப் B - லிவர்பூல், அத்லெடிகோ மாட்ரிட்
குரூப் C - அயாக்ஸ், ஸ்போர்டிங் CP
குரூப் D - ரியல் மாட்ரிட், இன்டர் மிலன்
குரூப் E - பேயர்ன் மூனிச், பென்ஃபிகா
குரூப் F - மான்செஸ்டர் யுனைடட், வியேரல்/அடலான்டா
குரூப் G - லீல், RB சால்ஸ்பர்க்
குரூப் H - யுவன்டஸ், செல்சீ