Published:Updated:

Football: ஐ.எஸ்.எல் அணிகளின் வரவு; உயிர்பெறும் இந்தியாவின் நூற்றாண்டு கடந்த டுராண்ட் கோப்பை!

டுராண்ட் கோப்பை - Durand Cup

2000-ம் ஆண்டிற்குப் பிறகு 2005-ல் ஆர்மி XI, 2016-ல் ஆர்மி கிரீன் என இரண்டு முறை மட்டுமே இந்திய ஆயுதப்படை அணிகள் கோப்பையை வென்றன. இப்படி இருக்க டுராண்ட் கோப்பையின் முக்கியத்துவம் சமீகாலத்தில் குறைந்துபோனது.

Football: ஐ.எஸ்.எல் அணிகளின் வரவு; உயிர்பெறும் இந்தியாவின் நூற்றாண்டு கடந்த டுராண்ட் கோப்பை!

2000-ம் ஆண்டிற்குப் பிறகு 2005-ல் ஆர்மி XI, 2016-ல் ஆர்மி கிரீன் என இரண்டு முறை மட்டுமே இந்திய ஆயுதப்படை அணிகள் கோப்பையை வென்றன. இப்படி இருக்க டுராண்ட் கோப்பையின் முக்கியத்துவம் சமீகாலத்தில் குறைந்துபோனது.

Published:Updated:
டுராண்ட் கோப்பை - Durand Cup
டுராண்ட் கோப்பை, சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் இந்தியாவின் மிகமுக்கிய கால்பந்துத் தொடர். ஆண்டுதோறும் நடத்தப்பட்டுவரும் இந்தக் கால்பந்துத் தொடர் இந்தியக் கால்பந்து வளர்ச்சிக்கு மிக முக்கியப் பங்காற்றிவருகிறது.

டுராண்ட் கோப்பை 1888-ம் ஆண்டு மோர்டிமர் டுராண்டால் என்ற பிரிட்டிஷ்காரரால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் பிரிட்டிஷ் இந்திய இராணுவம், மாகாண எல்லை-பாதுகாப்புப் படைப்பிரிவுகள் மற்றும் தன்னார்வப் படையணி ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தப் போட்டிகளை விளையாடினர். இரண்டாம் உலகப் போர் முடிந்தபிறகு பிரிட்டிஷ் வீரர்கள் இந்தியாவை விட்டு வெளியேறவே, போட்டிகளைத் தொடர்ந்து நடத்த சிவிலியன் அணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

Durand Cup
Durand Cup

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுதந்திரத்திற்குப் பின்:

1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததைத் தொடர்ந்து, டுராண்ட் கோப்பையை பாகிஸ்தானுக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் டுராண்ட் கோப்பை இந்திய கால்பந்தின் ஒரு அங்கமாக இருப்பதை உறுதிசெய்தது இந்திய அரசு. இதற்கென்று ஒரு சங்கம் பதிவுசெய்யப்பட்டு டுராண்ட் கால்பந்து சொசைட்டி இத்தொடரை நடத்துகிறது. இதற்கு இந்திய தலைமை பாதுகாப்புப் படைத் தலைவர் தலைமை தாங்கவே நாட்டின் முப்படைத் தலைவர்கள் இதில் முக்கியப் பொறுப்பு வகிக்கிறார்கள். ஈஸ்ட் பெங்கால் கிளப் மற்றும் மோஹுன் பாகன் ஏசி அணிகள் டுராண்ட் கோப்பை வரலாற்றில் மிக முக்கிய அணிகள். இந்த இரண்டு அணிகளும் சேர்ந்து சுமார் 32 முறை கோப்பைகளை வென்றிருக்கின்றன. இவை தவிர ஹைதராபாத் போலீஸ் மற்றும் மெட்ராஸ் ரெஜிமென்டல் சென்டரின் உயர்மட்ட அணிகள் சிறிது காலம் ஆதிக்கம் செலுத்தவே 1997-ம் ஆண்டில் கொச்சின் அணி முதல்முறையாக கோப்பையைத் தூக்கியது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

2000-ம் ஆண்டிற்குப் பிறகு 2005-ல் ஆர்மி XI, 2016-ல் ஆர்மி கிரீன் என இரண்டு முறை மட்டுமே இந்திய ஆயுதப்படை அணிகள் கோப்பையை வென்றன. இப்படி இருக்க டூராண்ட் கோப்பையின் முக்கியத்துவம் சமீகாலத்தில் குறைந்துபோனது. இந்திய ஆயுதப்படைகள் இத்தொடரை பல தசாப்தங்களுக்கு உயிர்ப்புடன் வைத்திருந்தன. ஆனால் எந்தவொரு குறிப்பிடத்தக்க காரணமும் இல்லாமல் போட்டி காலண்டரில் இருந்து இத்தொடர் கடந்த பத்தாண்டுகளில் பல முறை நீக்கப்பட்டன. உதாரணத்திற்கு 2015, 2017 மற்றும் 2018 ஆகிய மூன்று ஆண்டுகள்.

Durand Cup
Durand Cup

2019-ம் ஆண்டில், இத்தொடரை ஆயுதப்படை மற்றும் மேற்கு வங்க அரசு கூட்டாக ஏற்பாடு செய்தன. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக 2020-ம் ஆண்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. பின்னர் 2021-2025 ஆண்டுகளில் இத்தொடரை நடத்த ஆயுதப் படைகள் மற்றும் மேற்குவங்க அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொண்டன. தொடரின் பழைய முக்கியத்துவம் குறைந்ததால் ஐ.எஸ்.எல், AFC , AFC சாம்பியன்ஸ் லீக் ஆகிய தொடர்களில் பங்குபெறும் அணிகள் இத்தொடருக்கு தங்களின் ரிசர்வ் அணிகளை மட்டுமே அனுப்பின. இதனால் 130 ஆண்டு கால டுராண்ட் கோப்பையின் இழந்த பாரம்பரியத்தை மீட்டெடுக்க அமைப்பாளர்கள் முயற்சி எடுத்தனர். அதன்படி பெரும்பாலான கிளப்புகள் தங்களின் முதன்மை அணிகளைக் களமிறக்க முடிவு செய்தன.

புதிய அத்தியாயம்

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் வழிகாட்டுதலின்படி ஒரு முழு ஆண்டுக்கான அட்டவணைகளை வெளியிட்டது ‍AIFF. அதன் முதல் கோப்பையாக டுராண்ட் கோப்பையை நடத்திய பிறகே ஐ.எஸ்.எல் மற்றும் ஹீரோ சூப்பர் கோப்பையை நடத்த முடிவு செய்யப்பட்டது. 2022-ம் ஆண்டிற்கான டுராண்ட் கோப்பை மேற்கு வங்கம், அசாம் மற்றும் மணிப்பூரில் ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 24 வரை நடைபெற உள்ளன.

இவ்வாண்டுத் தொடரில் ஐ.எஸ்.எல் அணிகள் அனைத்தும் பங்கேற்க இருக்கின்றன. ஐ.எஸ்.எல் கோப்பைக்கு முன் வீரர்களை மேம்படுத்தவும், வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவின் தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்வதற்கும் இத்தொடர் பேருதவியாய் இருக்கும். இதனால் ரசிகர்களின் பார்வை டுராண்ட் கோப்பையின் மீது நிச்சயம் திரும்பும். டுராண்ட் கோப்பையின் இழந்த பெருமையை மீட்டெடுப்பது அந்த ஒற்றைத் தொடருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியக் கால்பந்திற்கும் ஒரு சிறந்த முன்னேற்றப் பாதைக்கு வித்திடும்.

- உ.கற்பக ஐயப்பன்