Election bannerElection banner
Published:Updated:

கால்பந்து உலகின் ரட்சகன்... மரடோனா மரணம்!

மரடோனா
மரடோனா

இங்கிலாந்துக்கு எதிரானக் காலிறுதிப் போட்டியில் மரடோனா அடித்த கோல் இன்றுவரை கால்பந்து வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த கோல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.

அர்ஜென்டினாவின் முன்னாள் கால்பந்து வீரரும், உலகம் முழுக்க பல கோடி ரசிகர்களைக் கொண்டவருமான டியாகோ மரடோனா சற்று நேரத்துக்கு முன்னர் காலமானார். அவருக்கு வயது 60.

பிரேசிலின் பீலேவுக்கு அடுத்தபடியாக கால்பந்து உலகின் சூப்பர்ஸ்டாராக போற்றிப்புகழப்பட்டவர் மரடோனா. 1986-ல் நடைபெற்ற கால்பந்து உலகக்கோப்பையை அர்ஜென்டினா வென்றதற்கான மிக முக்கியக் காரணம் மரடோனா. அர்ஜென்டினாவின் கேப்டனாக இருந்து மிகச்சிறப்பாக அணியை வழிநடத்த, அதுவரை கால்பந்து உலகம் பார்க்காதவகையில் கோல்கள் அடித்து அணியை சாம்பியனாக்கினார் மரடோனா. இந்தத் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரானக் காலிறுதிப் போட்டியில் மரடோனா அடித்த கோல் இன்றுவரை கால்பந்து வரலாற்றில் அடிக்கப்பட்ட மிகச்சிறந்த கோல்களில் ஒன்றாகக் குறிப்பிடப்படுகிறது.

1990 உலகக்கோப்பையிலும் அர்ஜென்டினாவை இறுதிப்போட்டிவரை அழைத்துப்போனார் மரடோனா.

கால்பந்து லீக் போட்டிகளிலும் அவர் தலைமையேற்று விளையாடிய நப்போலி அணிக்காக பல்வேறு கோப்பைகளைப் பெற்றுத்தந்திருக்கிறார் மரடோனா. 1991 காலகட்டத்தில் கொக்கெய்ன் போதைப்பொருளுக்கு அடிமையாகி கால்பந்து கரியரைத் தொலைத்தார் மரடோனா.

மரடோனா
மரடோனா

1994 உலகக்கோப்பைக்காக அமெரிக்காவில் போயிறங்கிய அர்ஜென்டினா அணியில் மரடோனா, போதைப்பொருள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட, உலகக்கோப்பையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த உலகக்கோப்பை தொடர்தான் மரடோனா அர்ஜென்டினாவுக்காக கடைசியாக விளையாடிய தொடர்.

மெஸ்சி - மரடோனா!
மெஸ்சி - மரடோனா!

தொடர்ந்து உடல்நலப்பிரச்னைகளோடு போராடியவர் 2010-ல் அர்ஜென்டினாவின் பயிற்சியாளராக உலகக்கோப்பை அரங்குக்குள் மீண்டும் வந்தார். ஆனால், அர்ஜென்டினாவால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

கடந்த நவம்பர் 3-ம் தேதி மூளையில் ரத்தக் கசிவு கண்டறியப்பட்டு மரடோனாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த சூழலில்தான் தற்போது மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார் மரடோனா.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு