Published:Updated:

ISL 2021-22: வலிமையான ஹைதரபாத்திற்கு எதிரான போட்டியை டிரா செய்த சென்னையின் FC!

Sajid ( ISL )

மிர்லான் முர்சேவ், வால்ஸ்கிஸ், அனிருத் தாப்பா, நிந்தாய் எனச் சென்னை பக்கம் பட்டையைக் கிளப்ப ஹைதராபாத் பக்கம் எடியூ கார்சியா, சிவாரியோ, சனா ஆகியோர் அசத்தினர்.

ISL 2021-22: வலிமையான ஹைதரபாத்திற்கு எதிரான போட்டியை டிரா செய்த சென்னையின் FC!

மிர்லான் முர்சேவ், வால்ஸ்கிஸ், அனிருத் தாப்பா, நிந்தாய் எனச் சென்னை பக்கம் பட்டையைக் கிளப்ப ஹைதராபாத் பக்கம் எடியூ கார்சியா, சிவாரியோ, சனா ஆகியோர் அசத்தினர்.

Published:Updated:
Sajid ( ISL )
இந்தியன் சூப்பர் லீக் சீசன் 8 இன் நேற்றைய போட்டியில் சென்னையின் FC அணியும் ஹைதராபாத் FC அணியும் மோதியிருந்தன. விறுவிறுப்பாக சென்ற இந்தப் போட்டி 1-1 என டிரா ஆகியிருக்கிறது.

இந்த சீசனை மிகச்சிறப்பாக தொடங்கியிருந்த சென்னை அணி அதன்பிறகு வரிசையாகத் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருந்தது. ஜாம்ஷெட்பூருக்கு எதிரான ஆட்டத்தை வென்று மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்பியிருந்தது. ஆனால், அந்த வெற்றியை தக்கவைத்துக் கொள்ளவில்லை. கோவாவிற்கு எதிரான கடந்த போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்திருந்தது. இதற்கு மேலும் தோற்றால் அடுத்தச்சுற்று வாய்ப்பே கேள்விக்குறியாகும் என்ற சூழலில் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று களமிறங்கியது.

ஹைதராபாத் அணி தொடர்ந்து 8 போட்டிகளாக தோல்வியையே தழுவாத அணியாக இருந்தது. கடந்த போட்டியில் கேரளாவிற்கு எதிராக தோல்வியடைந்து இந்த ரெக்கார்ட் உடைபட்டிருந்தது. இந்நிலையில் சென்னையின் FC க்கு எதிரான போட்டியை வென்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி புள்ளிப்பட்டியலில் மேல் நோக்கி பயணிக்க வேண்டும் என்பதே ஹைதராபாத்தின் எண்ணமாக இருந்தது.

CFC v HFC
CFC v HFC
indiansuperleague.com

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை அணி வழக்கம்போல 3-5-2 என்ற ஃபார்மேஷனோடும் ஹைதராபாத் அணி 4-2-3-1 என்ற ஃபார்மேஷனோடும் களமிறங்கியிருந்தன. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இரண்டு அணி வீரர்களும் வேகமாக அட்டாக்கைத் தொடங்கியிருந்தனர். அட்டாக் செய்வதிலும் கோலுக்கு முயல்வதிலும் சென்னை அணி சுணக்கமாகவே செயல்பட்டு வந்திருக்கிறது. இந்த சீசனில் இதுவரை மிகக்குறைந்த எண்ணிக்கையிலான கோல்களை அடித்திருக்கும் அணியாக சென்னை அணியே இருக்கிறது. டிஃபன்ஸில் செலுத்தும் கவனத்தை அட்டாக்கிலும் செலுத்தாமல் இருந்ததே சென்னையின் பலவீனமாக இருந்தது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் சென்னை அணி கொஞ்சம் கூடுதல் உத்வேத்துடனே அட்டாக் செய்திருந்தது. மிர்லான் முர்சேவ், வால்ஸ்கிஸ், அனிருத் தாப்பா, நிந்தாய் எனச் சென்னை பக்கம் பட்டையைக் கிளப்ப ஹைதராபாத் பக்கம் எடியூ கார்சியா, சிவாரியோ, சனா ஆகியோர் அசத்தினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே சென்னை அணிக்கு ஒரு கோல் வாய்ப்பு கிடைத்தது. 11 வது நிமிடத்தில் நிந்தாய் ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பை பெற்றுக் கொடுக்க, 12 வது நிமிடத்தில் சென்னை அணி தனது முதல் கோலை பதிவு செய்தது. அனிருத் தாப்பா பந்தை அடிக்க அதை சஜித் லாகவமாக தலையால் முட்டி கோலாக்கியிருந்தார். சென்னை 1-0 என முன்னிலை பெற்றது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த கோலுக்குப் பிறகு முதல் பாதியின் கடைசி வரை இரண்டு அணிகளும் வேறு கோல்களை அடிக்கவே இல்லை. ஆனால், கூடுதல் நேரமாக நான்கு நிமிடங்கள் கொடுக்கப்பட அதில் கடைசி 10 விநாடிகளில் ஹைதராபாத் ஒரு கோலை அடித்து அசத்தியது. இடது பக்கத்திலிருந்து ஆகாஷ் கொடுத்த க்ராஸை ஆஷிஸ் ராய் வாங்கி பாக்ஸுக்குள் அடிக்க உள்ளே இருந்த சிவாரியோ அதை தலையால் முட்டி கோலாக்கினார். சரியாக முதல் பாதி முடிகிற சமயத்தில் 1-1 எனப் போட்டி சமநிலைக்கு வந்தது.

இரண்டாம் பாதி தொடங்கியது. இரண்டாம் பாதியிலும் இரண்டு அணிகளும் பயங்கரமாக கோலுக்கு முயன்றிருந்தனர். ஆனால், இரண்டு அணிக்குமே கோல்கள் கிடைத்திருக்கவில்லை. இதனால் ஆட்ட நேர முடிவில் 1-1 என போட்டி டிரா ஆனது. 11 போட்டிகளில் ஆடியிருக்கும் சென்னை அணி 4 போட்டிகளில் மட்டுமே வென்றிருக்கிறது. 4 போட்டிகளில் தோற்று 3 போட்டிகளை டிரா செய்திருக்கிறது.

15 புள்ளிகளோடு புள்ளிப்பட்டியலில் 6 வது இடத்தில் இருக்கிறது. தொடர்ச்சியாக தோல்விகளையும் டிராவையும் மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறது. ப்ளே ஆஃப்ஸுக்கு தகுதிப்பெற இது மட்டுமே போதாது. வெற்றிகளையும் பெற வேண்டும்.
சிவாரியோ
சிவாரியோ
ISL

"போட்டியை சிறப்பாக தொடங்கினோம். முதல் பாதியின் கடைசி 10 நிமிடங்களில் சொதப்பிவிட்டோம். ஆட்டத்தின் கடைசி 20 நிமிடங்களில் நன்றாக ஆடினோம் இருந்தாலும் இன்னும் சிறப்பாக ஆடியிருக்கலாம்" என சென்னையின் பயிற்சியாளர் பாசிட்டிவ்வாக பேசிவிட்டு செல்ல, ஹைதராபாத்தின் பயிற்சியாளரான மார்கஸ் அனலாக பொறிந்து தள்ளிவிட்டார்.

"ஏமாற்றமாக இருக்கிறது. வீரர்களின் மீது கடும்கோபத்தில் இருக்கிறேன். நானும் தோல்விக்குப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இரண்டாம் பாதியில் அட்டாக் செய்து கொண்டே இருக்கும் கடைசி 10 நிமிடங்களில் சோர்வடைந்துவிட்டார்கள். இதுவே போதும் என மகிழ்ச்சியடைந்துவிட்டார்கள் போல. இந்திய வீரர்களின் இந்த மனநிலை பின்னடைவையே கொடுக்கும். சில வெளிநாட்டு வீரர்களும் இதே மனநிலையோடு இருக்கிறார்கள். இதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க முடியாது. பலவீனமான மனநிலையைக் கொண்டிருந்தால் வெல்வது கடினம்."
பயிற்சியாளர் மார்கஸ்
 மார்கஸ்
மார்கஸ்
ISL

எனக் கறாராக பேசியிருந்தார். ஹைதராபாத் அணியும் இதுவரை 4 போட்டிகளை மட்டுமே வென்றுள்ளது. ஆனால், தோல்வியை தவிர்த்து 5 போட்டிகளை டிரா செய்திருக்கிறது. ஹைதராபாத்தும் சௌகரியமாக ப்ளே ஆஃப்ஸிற்கு செல்ல டிரா மட்டுமே செய்து கொண்டிருக்காமல் வெற்றியும் பெற வேண்டும்.