Published:Updated:

போலாந்து, கிரீஸ் ஆட்டம் டிரா; ரஷ்யா அபார வெற்றி!

போலாந்து, கிரீஸ் ஆட்டம் டிரா; ரஷ்யா அபார வெற்றி!
போலாந்து, கிரீஸ் ஆட்டம் டிரா; ரஷ்யா அபார வெற்றி!
போலாந்து, கிரீஸ் ஆட்டம் டிரா; ரஷ்யா அபார வெற்றி!

வார்சா: யூரோ கோப்பை தொடரின் போலாந்து, கிரீஸ் மோதிய முதல் ஆட்டம் டிராவில் முடிந்தது. செக்குடியரசு எதிரான போட்டியில் ரஷ்யா அபார வெற்றி பெற்றது.
 
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் யூரோ கோப்பை கால்பந்து போட்டியை போலந்து மற்றும் உக்ரைன் நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

போலந்து தலைநகர் வார்சா தேசிய ஸ்டேடியத்தில் நேற்றிரவு கோலாகலமான தொடக்க விழாவும், கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. அதைத் தொடர்ந்து தொடக்க ஆட்டத்தில் உள்ளூர் அணியான போலந்து, 2004-ம் ஆண்டு சாம்பியனான கிரீசை சந்தித்தது.
 
உள்ளூர் ரசிகர்கள் பலமான ஆதரவு, கரகோஷத்துக்கு மத்தியில் களம் இறங்கிய போலந்து அணி 17-வது நிமிடத்தில் கோல் அடித்து அரங்கை அதிர வைத்தது.

பதில் கோல் திருப்ப முயன்ற கிரீஸ் அணிக்கு 44-வது நிமிடத்தில் பின்னடைவு ஏற்பட்டது. போலந்து வீரர் முராவ்ஸ்கியை முழங்கையால் கீழே தள்ளியதற்காக கிரீசின் பபஸ்தாதோபுலாசுக்கு சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டது. இதனால் 10 வீரர்களுடன் ஆட வேண்டிய நிலைமை கிரீசுக்கு ஏற்பட்டது.
 
ஒரு வீரர் குறைவாக இருந்தாலும் ஆக்ரோஷமாக போராடிய கிரீஸ் அணி 51-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பியது. அந்த அணியின் டிமிட்ரிஸ் சல்பின்கிடிஸ் இந்த கோலை திணித்தார்.

இதையடுத்து முன்னிலை பெற இரு அணிகளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டன. ஆனால் இறுதி வரை முரட்டு ஆட்டம் மட்டுமே ரசிகர்களால் காணமுடிந்தது. முடிவில் 1-1 என்ற கோல்கணக்கில் இந்த பரபரப்பான ஆட்டம் டிராவில் முடிந்தது.    

ரஷ்யா அபார வெற்றி!

போலாந்து, கிரீஸ் ஆட்டம் டிரா; ரஷ்யா அபார வெற்றி!

'ஏ' பிரிவில் நடந்த 2வது ஆட்டத்தில் ரஷ்யா- செக்குடியரசு அணிகள் மோதின. ரஷ்ய வீரர்களின் அபாரமான ஆட்டத்தால் செக்குடியரசு திணறியது. ஆட்டம் முழுவதும் தன்வசப்படுத்திக் கொண்ட ரஷ்யா 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

ரஷ்யா தரப்பில் ஆலன் டிஜாகோவ் 2 கோல் அடித்தார். பயோலச் சென்கோவ் (82-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். செக்குடியரசு சார்பில் 52-வது நிமிடத்தில் வாக்லவ்பிளர் கோல் அடித்தார்.

ரஷ்யா 2-வது ஆட்டத்தில் போலந்தை வருகிற 12-ந்தேதி சந்திக்கிறது. கிரீஸ் 2-வது ஆட்டத்தில் செக்குடியரசுவை 12-ந்தேதி எதிர்கொள்கிறது.

இன்றைய ஆட்டங்கள்!

3 முறை சாம்பியான ஜெர்மனி தொடக்க ஆட்டத்தில் இன்று போர்ச்சுக்கல் (பி பிரிவு) சந்திக்கிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.15 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
 
இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்து- டென்மார்க் அணிகள் மோதுகின்றன.