Published:Updated:

சென்னையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி?

Vikatan Correspondent
 சென்னையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி?
சென்னையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி?

தென்கிழக்காசியாவில் நடைபெறவுள்ள மிகப் பெரிய கால்பந்து போட்டியாக கருதப்படும் 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் சில ஆட்டங்கள், சென்னையில் நடைபெற வாய்ப்புள்ளதாக அகில இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

 சென்னையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி?

2017ஆம் ஆண்டு 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி முதல் முறையாக இந்தியாவில் நடைபெறவுள்ளது. முதலில் இந்த போட்டி டெல்லி, புனே, கொல்கத்தா, குவஹாத்தி, பெங்களூரு, மும்பை ஆகிய 6 நகரங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த 6 நகரங்களிலும் உள்ள கால்பந்து மைதானங்களை பிஃபா டெக்னிக்கல் கமிட்டி ஆய்வு செய்து வருகிறது.

அண்மையில் இந்த வரிசையில் கொச்சி நகரும் சேர்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை நகரமும் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உத்தேச நகரங்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. 

சென்னை நேரு விளையாட்டரங்கிலும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் சில ஆட்டங்களை நடத்த அகில இந்திய கால்பந்து சம்மேளனம் முடிவு செய்துள்ளது. சென்னை மைதானத்தை பிஃபா டெக்னிக்கல் கமிட்டி இன்னும் பார்வையிட்டு அனுமதி வழங்கிய பின்னரே இது உறுதிப்படுத்தப்படும்.