Published:Updated:

செல்சி - ஆர்சனல் ஆட்டம் டிரா: பேயன்ர்மியூனிச் ஜெர்மனி 'சாம்பியன்'!

Vikatan Correspondent
செல்சி - ஆர்சனல் ஆட்டம் டிரா: பேயன்ர்மியூனிச் ஜெர்மனி 'சாம்பியன்'!
செல்சி - ஆர்சனல் ஆட்டம் டிரா: பேயன்ர்மியூனிச் ஜெர்மனி 'சாம்பியன்'!

பிரீமியர் லீக்கில் செல்சி - ஆர்சனல் அணிகளுக்கிடையே நேற்று நடந்த ஆட்டம் சமனில் முடிந்ததையடுத்து, செல்சி அணி பட்டத்தை வெல்வது கிட்டத்தட்ட உறுதியானது. ஜெர்மனி பந்தஸ்லீகா தொடரில் பேயர்ன்மியூனிச் அணி தொடர்ந்து 25வது முறையாக பட்டத்தை வென்றது.

பட்டத்தை உறுதி செய்தது செல்சி...

பிரீமியர் லீக்கில் நேற்று லண்டன் எமிரேட்ஸ் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் ஆர்சனல்-செல்சி அணிகள் மோதின. இந்த போட்டியில் 90 நிமிட நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து ஆட்டம் சமனில் முடிந்ததால், புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

செல்சி - ஆர்சனல் ஆட்டம் டிரா: பேயன்ர்மியூனிச் ஜெர்மனி 'சாம்பியன்'!

பிரீமியர் லீக்கில் இதுவரை 33 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், செல்சி அணி 77 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆர்சனல் அணி 67 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. செல்சி அணி இரண்டாவது இடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டி மற்றும் ஆர்சனல் அணிகளைவிட 10 புள்ளிகளை கூடுதலாக பெற்றுள்ளது. இன்னும் 5 ஆட்டங்களே எஞ்சியுள்ளதால் செல்சி அணி மீண்டும் பிரீமியர் லீக் பட்டத்தை வெல்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

பேயர்ன்மியூனிச் 25 முறையாக சாம்பியன்


ஜெர்மனி பந்தஸ்லீகா தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் பேயர்ன்மியூனிச் அணி ஹெர்தா பெர்லின் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் 1-0 என்று பேயர்ன் வெற்றி பெற்றது.

செல்சி - ஆர்சனல் ஆட்டம் டிரா: பேயன்ர்மியூனிச் ஜெர்மனி 'சாம்பியன்'!

நடப்புத் தொடரில் இன்னும் 4 ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில், பேயர்ன்மியூனிச் அணி 76 புள்ளிகளை பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள வுல்ஸ்பர்க் அணி 61 புள்ளிகளை மட்டுமே பெற்றிருப்பதால் பேயர்ன்மியூனிச் பட்டம் வென்றது. பந்தஸ்லீகா தொடரில் பேயர்ன்மியூனிச் பட்டம் வெல்வது இது 25வது முறை, கடந்த முன்று சீசன்களிலும் 'ஹாட்ரிக்' பட்டம் வென்றும் அசத்தியுள்ளது.

பட்டத்துக்காக மல்லு கட்டும் பார்சிலோனா - ரியல்மாட்ரிட்

ஸ்பானீஷ் லீக்கை பொறுத்தவரை நேற்று நடந்த ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணி செல்டா விகோ அணியை 4&2  என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ரியல்மாட்ரிட் அணிக்காக டோனி க்ரூஸ்,ரோட்ரிகஸ் தலா ஒரு கோலும் ஜேவியர் ஹெர்னான்டஸ் இரண்டு கோல்களும் அடித்தார்.

செல்சி - ஆர்சனல் ஆட்டம் டிரா: பேயன்ர்மியூனிச் ஜெர்மனி 'சாம்பியன்'!

அதேவேளையில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணி எஸ்பானயல் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. ஸ்பானீஷ் லீக்கில் 33 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் பார்சிலோனா அணி 81 புள்ளிகளையும் ரியல்மாட்ரிட் அணி அதனை விட 2 புள்ளிகள் குறைவாக 79 புள்ளிகளையும் பெற்றுள்ளன.
ஜுவான்டஸ் அதிர்ச்சித் தோல்வி
இத்தாலி சீரி ஏ தொடரில் ஜுவான்டஸ் அணி நேற்று அதிர்ச்சி தோல்வி கண்டது. டூரின் நகரில் நடந்த ஆட்டத்தில் அதே நகரை சேர்ந்த ஜுவான்டஸ் அணியுடன் டூரின் எப்.சி மோதியது. இந்த போட்டியில் ஜுவான்டஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்த தொடரில் 32 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் ஜுவான்டஸ் அணி 73 புள்ளிகளை ஈட்டியுள்ளது.