Published:Updated:

ஃபேஸ்புக் : ஷகீராவை வீழ்த்தினார் ரொனால்டோ!

Vikatan Correspondent
ஃபேஸ்புக் : ஷகீராவை வீழ்த்தினார் ரொனால்டோ!
ஃபேஸ்புக் : ஷகீராவை வீழ்த்தினார் ரொனால்டோ!

ஃபேஸ்புக் வரலாற்றில் அதிகம் பேர் தொடர்பவர்கள் பட்டியலில் பிரபல கொலம்பிய பாடகி ஷகீராவை பின்னுக்குத் தள்ளி, ரியல்மாட்ரிட் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடம் பிடித்துள்ளார்.

ஃபேஸ்புக் : ஷகீராவை வீழ்த்தினார் ரொனால்டோ!

நேற்று ஒரே நாளில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஃபேஸ்புக் பக்கத்தை 15 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இதனால் ரொனால்டோவை தொடர்பவர்களின் மொத்த எண்ணிக்கை 10 கோடியே 71 லட்சத்து 5ஆயிரத்தை தாண்டியது. இதையடுத்து ஃபேஸ்புக்கில் அதிகம் பேரால் தொடரப்படும் நபராக ரொனால்டோ மாறியுள்ளார். கொலம்பிய பாடகி ஷகீரா இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். ட்விட்டர் தளத்திலும் ரொனால்டோதான் முதலிடத்தில் உள்ளார். ட்விட்டர் தளத்தில் ரொனால்டோவை தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 கோடி ஆகும்.

ஃபேஸ்புக் : ஷகீராவை வீழ்த்தினார் ரொனால்டோ!

அதிகளவு ரசிகர்களால் தொடரப்படும் அணிகள் பட்டியலில் ஸ்பெயினை சேர்ந்த பார்சிலோனா அணி உள்ளது. இந்த அணியை 7 கோடியே 68 லட்சம் பேர் தொடருகின்றனர். இரண்டாவது இடமும் ஸ்பெயினை சேர்ந்த மற்றொரு அணியான ரியல்மாட்ரிட் அணிக்குதான் கிடைத்துள்ளது. இந்த அணியை 7 கோடியே 51 லட்சம் பேர் தொடர்கின்றனர்.