Published:Updated:

ஆப்ரிக்க கோப்பையை வென்றது ஐவரிகோஸ்ட்!

  ஆப்ரிக்க கோப்பையை வென்றது ஐவரிகோஸ்ட்!
ஆப்ரிக்க கோப்பையை வென்றது ஐவரிகோஸ்ட்!

பாடா: ஆப்ரிக்க கோப்பை கால்பந்து போட்டியில் ஐவரிகோஸ்ட் அணி கோப்பையை வென்றது.

  ஆப்ரிக்க கோப்பையை வென்றது ஐவரிகோஸ்ட்!


கினியாவில் உள்ள பாடா நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கானா மற்றும் ஐவரிகோஸ்ட் அணிகள் மோதின. இதில் நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடம் மற்றும் அதனைத் தொடர்ந்து வழங்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. வெற்றி தோல்வியை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.

டைபிரேக்கரிலும் இரு அணி வீரர்களும் விட்டுக் கொடுக்காமல் கோல் அடித்தன. இறுதியில் சடன்டெத் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில். ஐவரிகோஸ்ட் அணி 9-8 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

ஐவரிகோஸ்ட்  அணி ஆப்ரிக்க கோப்பையை வெல்வது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன் கடந்த 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியிலும் ஐவரிகோஸ்ட் கானா அணிகளே மோதின. இந்த போட்டியிலும் ஐவரிகோஸ்ட் அணி   சடன்டெத் முறையில் கானா அணியை 11-10 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது.