Published:Updated:

சர்வதேச கால்பந்து: பைச்சுங் புடியா ஓய்வு அறிவிப்பு

சர்வதேச கால்பந்து: பைச்சுங் புடியா ஓய்வு அறிவிப்பு
சர்வதேச கால்பந்து: பைச்சுங் புடியா ஓய்வு அறிவிப்பு

புதுடெல்லி, ஆக.24,2011

சர்வதேச கால்பந்து: பைச்சுங் புடியா ஓய்வு அறிவிப்பு

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், நீண்ட காலமாக அர்ப்பணிப்புடன் அணிக்காக விளையாடியவருமான பைச்சங் புடியா, தாம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ##~~##

'சிக்கிமின் ஸ்னைப்பர்' எனப் போற்றப்படும் 34 வயது புடியா, அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைமையகத்தில் இன்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தனது ஓய்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

"சர்வதேச கால்பந்து போட்டிகளில் 16 ஆண்டு காலமாக விளையாடிய அனுபவம் மிகவும் சிறப்பானது. நாட்டுக்காக அணியில் இடம்பெற்று விளையாடிய ஒவ்வொரு தருணத்திலும் மகிழ்ச்சி கொண்டேன். என்னால் இயன்றவரையில் விளையாட்டில் பங்காற்றினேன்.

கடந்த 2008-ல் ஏ.எஃப்.சி. சாலஞ்ச் கோப்பையை வென்று, ஆசிய கோப்பைக்கு தகுதி பெற்ற அற்புதத் தருணத்தை மறக்க முடியாது. அந்தப் போட்டிக்கு பிறகு ஓய்வு அறிவிக்கலாம் என்று எண்ணியிருந்தேன்.

ஆனால், ஆசிய கோப்பையில் என்னால் 15 நிமிடம் மட்டுமே விளையாட முடிந்தது. ஓய்வு பெறுவதற்கு அது சரியான தருணமல்ல என்று கருதினேன். எனக்குத் தொடர்ந்து விளையாட ஆசை தான். ஆனால், காயம் காரணமான அழுத்தங்களால் முடியவில்லை. எனவே, சர்வதேச போட்டிகளில் இருந்து விலக முடிவு செய்தேன்," என்றார் புடியா.

இந்திய கால்பந்து அணிக்கு 10 ஆண்டு காலமாக கேப்டனாக இருந்த புடியா, தெற்கு ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் கோப்பையை 3 முறை வெல்ல உறுதுணைபுரிந்தவர். இரண்டு முறை நேரு கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர். 2008-ல் ஏ.எஃப்.சி சாலஞ்சர் கோப்பையை வென்றதால், 1984-க்குப் பிறகு முதல் முறையாக ஆசிய கோப்பைக்கு இந்திய அணியை தகுதி பெற வைத்தார்.

இதுவரை 43 சர்வதேச கோல்களை அடித்துள்ள புடியா, நாட்டுக்காக 100 போட்டிகளை விளையாடியுள்ள மிகச் சில சர்வதேச வீரர்களுள் ஒருவர் என்ற பெருமையையும் பெற்றவர்.

திபெத்திய சுதந்திர இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து, ஒலிம்பிக் தீபம் ஏந்திச் செல்வதைப் புறக்கணித்த முதல் இந்திய விளையாட்டு வீரர் என்ற சிறப்புக்கும் சொந்தக்காரர், பைச்சுங் புடியா!

அடுத்த கட்டுரைக்கு