Published:Updated:

தென் ஆப்பிரிக்க கால்பந்து அணி கேப்டன் சுட்டுக் கொலை!

தென் ஆப்பிரிக்க கால்பந்து அணி கேப்டன் சுட்டுக் கொலை!
தென் ஆப்பிரிக்க கால்பந்து அணி கேப்டன் சுட்டுக் கொலை!
தென் ஆப்பிரிக்க கால்பந்து அணி கேப்டன் சுட்டுக் கொலை!

தென் ஆப்பிரிக்க கால்பந்து அணியின் கேப்டன் சென்சோ மெய்வா, அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
 
ஜோகன்ஸ்பர்க் நகரின் அருகே வாஸ்லூரஸ் என்ற இடத்தில் வசித்து வந்த அவரது வீட்டிற்குள், அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியுடன் புகுந்துள்ளனர். அவர்களுடன் வந்த மற்றொரு நபர் மெய்வா வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்திருக்கிறார்.

வீட்டிற்குள் சென்ற இருவர் மெய்வாவை துப்பாக்கியால் சுட்டனர். வீட்டில் இருந்த மற்ற யாரையும் அவர்கள் சுடவில்லை. பின்னர் குண்டுபாய்ந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மெய்வா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 
கொள்ளையடிக்க வந்தவர்களே மெய்வாவை சுட்டுக்கொன்றுவிட்டதாக தென் ஆப்பிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இதனை காவல்துறையினர் உறுதிசெய்யவில்லை. மெய்வாவை சுட்டுக்கொன்றவர்கள் நிச்சயம் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொலையாளிகள் குறித்து துப்பு கொடுத்தால் சன்மானம் வழங்கப்படும் என்றும் தென்ஆப்பிரிக்க காவல்துறை அறிவித்துள்ளது.