Published:Updated:

உலகக் கோப்பை கால்பந்து: பிரான்சை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது ஜெர்மனி!

ரியோ டி ஜெனிரோ: உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஜெர்மனி 13வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

பிரேசில் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் காலிறுதிப் போட்டி, ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்றது. அதில், 3 முறை உலகக் கோப்பையை வென்றுள்ள ஜெர்மனியும், ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள பிரான்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்கு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிட்டியது. அப்போது அந்த அணியின் டோனி குரூஸ் தூக்கி அடித்த பந்தை, மேட்ஸ் ஹும்மல்ஸ் தலையால் முட்டி கோலாக்கினார்.

34வது நிமிடத்தில் பதில் கோல் அடிப்பதற்காக பிரான்ஸ் வீரர் மேத்யூ அடித்த பந்தை, அற்புதமாக ஜெர்மனி கோல் கீப்பர் மேனுவல் நோயர் தடுத்தார். முதல் பாதியின் முடிவில் ஜெர்மனி அணி 1-0 என முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து, பிரான்ஸ் அணி தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்தது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் பிரான்ஸ் அணி, கோல் அடிப்பதற்கு கிடைத்த வாய்ப்பை நட்சத்திர வீரர் கரீம் பென்சிமா கோட்டைவிட்டார்.

ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணி வெற்றி பெற்று 13வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது.