Published:Updated:

உலகக் கோப்பை கால்பந்து போட்டி: ஜெர்மனி அணி காலிறுதிக்கு முன்னேற்றம்!

Vikatan Correspondent
உலகக் கோப்பை கால்பந்து போட்டி: ஜெர்மனி அணி காலிறுதிக்கு முன்னேற்றம்!
உலகக் கோப்பை கால்பந்து போட்டி: ஜெர்மனி அணி காலிறுதிக்கு முன்னேற்றம்!
உலகக் கோப்பை கால்பந்து போட்டி: ஜெர்மனி அணி காலிறுதிக்கு முன்னேற்றம்!

ரியோ டி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்து தொடரில் அல்ஜீரிய அணிக்கு எதிரான நாக் அவுட் சுற்று ஆட்டத்தில், ஜெர்மனி அணி வெற்றி கண்டு காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

உலக கோப்பை கால்பந்துப் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜாம்பவான் அணியான ஜெர்மனியுடன், முதன் முறையாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அல்ஜீரிய அணி மோதியது. இந்த ஆட்டத்தின் பெரும்பாலான நேரம் பந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த ஜெர்மனி அணி 16 முறை கோல் அடிக்க முயன்றது.

ஆனால், அல்ஜீரிய அணி வீரர்கள் நேர்த்தியான முறையில் தடுப்பாட்டம் ஆடி, ஜெர்மனி வீரர்களின் முயற்சிகளை முறியடித்தனர். அல்ஜீரிய அணி கோல் கீப்பர் ரயீஸ் திறமையாக செயல்பட்டு கோல்களைத் தடுத்தார். ஸ்டாப்பேஜ் நேர இறுதி வரை கோல் எதுவும் அடிக்காததால், கூடுதல் நேர ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கடுமையாக போராடினர்.

ஆட்டத்தின் 92வது நிமிடத்தில் தாமஸ் முல்லர் அடித்த பந்தை, ஆச்சரியமளிக்கும் வகையில் கோலாக்கினார் முன்கள ஆட்டக்காரர் ஆண்ட்ரே. ஏறக்குறைய வெற்றி உறுதியான நிலையில், ஜெர்மனி வீரர்கள் உற்சாகத்துடன் விளையாடினர். ஆட்டம் முடிய சில வினாடிகள் இருக்கும் நிலையில் நடுக்கள ஆட்டக்காரர் மசூத் ஒஸில், அல்ஜீரிய கோல் கீப்பரை திணற வைத்து கோலடித்தார்.

சற்று நேரத்தில் அல்ஜீரிய முன்கள ஆட்டக்காரர் ஜாபோவ் கோல் அடிக்க, அந்நாட்டு ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர். இறுதியில் 2-1 என்ற கணக்கில் ஜெர்மனி அணி வெற்றி பெற்றது. வருகின்ற 4 ஆம் தேதி நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி அணி, பிரான்ஸ் அணியுடன் மோதுகிறது.