Published:Updated:

உலக கோப்பை கால்பந்து: கேமரூனை 1-4 என்ற கோல் கணக்கில் பிரேசில் வீழ்த்தியது!

உலக கோப்பை கால்பந்து: கேமரூனை 1-4 என்ற கோல் கணக்கில் பிரேசில் வீழ்த்தியது!
உலக கோப்பை கால்பந்து: கேமரூனை 1-4 என்ற கோல் கணக்கில் பிரேசில் வீழ்த்தியது!
உலக கோப்பை கால்பந்து: கேமரூனை 1-4 என்ற கோல் கணக்கில் பிரேசில் வீழ்த்தியது!

பிரேசிலியா: உலக கோப்பை கால்பந்து போட்டியில் கேமரூன் அணியை 1-4 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தியது.

உலக கோப்பை கால்பந்து போட்டியில், நேற்று பிரேசில் மற்றும் கேமரூன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில், கேமரூன் அணியை 1-4 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தியது.

இந்த போட்டியில், முதல் பாதி ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில் பிரேசிலின் பாலின்ஹோ அடித்த பந்தை கேமரூனின் நியோம் கோல் விழாமல் தடுத்தார். 11வது நிமிடத்தில் கேமரூனின் எனோஹ் பவுல் செய்தார். அவருக்கு மஞ்சள் அட்டையும் நடுவரால் காண்பிக்கப்பட்டது. 17வது நிமிடத்தில் பிரேசிலின் நெய்மார் தனது அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார்.

26வது நிமிடத்தில் கேமரூனின் மேடிப் முதல் கோலை அடித்து கோல் கணக்கை சமன் செய்தார். 35வது நிமிடத்தில் மீண்டும் நெய்மார் அற்புதமான கோல் அடித்து அணியின் கோல் எண்ணிக்கையை 2 ஆக உயர்த்தினார். இந்நிலையில் முதல் பாதி ஆட்டம் முடிந்தது. சிறிது நேர ஓய்வுக்கு பின் மீண்டும் 2வது பாதி ஆட்டம் தொடங்கியது. 49வது நிமிடத்தில் பிரேசிலின் பிரெட் 3வது கோல் அடித்தார்.

86வது நிமிடத்தில் பிரேசிலின் பெர்னான்டின்ஹோ தனது அணிக்கு 4வது கோலை பதிவு செய்தார். இரண்டாவது பாதியில் கேமரூன் அணி மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்காததால், பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக பிரேசிலின் முன் கள ஆட்டக்காரரான நெய்மார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.