Published:Updated:

உலக கோப்பை கால்பந்து: பிரேசில்- மெக்சிகோ போட்டி டிரா!

Vikatan Correspondent
உலக கோப்பை கால்பந்து: பிரேசில்- மெக்சிகோ போட்டி டிரா!
உலக கோப்பை கால்பந்து: பிரேசில்- மெக்சிகோ போட்டி டிரா!
உலக கோப்பை கால்பந்து: பிரேசில்- மெக்சிகோ போட்டி டிரா!

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில், பரபரப்பாக நடைபெற்ற பிரேசில்- மெக்சிகோ அணிகளுக்கு இடையேயான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

இரு அணிகளுக்கும் கோல் அடிக்க பல வாய்ப்புகள் இருந்தும், கடுமையான போட்டி காரணமாக இரு அணி வீரர்களால் கோல் அடிக்க முடியவில்லை.

ஆட்டத்தின் இரண்டாம் பகுதியின் கடைசி நிமிடங்களில் பிரேசில் அணிக்கு கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தும் அதை அவர்களால் கோலாக மாற்ற முடியவில்லை.

பிரேசில்- மெக்சிகோ இரு அணிகளுமே தமது முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இந்தப் ஆட்டம் இரு நாடுகளிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.