Published:Updated:

உலக கோப்பை கால்பந்து: டிராவில் முடிந்தது ரஷ்யா- தென் கொரியா போட்டி!

Vikatan Correspondent
உலக கோப்பை கால்பந்து: டிராவில் முடிந்தது ரஷ்யா- தென் கொரியா போட்டி!
உலக கோப்பை கால்பந்து: டிராவில் முடிந்தது ரஷ்யா- தென் கொரியா போட்டி!
உலக கோப்பை கால்பந்து: டிராவில் முடிந்தது ரஷ்யா- தென் கொரியா போட்டி!

ரியோ டி ஜெனிரோ: உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷ்யா - தென் கொரியா அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது.

பிரேசிலில் நடைபெற்று வரும் 2014 உலக கோப்பை கால்பந்து போட்டியின் ‘எச்’ பிரிவு ஆட்டத்தில் ரஷ்யாவுடன் தென் கொரியா அணி மோதியது.

இடைவேளை வரை இரு அணியுமே கோல் எதுவும் போடவில்லை. பின்னிறுதி ஆட்டத்தில் தென் கொரியா முதல் கோலை அடிக்க, அதற்கு பதிலடியாக ரஷ்யாவும் தனது கணக்கில் ஒரு கோலை பதிவு செய்தது.

இரண்டாவது கோல் அடிக்கும் இலக்குடன் இரு அணிகளும் ஆவேசத்துடன் மோதின. ஆனால், அனுமதிக்கப்பட்ட ஆட்ட நேரமான 90 நிமிடங்களை கடந்து உபரி நேரமாக மூன்று நிமிடங்கள் முடிவடைந்த நிலையிலும், இரு அணிகளும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்காமல் 1-1 என்ற சமநிலையில் அந்த ஆட்டம் ‘டிரா’வில் முடிந்தது.