Published:Updated:

கால்பந்து ரீவைண்ட் 2021: மெஸ்ஸியின் கண்ணீர், ரொனால்டோவின் ஹோம் கம்மிங், செல்சீயின் கம்பேக்!

கால்பந்து ரீவைண்ட் 2021

கடந்த ஆண்டு முதல் நடந்துகொண்டிருந்த மெஸ்ஸி - பார்சிலோனா பிரேக் அப் போர் இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. கொரோனாவால் நிதிப் பிரச்னைக்குத் தள்ளப்பட்ட பார்சிலோனா, தங்கள் செலவுகளைக் குறைக்க, மெஸ்ஸியை விடுவித்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது.

கால்பந்து ரீவைண்ட் 2021: மெஸ்ஸியின் கண்ணீர், ரொனால்டோவின் ஹோம் கம்மிங், செல்சீயின் கம்பேக்!

கடந்த ஆண்டு முதல் நடந்துகொண்டிருந்த மெஸ்ஸி - பார்சிலோனா பிரேக் அப் போர் இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. கொரோனாவால் நிதிப் பிரச்னைக்குத் தள்ளப்பட்ட பார்சிலோனா, தங்கள் செலவுகளைக் குறைக்க, மெஸ்ஸியை விடுவித்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது.

Published:Updated:
கால்பந்து ரீவைண்ட் 2021
2021 முடிவுக்கு வரப்போகிறது. வழக்கம்போல் பல டிராமாக்கள் கால்பந்து உலகில் அரங்கேறியிருக்கின்றன. சர்வதேச அளவில், கிளப் அளவில் பல எதிர்பாராத விஷயங்கள் நடந்திருக்கின்றன. அவற்றை ஒரு முறை ரீவைண்ட் செய்து பார்ப்போம்.

யூரோ 2020

இந்த ஆண்டு நடந்த மிகப்பெரிய கால்பந்து தொடர் யூரோ 2020. கொரோனாவால் ஒரு வருடம் தள்ளிப்போன இத்தொடர், 11 நகரங்களில் நடத்தப்பட்டது. இதில், இளம் இங்கிலாந்து அணியை பெனால்டியில் வீழ்த்தி கோப்பை வென்றது இத்தாலி. மற்ற அணிகளைப் போல் சூப்பர் ஸ்டார் வீரர்கள் இல்லாவிட்டாலும், ராபர்டோ மான்சினியின் வழிநடத்தலில் அட்டகாசமாக செயல்பட்டது இத்தாலி. அந்த அணியின் கோல்கீப்பர் கியான்லூயி டொன்னரும்மா, இந்தத் தொடரின் சிறந்த வீரருக்கான விருதை வென்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் தொடரில் ரசிகர்களின் இதயத்தை உறைய வைத்த ஒரு சம்பவம் அரங்கேறியது. டென்மார்க் - ஐஸ்லாந்து போட்டியின்பொது, டென்மார்க் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் திடீரென மைதானத்தில் விழுந்தார். அசைவற்று அவர் விழுந்து கிடந்ததைப் பார்த்து ஒட்டுமொத்த மைதானம் அதிர்ச்சியடைந்தது. மருத்துவர்கள் வந்து வெகுநேரம் அவரைப் பரிசோதித்து, அங்கேயே CPR கொடுத்தனர்.

அப்போது டென்மார்க் வீரர்கள் வட்டமாக நின்று எரிக்சனைப் பாதுகாத்து நின்றது, அவரை மறைக்க ஐஸ்லாந்து கொடி பயன்படுத்தப்பட்டதெல்லாம் நெகிழ்வாக இருந்தது. ஒருவழியாக எரிக்சனைக் காப்பாற்றி அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். துரிதமாகச் செயல்பட்டு அவரைக் காப்பற்றிய மருத்துவக் குழுவுக்கும், முதலில் அவரைக் காப்பாற்றிய டென்மார்க் கேப்டன் கியாருக்கும் விருது வழங்கி மரியாதை செய்தது ஃபிஃபா.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கோபா அமெரிக்கா

மெஸ்ஸியின் முதல் சர்வதேசக் கோப்பையாக அமைந்தது 2021 கோபா அமெரிக்கா தொடர். ஒவ்வொரு முறையும் இந்தத் தொடரை வெல்ல முடியாமல் அவர் தவிப்பதும், அதன்பிறகு ஓய்வு பெறுவதாகச் சொல்வதும் எனப் பெரிய ரணகளமே நடக்கும். ஆனால், இந்த முறை தன் கனவை நனவாக்கிக்கொண்டார் மெஸ்ஸி. இறுதிப் போட்டியில் 1-0 என பிரேசிலை வீழ்த்தி சாம்பியன் ஆனது அர்ஜென்டினா. இந்தத் தொடரில் அதிக கோல்கள் அடித்தது, அதிக அசிஸ்ட் செய்தது என எல்லா பட்டியலிலும் முதலிடத்தில் இருந்தது அவர்தான். தொடரின் சிறந்த வீரர் - சந்தேகம் என்ன? மெஸ்ஸியேதான்!

கோபா அமெரிக்கா
கோபா அமெரிக்கா

உலகக் கோப்பை தகுதிச் சுற்று

2022 கத்தார் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெய்ன், பெல்ஜியம் உள்ளிட்ட முன்னணி அணிகள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுவிட்டன. ஆனால், இத்தாலி, போர்ச்சுகல் அணிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. UEFA தகுதிச் சுற்று போட்டிகளில் தங்கள் பிரிவில் இரண்டாம் இடமே பிடித்ததால், இந்த அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. மேலும் ஒரு ட்விஸ்டாக, தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டியில் இந்த இரண்டு அணிகளுமே மோதும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. அதனால், இந்த இரண்டு அணிகளில் ஒன்று மட்டுமே உலகக் கோப்பையில் விளையாடும். கடைசி இரண்டு யூரோ சாம்பியன்களும் இப்படியொரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.

சாம்பியன்ஸ் லீக்

2020-21 சீசனுக்கான சாம்பியன்ஸ் லீகை வென்று அசத்தியது செல்சீ. யாரும் எதிர்பார்த்திடாத நிலையில், புதிய பயிற்சியாளர் தாமஸ் டுசெலின் மாஸ்டர் கிளாஸ் அந்த அணியை சாம்பியனாக்கியது. ஜனவரியில், பிரீமியர் லீக் டாப் 4 இடங்களுக்கு வராது என்று கருதப்பட்ட அணி செல்சீ. பயிற்சியாளர் ஃபிராங் லாம்பார்ட் தலைமையில் தடுமாறிக்கொண்டிருந்தது. அணியின் ஜாம்பவானாக இருந்தாலும், முடிவுகள் எதிர்பார்த்தது போல் இல்லாததால், அவரை நீக்கிவிட்டு டுசெலை நியமித்தது செல்சீ நிர்வாகம். அதற்கு கை மேல் பலனாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையே கிடைத்தது.

செல்சீ அணி பெண்கள் சாம்பியன்ஸ் லீகிலும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆனால், ஃபைனலில் பார்சிலோனாவால் பந்தாடப்பட்டது. 4-0 என வெற்றி பெற்று அசத்தியது பார்சிலோனா.

கிளப் அளவில் வென்ற அணிகள்

பிரீமியர் லீக் - மான்செஸ்டர் சிட்டி
லா லிகா - அத்லெடிகோ மாட்ரிட்
சீரி ஆ - இன்டர் மிலன்
லீக் 1 - லீல்
புண்டெஸ்லிகா - பேயர்ன் மூனிச்
யுரோபா லீக் - வியரல்
FA கப் - லெஸ்டர் சிட்டி
லீக் கப் - மான்செஸ்டர் சிட்டி
கோபா டெல் ரே - பார்சிலோனா
DFB போகல் - பொருஷியா டார்ட்மண்ட்
வுமன்ஸ் சூப்பர் லீக் - செல்சீ

டிரான்ஸ்ஃபர் ரணகளம்

கடந்த ஆண்டு முதல் நடந்துகொண்டிருந்த மெஸ்ஸி - பார்சிலோனா பிரேக் அப் போர் இந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. கொரோனாவால் நிதி பிரச்னைக்குத் தள்ளப்பட்ட பார்சிலோனா, தங்கள் செலவுகளைக் குறைக்க, மெஸ்ஸியை விடுவித்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டது. மெஸ்ஸியும் கண்ணீர் மல்க தன் அணிக்கு விடைகொடுத்தார். அனைவரும் எதிர்பார்த்ததுபோல் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் அணி அவரை ஒப்பந்தம் செய்தது. அவரை மட்டுமல்ல... செர்ஜியோ ரமோஸ், ஜார்ஜினியோ வைனால்டம், கியான்லுயி டொன்னரும்மா போன்ற ஸ்டார் பிளேயர்களை ஃப்ரீ டிரான்ஸ்ஃபர் மூலம் வாங்கியது அந்த அணி.

மெஸ்ஸியுடன் பிற வீரர்கள்
மெஸ்ஸியுடன் பிற வீரர்கள்

மெஸ்ஸி பிரான்ஸ் பக்கம் போனால், ரொனால்டோ மீண்டும் இங்கிலாந்துக்குத் திரும்பினார். யுவன்டஸ் அணியிலிருந்து அவர் விலகுவதாகவும், மான்செஸ்டர் சிட்டி அவரை வாங்கப்போவதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், கடைசியில் தன் பழைய அணியான மான்செஸ்டர் யுனைடெடுக்குத் திரும்பினார் அவர். அவருக்குப் பிறகு ஹேரி கேன் மான்செஸ்டர் சிட்டிக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதுவும் நடக்கவில்லை. இருந்தாலும், இங்கிலாந்து வீரர் ஜேக் கிரீலீஷை 100 மில்லியன் பவுண்டுக்கு வாங்கியது சிட்டி. அதேபோல், 97.5 மில்லியன் பவுண்டு செலவு செய்து, ரொமேலு லுகாகுவை மீண்டும் தங்கள் அணிக்குக் கொண்டுவந்தது செல்சீ.

பாலன் டி ஓர், ஒலிம்பிக் கால்பந்து, லீக் 1 அதிர்ச்சி என இன்னும் பல்வேறு விஷயங்கள் கால்பந்து களத்தில் அரங்கேறியிருக்கிறது. முழுமையாக கீழேயுள்ள இந்த வீடியோவில் காணுங்கள்.