Published:Updated:

மோட்ரிச் மண்ணிலிருந்து இந்தியாவுக்குப் புதிய கோச்... பாயப் போகும் `புளு டைகர்ஸ்!'

மோட்ரிச் மண்ணிலிருந்து இந்தியாவுக்குப் புதிய கோச்... பாயப் போகும் `புளு டைகர்ஸ்!'
News
மோட்ரிச் மண்ணிலிருந்து இந்தியாவுக்குப் புதிய கோச்... பாயப் போகும் `புளு டைகர்ஸ்!'

இந்திய அணியைப் பொறுத்தவரை, ஜூன் 5 -முதல் 8- ந் தேதி வரை தாய்லாந்தில் நடைபெறவுள்ள கிங்ஸ் கோப்பைத் தொடருக்கு அணியைத் தயார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஸ்டீமச் உள்ளார். இந்தத் தொடருக்கான 37 உத்தேச வீரர்கள் பட்டியலையும் அவர் அறிவித்துள்ளார். தமிழக வீரர் சூசைராஜ் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். 

சிறந்த டிஃபண்டர். பாப் கலைஞர். தொழிலதிபர், சூப்பராக ஒயின் தயாரிப்பவர்... எனப் பல முகங்கள் கொண்ட இகர் ஸ்டீமச் இந்திய கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளர் ஆகியிருக்கிறார். 1988- பிரான்ஸ் உலகக்கோப்பையில் தேவ் சுகர் தலைமையிலான குரோஷிய அணி உலகச் சாம்பியன்களை அடித்து துவம்சம் செய்தது. ருமேனியா, ஜெர்மனி போன்ற அணிகள் தோற்று ஓடின. கால்பந்து ரசிகர்கள் அப்போது மூக்கில் விரல் வைத்துப் பார்த்த அணியின் தடுப்பாட்ட அரண்தான் இந்த இகர் ஸ்டீமச். 

தற்போது 51 வயதான ஸ்டீமச்சை இந்திய கால்பந்து சங்கம் நேற்று பயிற்சியாளராக நியமித்தது. குரோஷியா அணிக்காக 53 ஆட்டங்களில் விளையாடி 2 கோல்களை அடித்துள்ள இவர் கிளப் கால்பந்தில் இங்கிலாந்தில் கொடி கட்டிப் பறந்தார். 1994-ம் ஆண்டு முதல் 1995 வரை டெர்பி கவுன்டி அணிக்காக 84 ஆட்டங்களிலும், தொடர்ந்து வெஸ்ட்ஹாம் அணியிலும் விளையாடினார். இந்திய அணிக்குப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர்களில் அநேகமாக உலகக்கோப்பையில் முத்திரை பதித்த அடையாளம் கொண்டவர் இவராகவே இருப்பார்.  

மோட்ரிச் மண்ணிலிருந்து இந்தியாவுக்குப் புதிய கோச்... பாயப் போகும் `புளு டைகர்ஸ்!'

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கடந்த 2012-13 ம் ஆண்டு குரோஷிய அணிக்கு ஸ்டீமச் பயிற்சியாளராக இருந்தார். ஆச்சர்யப்படும் வகையில் குரோஷிய அணியில் முன்னேற்றம் தெரிந்தது. ஒரே வருடத்தில் ஃபிஃபா தரவரிசை பட்டியலில் 4 - வது இடத்துக்கு வந்து நின்றதோடு, 2014-ம் ஆண்டு உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்திலும் விளையாடத் தொடங்கியது குரோஷியா. ஆனால், துரதிருஷ்டவசமாகத் தகுதிச் சுற்று ஆட்டங்களில் தோல்வியடைந்தது. லுகா மோட்ரிச், ரகிடிச் போன்ற நட்சத்திர வீரர்களுடன் நல்ல நட்பு ஸ்டீமச்சுக்கு உண்டு. குரோஷிய அணி பயிற்சியாளராக இருந்து விலகிய பிறகு, கத்தார், இரான் நாட்டு கிளப் கால்பந்து அணிகளுக்குப் பயிற்சியாளராகப் பணியாற்றினார். 

இந்திய அணியைப் பொறுத்தவரை, ஜூன் 5 -முதல் 8- ந் தேதி வரை தாய்லாந்தில் நடைபெறவுள்ள கிங்ஸ் கோப்பைத் தொடருக்கு அணியைத் தயார் செய்ய வேண்டிய கட்டாயத்தில் ஸ்டீமச் உள்ளார். இந்தத் தொடருக்கான 37 உத்தேச வீரர்கள் பட்டியலையும் அவர் அறிவித்துள்ளார். தமிழக வீரர் சூசைராஜ் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். ஸ்ட்ரைக்கர் ஜெஜெ லால்பெகுலாவுக்கு காலில் அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளதால், கிங்ஸ் கோப்பைக்கான அணியில் பெயர் பரிசீலிக்கப்படவில்லை. 

மோட்ரிச் மண்ணிலிருந்து இந்தியாவுக்குப் புதிய கோச்... பாயப் போகும் `புளு டைகர்ஸ்!'

ஸ்டீமச்சைப் பொறுத்தவரை தாக்குதல் ஆட்டத்தை விட, தடுப்பாட்டத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக, ஆட்டத்தின் கடைசி நிமிடங்களில் இந்திய அணி கோல் வாங்கித் தோற்பது வழக்கமாக இருக்கிறது. டிஃபென்ஸிங் ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டியது முக்கியம் என்பதை உணர்ந்துள்ளார். கிங்ஸ் கோப்பையைத் தொடர்ந்து ஜூலை மாதத்தில் ஹீரோ கான்டினென்டல் கோப்பை தொடரும் தொடங்குகிறது. இரு தொடர்களிலும் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஸ்டீமச் உதவுவார் எனத் தாராளமாக நம்பலாம். 

இந்திய அணியின் தொழில்நுட்பக் குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், ``அணியை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதில் அகில இந்திய கால்பந்து சங்கம் மிகத் தீவிரமாக இருக்கிறது. அதனால்தான் உலகக் கோப்பையில் அசத்திய வீரர், உலகக் கோப்பை தொடரில் விளையாடிய அணிகளுக்குப் பயிற்சி அளித்த ஸ்டீமச்சை ஒப்பந்தம் செய்துள்ளோம்''  என்கிறார்.

இந்திய அணிக்குப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்த ஸ்டீமச், "விரைவில் டெல்லி வந்து பொறுப்பை ஏற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். சவால்களை எதிர்கொள்வது எனக்குப் பிடித்த விஷயம்" என்று கூறியுள்ளார். 

இந்திய அணியின் தற்போதைய தரவரிசை 101. இரு தொடர்களிலும் இந்திய அணி குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றால், தர வரிசையில் முன்னேற்றம் காண வாய்ப்பு உண்டு. ஸ்டீமச் தலைமையில் புளு டைகர்ஸ் பாயுமா?!