Published:Updated:

தி கார்டியோலா எஃபெக்ட்.. மான்செஸ்டர் சிட்டியை சாம்பியனாக்கிய மெஜிஸியன்! #Mancity #PremierLeague

இந்த சீசனை லிவர்பூல் ரசிகர்களால் கொண்டாடமுடியவில்லை. 128 ஆண்டுக்கால வரலாற்றில், மிகச் சிறந்த ஒரு சீஸனை அவர்களால் கொண்டாட முடியவில்லை. கோப்பை வென்றிருந்தால்தானே கொண்டாட முடியும். 29 ஆண்டுகளாக கண்கட்டி வித்தை காட்டிக்கொண்டிருக்கும் இந்தக் கோப்பையை, 97 புள்ளிகள் எடுத்தும்கூட வெல்ல முடியவில்லையே!

தி கார்டியோலா எஃபெக்ட்.. மான்செஸ்டர் சிட்டியை சாம்பியனாக்கிய மெஜிஸியன்! #Mancity #PremierLeague
தி கார்டியோலா எஃபெக்ட்.. மான்செஸ்டர் சிட்டியை சாம்பியனாக்கிய மெஜிஸியன்! #Mancity #PremierLeague

* ஒரு பிரீமியர் லீக் சீசனில் 30 வெற்றிகள் பெற்ற அணி சாம்பியன் ஆகாமல் இருந்ததில்லை. 

* 38 போட்டிகளில், ஒரேயொரு தோல்வியை மட்டும் சந்தித்த அணி சாம்பியன் ஆகாமல் இருந்ததில்லை. 

* 90 புள்ளிகளுக்கு மேல் எடுத்த எந்த அணியும் முதலிடம் பிடிக்காமல் இருந்ததில்லை. 

லிவர்பூல், அந்த 3 பாக்சுகளையுமே டிக் செய்தது. 38 போட்டிகளில் 30 வெற்றி, ஒரேயொரு தோல்வி. 90 அல்ல... 97 புள்ளிகள்! அந்த அணியின் வரலாற்றில் மிகச் சிறந்த பிரீமியர் லீக் சீசன் இதுதான். போதாதற்கு, அதிக கோல் (22) அடித்து, இந்த சீஸனின் கோல்டன் பூட் விருது வாங்கியவர்களில் இருவர் லிவர்பூல் வீரர்கள். அதிக `கிளீன் ஷீட்' வைத்து கோல்டன் கிளவ் வாங்கியது லிவர்பூல் கோல்கீப்பர்தான். இதையெல்லாம் விட, இந்த சீஸனின் மிகச் சிறந்த வீரராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் வான் டைக் இந்த அணிதான். பயிற்சியாளர் ஜார்ஜன் கிளாப் கொண்டாடப்பட்டார். 

தி கார்டியோலா எஃபெக்ட்.. மான்செஸ்டர் சிட்டியை சாம்பியனாக்கிய மெஜிஸியன்! #Mancity #PremierLeague

ஆனால், இந்த சீஸனை லிவர்பூல் ரசிகர்களால் கொண்டாடமுடியவில்லை. 128 ஆண்டுக்கால வரலாற்றில், மிகச் சிறந்த ஒரு சீஸனை அவர்களால் கொண்டாட முடியவில்லை. கோப்பை வென்றிருந்தால்தானே கொண்டாட முடியும். 29 ஆண்டுகளாக கண்கட்டி வித்தை காட்டிக்கொண்டிருக்கும் இந்தக் கோப்பையை, 97 புள்ளிகள் எடுத்தும்கூட வெல்ல முடியவில்லையே! நாம் மலையுச்சியில் ஏறி நிற்கும்போது தோற்றிருப்பதை எப்படி நம்புவது?! மலையுச்சியில் ஏறி நிற்பவனின் தலைமேல் ஒருத்தன் நின்றால்..? நாம் 99 சதவிகித பெர்ஃபெக்ஷனோடு ஆடியபோது, 99.1 சதவிகித பெர்ஃபெக்ஷனோடு ஓர் அணி விளையாடினால்..? அசைக்க முடியாத கன்சிஸ்டன்சியும், நம்ப முடியாத திறமையும் கொண்டு ஓர் அணி ஆடினால்... இப்படியான தோல்வி சாத்தியமே! மான்செஸ்டர் சிட்டி அணியால் அது சாத்தியமே! 

தி கார்டியோலா எஃபெக்ட்.. மான்செஸ்டர் சிட்டியை சாம்பியனாக்கிய மெஜிஸியன்! #Mancity #PremierLeague

கடந்த 8 ஆண்டுகளில் நான்காவது முறையாக பிரீமியர் லீக் கோப்பையை வென்றுள்ளது மான்செஸ்டர் சிட்டி. கடந்த 10 ஆண்டுகளாக எந்த அணியும் கோப்பையைத் தக்கவைக்காத நிலையில், அதையும் செய்து காட்டியுள்ளனர் `சிட்டிசன்ஸ்'. 32 வெற்றி, 98 புள்ளிகள், 95 கோல்கள் என இந்த அணியின் நம்பர்கள் பிரமிக்கவைக்கின்றன. பிரீமியர் லீக் மட்டுமல்லாது, லீக் கோப்பையை வென்று, FA கோப்பையின் ஃபைனலுக்குள் நுழைந்து, `Treble' வெல்லும் முனைப்போடு இருக்கிறது சிட்டி. இப்படியோர் அசாத்தியமான சீஸனுக்குக் காரணம், அந்த அணியின் மேனேஜர் - பெப் கார்டியோலா!

தி கார்டியோலா எஃபெக்ட்.. மான்செஸ்டர் சிட்டியை சாம்பியனாக்கிய மெஜிஸியன்! #Mancity #PremierLeague

இங்கிலாந்து கிளப்களைப் பொறுத்தவரை, ஒரு சீசனை முடிப்பது மிகப்பெரிய சவால். ஸ்பெய்ன், இத்தாலி போன்ற நாடுகளில், லீக் தவிர்த்து ஒரேயொரு `டொமஸ்டிக்' நாக் அவுட் கோப்பைதான் நடக்கும். ஆனால், இங்கிலாந்தில் 2 நாக் அவுட் தொடர்கள் நடக்கும். ஜெர்மனியில் கொடுக்கப்படுவது போன்ற `வின்டர் பிரேக்' இருக்காது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு வரும் அந்த ஒரு வாரத்தில், 4 போட்டிகளில் விளையாடவேண்டும். இவை தவிர்த்து சாம்பியன்ஸ் லீக் / யூரோபா லீக் போட்டிகள். இந்த புதன் கிழமை சாம்பியன் லீக் ஆட்டம் இருந்தாலும், ஞாயிற்றுக்கிழமை பிரீமியர் லீக் போட்டியில் விளையாடியே ஆகவேண்டும். மற்ற நாடுகளில், அவர்கள் கிளப்களுக்குக் கொடுக்கப்படும் ஓய்வுச் சலுகைகள் பிரீமியர் லீக் அணிகளுக்கு எப்போதும் கொடுக்கப்படுவதேயில்லை. 

தி கார்டியோலா எஃபெக்ட்.. மான்செஸ்டர் சிட்டியை சாம்பியனாக்கிய மெஜிஸியன்! #Mancity #PremierLeague

இப்படி தொடர்ச்சியாக விளையாடும்போது வீரர்களுக்குப் போதுமான ஓய்வு இருக்காது. அதனால் பெர்ஃபாமன்ஸ் குறையும். காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால்தான், மொரினியோ முதல் கிளாப் வரை ஒவ்வொரு பயிற்சியாளரும் இங்கிலாந்து டொமஸ்டிக் கால்பந்து அட்டவணையைக் குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இப்படித் தொடர்ந்து விளையாடிக்கொண்டே இருப்பதால்தான், பிரீமியர் லீக் அணிகளால் சாம்பியன்ஸ் லீக் வெல்ல முடியாமல் இருந்தது; `double, `treble' வெல்வதும் கடினமாக இருந்தது. ஆனால், மான்செஸ்டர் சிட்டி, இந்த சிக்கல்களையெல்லாம் ஜஸ்ட் லைக் தட் டீல் செய்திருக்கிறது. அதுதான் கார்டியோலாவின் மிகப்பெரிய தாக்கம்! 

தி கார்டியோலா எஃபெக்ட்.. மான்செஸ்டர் சிட்டியை சாம்பியனாக்கிய மெஜிஸியன்! #Mancity #PremierLeague

ஒவ்வொரு பொசிஷனிலும் உலகத் தரத்தில் இரண்டு வீரர்கள் வைத்திருந்தார் பெப். தொடர்ச்சியாக வீரர்களைப் பயன்படுத்தாமல், ஒவ்வொரு போட்டியிலும் ஒருசில வீரர்களை மாற்றிக்கொண்டே இருப்பார். அதனால் வீரர்கள் சரியாக ஓய்வெடுத்து, எப்போதும் புத்துணர்வோடு இருந்தனர். ஸ்ட்ரைக்கராக அகுவேரோ, கேப்ரியல் ஜீசஸ். 2 விங் பொசிஷன்களுக்கு ஸ்டெர்லிங், சனே, மாரஸ், பெர்னார்டோ சில்வா. நடுகளத்தில் டேவிட் சில்வா, டி புருய்னே, ஃபில் ஃபோடன், குண்டோகன். கொம்பனிக்கு மாற்றாக ஸ்டோன்ஸ். லபோர்டுக்கு ஓய்வளிக்க ஒடமெண்டி. மெண்டிக்குக் காயமானால், அந்த இடத்தில் விளையாட ஜின்சென்கோ, டெல்ஃப், டனிலோ என மூவர். இப்படி ஒவ்வொரு பொசிஷனுக்கும் தரமான மாற்று வீரர்கள் வைத்திருந்தார் கார்டியாலோ. 

அதுமட்டுமல்லாமல், ஒருசில வீரர்களை பல பொசிஷன்களில் தயார்படுத்தி வைத்திருந்தார். நடுகள வீரர்கள் ஜின்சென்கோ, டெல்ஃப் இருவரும் 'லெஃப்ட் பேக்' பொசிஷனில் சிறப்பாக விளையாடினர். சென்டர் பேக் லபோர்ட், சில போட்டிகளில் ஃபுல் பேக்காக களமிறக்கப்பட்டார். டிஃபண்டர் ஸ்டோன்ஸ், மிட்ஃபீல்டில் களம் கண்டார். பெர்னார்டோ சில்வா, அட்டாக்கின் அனைத்து பொசிஷன்களையும் ஆட்கொண்டார். இப்படி வீரர்களை மல்டி டாஸ்கிங் செய்யவைத்ததுதான், அனைவருக்கும் ஓய்வளிக்க வைத்தது. முக்கியமான வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டபோது, அது நெகடிவாக தாக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொண்டது.

தி கார்டியோலா எஃபெக்ட்.. மான்செஸ்டர் சிட்டியை சாம்பியனாக்கிய மெஜிஸியன்! #Mancity #PremierLeague

டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்டரான ஃபெர்னாண்டினோவுக்கு மட்டும்தான், அப்படியே சரியான மாற்று இல்லை. அவர் காயமடைந்திருந்தபோது, சில போட்டிகளில் குண்டோகன், சில போட்டிகளில் ஸ்டோன்ஸ் அவரது இடத்தில் விளையாடினர். ஆனால், அது அவர்களுக்கு கிளிக் ஆகவில்லை. சிட்டி தோற்ற 4 பிரீமியர் லீக் போட்டிகளில், இரண்டு ஃபெர்னாண்டினோ இல்லாத போட்டிகள்! மற்றபடி, இந்த ரொடேஷன் பாலிசி எல்லா இடங்களிலும் கைகொடுத்தது. அதுமட்டுமல்லாமல், பல்வேறு ஃபார்மேஷனில் விளையாடி, எதிரணிகளின் திட்டங்களை முறியடிப்பதற்கும் அது கைகொடுத்தது. இதுதான், தொடர்ந்து இரண்டாவது முறையாக சிட்டி சாம்பியன் பட்டம் வெல்லக் காரணம். 

சரி, இதுதான் கார்டியாலோவின் சக்சஸ் ஃபார்முலாவா என்றால்... இல்லை! ஓர் அணியில் இத்தனை நட்சத்திர வீரர்களை வைத்திருப்பது, அதில் பலரை, பல போட்டிகளில் பென்சில் அமர வைத்திருப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. குண்டோகன் - எந்த கிளப்பின் ஸ்டார்டிங் லெவனிலும் விளையாடக் கூடியவர். ஸ்டோன்ஸ், மாரஸ் - கண்டிப்பாக மற்ற பிரீமியர் லீக் அணிகளுக்காக 38 போட்டிகளிலுமே விளையாடியிருப்பார்கள். ஆனால், இவர்கள் முறையே 23, 14, 20 பிரீமியர் லீக் போட்டிகளில்தான் ஸ்டார்டிங் லெவனில் இடம்பிடித்தனர். ரியல் மாட்ரிட், பார்சிலோனா அணிகளுக்கே விளையாடக்கூடிய டி ப்ருய்ன் பல போட்டிகளில் வெளியே அமர்ந்தார். 

தி கார்டியோலா எஃபெக்ட்.. மான்செஸ்டர் சிட்டியை சாம்பியனாக்கிய மெஜிஸியன்! #Mancity #PremierLeague

இதெல்லாம் வேறோர் அணியாக இருந்திருந்தால், வேறு பயிற்சியாளராக இருந்திருந்தால் சாத்தியமே இல்லை. எந்த வீரரும் பென்சில் அமர்வதை விரும்பமாட்டார்கள். சில ஆண்டுகள் முன்பு போக்பா மான்செஸ்டர் யுனைடெட் விட்டுப் போனது, யுவான் மாடா செல்சீயை விட்டுப் போனது, இப்போது ஆரோன் ராம்சி, அர்செனலை விட்டுப் போவது எல்லாம் அதனால்தான். ஆனால், கார்டியோலா விஷயத்தில் மட்டும் அப்படி நடப்பதில்லை. காரணம், வீரர்களின் தரத்தில் அவர் ஏற்படுத்தும் தாக்கம். பென்சிலேயே அமர்ந்திருந்தாலும், கார்டியோலாவின் நிழலில் பயிற்சி பெறும் வீரரின் தரம் கூடிக்கொண்டேதான் இருக்கும். ஃபில் ஃபோடன், ஜின்சென்கோ போன்ற வீரர்கள் அதற்கான சான்று! அதனால்தான், மான்செஸ்டர் சிட்டி வீரர்கள், இந்த ரொடேஷன் பாலிசியை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஒருசிலர், பிடிக்காவிட்டாலும் பொறுத்துக்கொண்டிருக்கிறார்கள். 

தி கார்டியோலா எஃபெக்ட்.. மான்செஸ்டர் சிட்டியை சாம்பியனாக்கிய மெஜிஸியன்! #Mancity #PremierLeague

கார்டியோலாவின் டெக்னிக்கல் தாக்கம் ஒருபுறமிருக்க, மற்ற அணிகளின் ரசிகர்களும், ஒருசில விமர்சகர்களும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தனர். ``மான்செஸ்டர் சிட்டியின் வெற்றி பணத்தால் வாங்கப்பட்ட ஒன்று. மற்ற அணிகளைவிட அவர்கள் பல மடங்கு செலவு செய்கின்றனர்" என்று வாதிட்டனர். `சில நாடுகள், தங்களின் டிஃபன்ஸுக்கு செலவழிப்பதைவிட, மான்செஸ்டர் சிட்டியின் டிஃபன்ஸுக்கு அதிகமாகச் செலவளிக்கப்பட்டுள்ளது' என்று மீம்ஸ் பறக்கவிட்டனர் ரசிகர்கள். இந்த விமர்சனங்கள் ஒருவகையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். மற்ற அணிகளைவிட சிட்டிக்கு இது கூடுதல் அனுகூலம்தான். ஆனால், அதைக் காரணமாகக் கூறி, எந்த வகையிலும் அவர்களது வெற்றியின் மதிப்பைக் குறைத்துவிட முடியாது. 

கார்டியோலா வந்தபிறகு, சுமார் 500 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் செலவழித்துள்ளது அந்த அணி. வேறு எந்த அணியும் இப்படிச் செலவழிக்கவில்லை. இது கார்டியோலாவின் அணியைப் பலப்படுத்தியது உண்மை. ஆனால், அதை அவர் எப்படிப் பயன்படுத்தியுள்ளார் என்பதை ஆராய்வது அவசியம். ஒரு தனிப்பட்ட வீரருக்கு அவர் செலுத்திய அதிகபட்ச தொகை 63.27 மில்லியன் பவுண்டு. அதைவிட அதிக தொகை கொடுத்து மான்செஸ்டர் யுனைடெட் (பால் போக்பா, ரொமேலு லுகாகு), செல்சீ (கெபா அரிசபலாகா), லிவர்பூல் (விர்ஜைல் வேன் டைக்) அணிகள் வீரர்களை வாங்கியுள்ளன. 

தி கார்டியோலா எஃபெக்ட்.. மான்செஸ்டர் சிட்டியை சாம்பியனாக்கிய மெஜிஸியன்! #Mancity #PremierLeague

அதேபோல், கார்டியோலா, 100 மில்லியன் டாலர் கொடுத்து யாரையும் வாங்கவில்லை. போக்பா, குரூஸ் போன்ற நடுகள வீரர்களை வாங்கவில்லை. அவர் வாங்கியது பெர்னார்டோ சில்வா, குண்டோகன். ரஃபேல் வரேன், ஜோர்டி ஆல்பா போன்ற டிஃபண்டர்களை வாங்கவில்லை. ஆய்மெரிக் லபோர்ட், பெர்னார்ட் மெண்டி ஆகியோரை வாங்கினார். விங்கில் விளையாட கேரத் பேல், கொடினியோ, நெய்மர், எம்பாப்பே போகியோரை வாங்கவில்லை. 20 வயது லெராய் சனேவைத்தான் வாங்கினார். அவரது ஃபிலாசபிக்குத் தகுதியான ஸ்டார் வீரர்களை வாங்கினாரோ ஒழிய, சூப்பர் ஸ்டார்களாக அறியப்பட்ட வீரர்கள் யாரையும் வாங்கவில்லை அவர். சனே, லபோர்டே, மெண்டி, பெர்னார்டோ சில்வா ஆகியோர்தான் இப்போது அந்த அணியின் மையப்புள்ளி. இவர்களைச் சுற்றித்தான் அந்த அணி கட்டமைக்கப்படும். அதற்கான முதலீடுதான் அது. எந்த வகையில் பார்த்தாலும், அது கார்டியோலாவின் தாக்கத்தில் எந்தக் களங்கத்தையும் ஏற்படுத்தாது. 

தி கார்டியோலா எஃபெக்ட்.. மான்செஸ்டர் சிட்டியை சாம்பியனாக்கிய மெஜிஸியன்! #Mancity #PremierLeague

சில வருடங்களாகக் காயத்துடனே வாழ்ந்துகொண்டிருக்கும் கேப்டன் கொம்பனியைக் கையாண்ட விதம், டி ப்ருய்னே, மெண்டி ஆகியோரின் காயங்களின்போது அணியைக் கட்டமைத்த விதம், அகுவேரோவை, மேலும் மேலும் பலமாக்கிக்கொண்டிருக்கும் வித்தை, ஸ்டெர்லிங்கை உலகத்தரத்துக்கு மாற்றிக்கொண்டிருக்கும் மேஜிக், ஃபோடன், ஜின்சென்கோ போன்ற வீரர்களுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்புகள்... இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன கார்டியோலாவின் எஃபெக்ட் இந்த அணியில் எப்படியானது என்று சொல்ல. அதை இன்னும் இன்னும் பேசிக்கொண்டே இருக்கலாம். ஏனெனில், ஹாட்ரிக் கோப்பை வெல்ல அவர் ஆயத்தமாகிக்கொண்டிருப்பார். 

Vikatan