Published:Updated:

கால்பந்து அழகானது; கால்பந்து கொடூரமானது... ஆம்ஸ்டர்டெமில் இரண்டுமே அரங்கேறியது! #UCL

கால்பந்து அழகானது; கால்பந்து கொடூரமானது... ஆம்ஸ்டர்டெமில் இரண்டுமே அரங்கேறியது! #UCL
News
கால்பந்து அழகானது; கால்பந்து கொடூரமானது... ஆம்ஸ்டர்டெமில் இரண்டுமே அரங்கேறியது! #UCL

கால்பந்து அழகானது; கால்பந்து கொடூரமானது... ஆம்ஸ்டர்டெமில் இரண்டுமே அரங்கேறியது! #UCL

ந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் ஆச்சர்யங்களுக்கு மேல் ஆச்சர்யம் கொடுக்கிறது. 3-0 என்று முன்னிலையில் இருந்து பார்சிலோனா இரண்டாம் பாதியில் தோற்று வெளியேறியது அதிர்ச்சி என்றால், முதல் லெக்கில் ஒரு கோல், 2-ம் லெக்கின் முதல் பாதியில் 2 கோல்களைப் போட்டு 3-0 என்று வெற்றிக்கு அருகில் இருந்த அயாக்ஸ் வெளியேறியது பேரதிர்ச்சி. அவெஞ்சர்ஸ் எண்டு கேம் பிடிக்காதவர்களுக்குக் கூட ஹாட்ஸ்பர்ஸ் இன்று விளையாடிய கேம் பிடித்திருக்கும்.

கால்பந்து அழகானது; கால்பந்து கொடூரமானது... ஆம்ஸ்டர்டெமில் இரண்டுமே அரங்கேறியது! #UCL

சீசனின் தொடக்கத்தில், அயாக்ஸ் ஆம்ஸ்டர்டேம் அணி குரூப் ஸ்டேஜை தாண்டுமா எனச் சந்தேகித்தவர்களை எரிக் டென் ஹேக்கின் இளம் படை வாயடைக்க வைத்துவிட்டது. அயாக்ஸ் ஒன்றும் யாரோ 10 பேரை அடித்து செமிஃபைனலுக்கு வந்த டீம் இல்லை. பேயர்ன் முனிக், பென்ஃபிகா, ரியல்மேட்ரிட், யுவன்டஸ் என அயாக்ஸ் அடித்த எல்லோருமே டான்தான். 19 வயது கேப்டன் டீ லைட் நம்பிக்கை கொடுக்க இந்த இளம் படை பிடித்து விளையாடியதும், அடித்து நொறுக்கியதும் சாம்பியன்களை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
கால்பந்து அழகானது; கால்பந்து கொடூரமானது... ஆம்ஸ்டர்டெமில் இரண்டுமே அரங்கேறியது! #UCL

ஸ்பர்ஸ் ஒன்றும் சுமாரான டீம் இல்லை. இங்கிலாந்தின் கோல் மெஷின் ஹேரி கேன் இல்லாமலேயே, மான்செஸ்டர் சிட்டியை வெளுத்து வாங்கி அரையிறுதிக்கு வந்த அணி. ஆம்ஸ்டர்டேமில் நடைபெற்ற அரையிறுதி லெக் 2 போட்டியின் முதல் பாதி அயாக்ஸ்க்கு சாதகமாகவே இருந்தது. போட்டி தொடங்கிய 5-வது நிமிடத்திலேயே முதல் கோலை அடித்தார் அயாக்ஸின் கேப்டன் டீ லைட். லாஸி ஷோனிடம் இருந்த வந்த கார்னரை உயரப் பறந்து ஹெட்டர் கோலாக்கினார். ஆரம்பத்திலேயே ஆட்டம் வேகமெடுக்கத் தொடங்கியது. ஷிஸோகா அக்ரெஸிவான ஆட்டத்தை வெளிப்படுத்த, எரிக்ஸன் லாங் பாஸ்களை கொடுக்க, டெலி அலி ஒவ்வொரு முறையும் பந்தை எடுத்துக்கொண்டு எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடும்போது 'எப்படா கோல் விழும்' என்ற படபடப்பு தொற்றிக்கொண்டு தாண்டவமாடியது.

கால்பந்து அழகானது; கால்பந்து கொடூரமானது... ஆம்ஸ்டர்டெமில் இரண்டுமே அரங்கேறியது! #UCL

டெலி அலி, ஹியூங் மின சன்-க்கு பல முறை பந்தை பாஸ் செய்தும் அவரால் அதை கோல் ஆக்கமுடியவில்லை. இதுவரை அயாக்ஸுக்காக 9 சாம்பியன் லீக் கோல்களை அடித்த டாடிக், 35-வது நிமிடம் கொடுத்த கட் பேக் பாஸை கோல் போஸ்ட்டுக்குள் அடித்து அயாக்ஸின் வெற்றியை வலுவாக்கினார் ஜெய்க். முதல் பாதி முடிந்தபோது 3-0 என்ற லீடில் இருந்தது அயாக்ஸ். இரண்டாம் பாதியின் ஆட்டம் தலைகீழாக மாறியது. விக்டர் வான்யாமே வெளியேற்றப்பட்டு, ஃபெர்ணான்டோ லெரன்டே உள்ளே இறங்கினார். ஸ்பர்ஸின் ஸ்டேட்டர்ஜி மாற்றப்பட்டது. டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து உற்சாகமாக வந்தார்கள் ஸ்பர்ஸ் வீரர்கள்.

கால்பந்து அழகானது; கால்பந்து கொடூரமானது... ஆம்ஸ்டர்டெமில் இரண்டுமே அரங்கேறியது! #UCL

ஆல்டர்வீல்டின் ஹெட்டர் சான்ஸ், டெலி அலி பறந்து அடித்த ஷாட் என இரண்டாம் பாதி தொடங்கியது. 55-வது நிமிடம் ரோஸிடம் இருந்த வந்த லாங் பாஸை, டெலி அலிக்கு கொடுத்தார் லூக்கஸ் மோரா. பந்தை கோல் பாக்ஸ் வரை கொண்டுவந்து மீண்டும் லூகஸுக்குக் கொடுத்தார் டெலி அலி. லூக்கஸ் அதைக் கச்சிதமாக கோல் ஆக்கியதில் ஸ்பர்ஸ்க்கு மீண்டும் நம்பிக்கை உதிர்ந்திருக்கும். 59-வது நிமிடம் மீண்டும் களமாடினார் லுக்கஸ். லொரன்டே அடித்த பந்தை கோல்கீப்பர் ஓனானா தடுக்க, அந்தப் பந்தை பெனல்ட்டி பாக்ஸ்க்கு வெளியே தள்ளுவதற்குள் கேப்பில் புகுந்த பந்தை ட்ரிப்பிள் செய்து கோல் அடித்தார் லூக்காஸ். மீண்டும் ஒரு கம்பேக் ஸ்டோரியை எழுத நம் கம்ப்யூட்டரின் கீபோர்டுகள் தயாராகின.

கால்பந்து அழகானது; கால்பந்து கொடூரமானது... ஆம்ஸ்டர்டெமில் இரண்டுமே அரங்கேறியது! #UCL

அயாக்ஸ் தன் ஸ்டேட்டர்ஜியை மாற்றியது. ஷோனை வெளியே எடுத்து வெல்ட்மனை ரைட் பேக் பொசிஷனில் களமிறக்கியது, மஸ்ரோ மிட்ஃபீல்ட் சென்றார். அயாக்ஸ் வீரர்கள் பிரஷர் கொடுக்கத் தொடங்கினார்கள். முக்கியமாக டாடிச் மற்றும் ஜெயிக் தொடர்ந்து கோலடிக்கும் முயற்சியில் இருந்தார்கள். ஸ்பர்ஸ் ஒரு கோல் அடித்தால் கூட வெற்றி என்ற நிலையில் டிஃபெண்டர்களுக்கு பிரஷர் கொடுக்கப்பட்டது. தன்னுடைய அரணை வலுவாக்க அட்டாக்கர் கேஸ்பர் டோல்பெர்க்கை வெளியே எடுத்துவிட்டு டிஃபெண்டர் சிங்க்ரேவனை உள்ளே இறக்கினார் அயாக்ஸின் மேனேஜர். 5 நிமிடம் ஸ்டாப்பேஜ் டைம் வழங்கப்பட்டது.

கால்பந்து அழகானது; கால்பந்து கொடூரமானது... ஆம்ஸ்டர்டெமில் இரண்டுமே அரங்கேறியது! #UCL

கம்பேக்குக்கு வாய்ப்பே இல்லை அயாக்ஸ்தான் வெற்றியாளர் என்று ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க, போட்டி முடிவுக்கு வரவேண்டிய 95-வது நிமிடம் லூகஸ் கோல் அடித்தார். ஒரு நொடியில் நிலைமை தலைகீழாக மாறியது. ஸ்பர்ஸ் வீரர்களின் கொண்டாட்டம் தொடங்க சாம்பியன்ஷிப் ஆசையில் இருந்த அயாக்ஸ் வீரர்கள் படுத்தேவிட்டார்கள். இப்படி ஒரு கம்பேக்கை எதிர்பார்க்கவேயில்லை. கம்பேக் மாஸ்டர்கள் இருவரும் மோதுகிறார்கள். லிவர்பூல், ஸ்பர்ஸை சந்திக்கப்போகிறது.

கால்பந்து அழகானது; கால்பந்து கொடூரமானது... ஆம்ஸ்டர்டெமில் இரண்டுமே அரங்கேறியது! #UCL

இதே அயாக்ஸ் டீம் மீண்டும் களமிறங்கி, அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பையை வாங்க வாய்ப்பே இல்லை. ஃபிரான்கி டீ ஜாங் பார்சிலானாவுக்கு போகிறார், டீ லைட் பார்சிலோனாவா, மேன்செஸ்டர் யுனைட்டடா என்பது இன்னும் முடிவாகவில்லை, டேவிட் நெரிஸ், ஹக்கிம் ஜெயிக் இருவரும் ப்ரீமியர் லீக் டீமில் விளையாடப்போவதாகத் தகவல்கள் வந்துள்ளன. அயாக்ஸ் இதே போல் ஒரு அணியை உருவாக்கி மீண்டும் எப்போது சாம்பியன்ஸ் லீக் செமி ஃபைனலுக்கு வரும் என்பது தெரியவில்லை. ஆனால், வரும்போது இதே போல மீண்டும் ஒரு மிரட்டலான கேம் வாய்க்கும் என்று நம்புவோம். சாம்பியன்ஸ் லீக் இறுதியாட்டம் ஜூன் 2-ம் தேதி ரியல் மாட்ரிட்டில் நடைபெற இருக்கிறது. செமி ஃபைனலே இப்படி என்றால் ஃபைனல்!