Published:Updated:

கொண்டாட்டத்தின் நிறம் சிவப்பு

கொண்டாட்டத்தின் நிறம் சிவப்பு
பிரீமியம் ஸ்டோரி
கொண்டாட்டத்தின் நிறம் சிவப்பு

கொண்டாட்டத்தின் நிறம் சிவப்பு

கொண்டாட்டத்தின் நிறம் சிவப்பு

கொண்டாட்டத்தின் நிறம் சிவப்பு

Published:Updated:
கொண்டாட்டத்தின் நிறம் சிவப்பு
பிரீமியம் ஸ்டோரி
கொண்டாட்டத்தின் நிறம் சிவப்பு

லகின் சிறந்த பயணங்கள் எல்லாம் லிவர்பூலில் இருந்து தொடங்கியதாக சொல்வார்கள். 18-ம் நூற்றாண்டில் அடிமைகளின் வர்த்தகத்துக்கு தலைநகரமாக இருந்த ஒரு சிறிய கடற்கரை கிராமம் பல துறைமுகங்களைக் கட்டமைத்து 19-ம் நூற்றாண்டில் உலகின் 40 சதவிகித வணிகத்தை தன் வசப்படுத்தியது. 20-ம் நூற்றாண்டில் பீட்டில்ஸ் மூலம் இசை ஆதிக்கம் செலுத்தியது. மில்லினியல்ஸின் இந்த 21-ம் நூற்றாண்டில் லிவர்பூலின் அடையாளம் கால்பந்து.  சிவப்பு...வலியின் வண்ணம். நரகத்தை குறிப்பிடும் இந்த சிவப்பு வண்ணம் இன்று மெர்சிசைடு வீதி முழுக்க பரவியிருக்கிறது. பல வசைகளை உழைப்பால் மூழ்கடித்து தன்னுடைய வெற்றி சரித்திரத்தை ரத்தத்தின் நிறம் கொண்டு எழுதியிருக்கிறது லிவர்பூல். அந்த குருதியின் பெயர் ஜர்கன் க்ளூப்.

கொண்டாட்டத்தின் நிறம் சிவப்பு

ஜர்கன் க்ளூப் உதவியுடன் 14 ஆண்டுகள் கழித்து ஐரோப்பிய கால்பந்து கிளப்களின் சிம்மாசனமான சாம்பியன்ஸ் லீகில் வென்று மீண்டும் ராஜ பதவியில் ஏறியிருக்கிறார்கள் லிவர்பூல் வீரர்கள். எல்லா டோர்னமென்ட்டிலும் விருவிருப்பான ஃபைனல்ஸ் இருக்கும். ஆனால், சாம்பியன்ஸ் லீகில் மட்டும்தான் எல்லா ஆட்டமும் ஃபைனல்ஸ் போல இருக்கும். அதனால்தான் இந்த கோப்பையை அவ்வளவு சுலபமாக யாராலும் தட்டிச்செல்ல முடிவதில்லை. ஜர்கன் க்ளூப் தனது கரியரில் இரண்டு முறை  சாம்பியன்ஸ் லீக் ஃபைனல்ஸ் வந்து தோற்றுள்ளார். தனது கரியரில் கடைசியாக அவர் வழிநடத்திய 6 ஃபைனல்களும் அவருக்கு தோல்வியிலேயே முடிந்தது. அதனால்தான் க்ளூப் ராசியில்லாதவர் என கால்பந்து உலகம் கிசுகிசுக்கிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொண்டாட்டத்தின் நிறம் சிவப்பு

சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டிக்கு முந்தைய தினம் கூட க்ளூப்பிடம் அவரின் ராசியை பற்றி கேள்வி கேட்டார்கள். ‘‘கால் இறுதிப் போட்டிகளை தாண்டியதில் நான் உலக சாதனையே வைத்திருக்கிறேன். அதை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆனால், யாரும் வாங்கமாட்டார்கள். யார் சிறந்தவர் என்று அவர் வென்ற டிராஃபியை வைத்தே முடிவுசெய்கிறார்கள். அவர்கள் தவறவிட்டதை இல்லை. மேனேஜரின் வேலை டிராஃபியை வெல்வது மட்டுமில்லை'' என பதில் கூறினார். பெப் கார்டியாலோ, ஜோஸ் மொரினியோ போன்றவர்களுக்கு டிராஃபிகள் அடையாளமாக இருக்கலாம். ஆனால் ஜர்கன் க்ளூப்பின் அடையாளம் அவரின் தொலைநோக்குப் பார்வை. உடனடி வெற்றியை ருசிக்க நினைப்பவர் இல்லை இவர்.  

கொண்டாட்டத்தின் நிறம் சிவப்பு
கொண்டாட்டத்தின் நிறம் சிவப்பு

மைன்ஸ் அணியுடன் பண்டஸ்லிகாவில் தன் பயணத்தை தொடங்கியவர் லீக் டேபிளின் 14-ம் இடத்தில் இருந்த அணியை 3-ம் இடத்துக்கு கொண்டு வந்தார். மைன்ஸில் இருந்து விடைபெற்று 2008-ல் பொரூஷியா டோர்ட்மெடினில் வேலையைத் தொடங்கினார். 2 ஆண்டுகள் வெற்றியை பற்றி யோசிக்காமல் பொரூஷியாவை பலப்படுத்தி முதல் இடத்துக்கு கொண்டுவந்தார். இந்த இரண்டு ஆண்டுகளில் ஜெர்மனியில் இருக்கும் திறமையான ப்ளேயர்களை கண்டெடுத்தார். ஸ்வென் பெண்டர், மேரியோ கோட்ஸே, ஷின்ஜி ககாவா, நூரி சாஹின் போன்ற இளம் திறமையாளர்களை வைத்து மிட்ஃபீல்டை அமைத்தார். பண்டஸ்லிகாவின் கோல் மெஷின் ராபர்ட் வெண்டோஸ்க்கியை அழைத்துவந்தார். பொருஷியா டோர்ட்மடின் தொடர் வெற்றி இதன் விளைவுதான்.

கொண்டாட்டத்தின் நிறம் சிவப்பு

லிவர்பூலுக்கு வந்தபோது தன்னை ‘The Normal One'  என்று சொல்லிக்கொண்டார். 2007-க்கு பிறகு 2017-ல் முதல் முறையாக லிவர்பூலை சாம்பியன்ஸ் லீக் ஃபைனலுக்கு அழைத்துவந்தார். அட்டாக்கில் அற்புதத்தை காட்டினாலும் கோல்களை தடுப்பதில் லிவர்பூலுக்கு பெரிய பின்னடைவு இருந்தது. அது ஃபைனலில் பெரிய திருப்பத்தை உருவாக்க 27 வயது வெர்ஜில் வேண்டிக்கை அணிக்குள் அழைத்துவந்தார். ஒரே ஆண்டில், ஆண்ட்ரூ ராபர்ட்ஸன், ட்ரென்ட் அலெக்சாண்டர், அர்னால்டு மற்றும் டேஜன் லோவர்ன்னை வைத்து லிவர்பூலுக்கு பெரிய அரணை உருவாக்கிவிட்டார். 2018-ல் நபி கீட்டா, ஃபேபின்னோ, செர்டான் ஷக்கிரி, அலிசன் பெக்கர் என தனது வெற்றிப் படையை அழைத்து வந்து வெள்ளிக் கோப்பையை வென்றுவிட்டார். 2017-ல் தள்ளிப்போடப்பட்ட கொண்டாட்டம், 2019-ல் தொடங்கிவிட்டது. வாண்டா மெட்ரோபாலிட்டன் முதல் அன்ஃபீல்டு வரை எங்கும் சிவப்பு.  ஒரு சிவப்பு கொடியில் எழுதியிருந்த வாசகம் ‘There are places i remember all my life'. ஜர்கன் க்ளூப் லிவர்பூலை மறக்கமாட்டார். லிவர்பூல் க்ளூப்பை மறக்காது.

ரஞ்சித் ரூஸோ 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism