Published:Updated:

பாரீஸில் நொறுங்கிய பி.எஸ்.ஜி... மான்செஸ்டர் யுனைடட் மாஸ் கம்பேக்! #UCL

பாரீஸில் நொறுங்கிய பி.எஸ்.ஜி... மான்செஸ்டர் யுனைடட் மாஸ் கம்பேக்! #UCL

போக்பா இல்லை. அலெக்சிஸ் சான்சஸ், லின்கார்டு, மாடா, மேடிச், ஹெரேரா என அணியின் முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக ஆடமுடியாத இக்கட்டான நிலை. அதுபோக முதல் லெக்கில் இரண்டு அவே கோல்களையும் பெற்று விட்டது மான்செஸ்டர் யுனைடட்.

Published:Updated:

பாரீஸில் நொறுங்கிய பி.எஸ்.ஜி... மான்செஸ்டர் யுனைடட் மாஸ் கம்பேக்! #UCL

போக்பா இல்லை. அலெக்சிஸ் சான்சஸ், லின்கார்டு, மாடா, மேடிச், ஹெரேரா என அணியின் முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக ஆடமுடியாத இக்கட்டான நிலை. அதுபோக முதல் லெக்கில் இரண்டு அவே கோல்களையும் பெற்று விட்டது மான்செஸ்டர் யுனைடட்.

பாரீஸில் நொறுங்கிய பி.எஸ்.ஜி... மான்செஸ்டர் யுனைடட் மாஸ் கம்பேக்! #UCL

பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் மழைகொட்டிக்கொண்டிருந்தது. அந்தச் சுத்தமான நீரின் அளவைக் கூட்ட அங்கே கூடியிருந்த 50,000 ரசிகர்களின் உப்பு கரிக்கும் கண்ணீரும் உதவிக்கொண்டிருந்தது. பி.எஸ்.ஜி ரசிகர்களுக்கு, அது ஒரு கெட்ட கனவாக நினைத்து மறக்க வேண்டிய போட்டிதான். ஆனால், மான்செஸ்டர் யுனைடட் ரசிகர்களுக்கு அது கொண்டாடித்தீர்க்க வேண்டிய போட்டி. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஓல்ட் ட்ராஃபோர்ட் மைதானத்தில் யுனைடட் அணியை 2-0 எனத் தோற்கடித்தது தாமஸ்டக்கலின் பி.எஸ்.ஜி. கவானி, நெய்மர் இல்லாத போதிலும், யுனைடட் ரசிகர்களின் தூற்றல்களை தாண்டியும் எம்பாப்பே பி.எஸ்.ஜி. அணியைக் கரைசேர்த்தார். இரண்டு அவே கோல்கள், சொந்த மைதானத்தில் மேட்ச் என நிச்சயம் இந்த முறையும் பி.எஸ்.ஜி வென்று, காலிறுதிக்கு முன்னேறிவிடும் என்றுதான் எல்லோரும் கணித்தனர்.

கால்பந்து ஒரு விசித்திரமான ஆட்டம். இதில் ஆட்டத்தின் முடிவை தொடக்கத்திலேயே கணிப்பது கடினம். கிரிக்கெட்டில் 75 சதவிகிதம் முடிவைச் சரியாகக் கணித்துவிட முடியும் என்றால், கால்பந்தில் 50 சதவிகிதமே கணிக்க முடியும். இங்கே `அதிர்ச்சி தோல்வி' என்கிற தலைப்பில் மேட்ச் ரிப்போர்ட்கள் அடிக்கடி வரும். ஆம், கத்துக்குட்டி அணியாகக் கருதப்படும் அணிகள், வலிமையான அணிகளை அடிக்கடி வீழ்த்தும். அதுதான் கால்பந்தின் தனித்துவமும் கூட. 90 நிமிடங்களில் கடைசி நிமிடம், ஏன் கடைசி விநாடி வரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். மான்செஸ்டர் யுனைடட் – பி.எஸ்.ஜி அணிகளுக்கிடையிலான போட்டியிலும் அப்படித்தான் நடந்தது.

போக்பா இல்லை. அலெக்சிஸ் சான்செஸ், லின்கார்டு, மாடா, மேடிச், ஹெரேரா என முக்கியமான வீரர்கள் காயம் காரணமாக ஆடமுடியாத இக்கட்டான நிலை. அதுபோக முதல் லெக்கில் இரண்டு அவே கோல்களையும் பெற்று விட்டது மான்செஸ்டர் யுனைடட். இதுவரை சாம்பியன்ஸ் லீக் நாக் அவுட் போட்டிகளில் ஹோம் க்ரவுண்டில் இரண்டு அல்லது அதற்கு மேல் கோல் வித்தியாசத்தில் முதல் லெக்கில் தோற்றபின் அடுத்த சுற்றுக்கு எந்த ஓர் அணியும் முன்னேறியதில்லை. அத்தனை புள்ளி விவரங்களும் அவர்களுக்கு எதிராக இருந்தன. ஆனால், யுனைடட் அணி அந்த சரித்திரத்தை மாற்றி எழுதியது. பி.எஸ்.ஜி அணியை 3-1 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

``ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கோல் அடிக்க வேண்டும். அதுதான் எங்கள் திட்டம்” எனப் போட்டி தொடங்கும் முன் யுனைடட் பயிற்சியாளர் சோல்ஜ்கர் சொல்லியிருந்தார். அவர் சொன்னதுபோலவே ஆட்டத்தின் 111-வது விநாடியிலேயே லுகாகு கோல் அடித்து யுனைடட் அணிக்கு அட்டகாசமான தொடக்கம் கொடுத்தார். கேஹ்ரர், டேனி ஆல்வ்ஸுக்கி  போட்ட மோசமான பாஸை லூகாகு வேகமாக வாங்கி கோல்கீப்பரை ஏமாற்றி கோல் அடித்தார். 

அடுத்து, கவுன்ட்டர் அட்டாக் மேற்கொண்டது பி.எஸ்.ஜி. 12-வது நிமிடத்தில், எம்பாப்பேவின் மூவ்மென்ட்டைப் பார்த்து பாக்ஸுக்குள் பாஸ் போட்டார் டேனி ஆல்வ்ஸ். அதை எம்பாப்பே கிராஸ் போட, அதை ஒரு சிம்பிள் டச்சில் கோலாக மாற்றினார் யுவான் பெர்னாட். 1-1 என ஆட்டம் சமநிலைக்கு வந்தது. 

30-வது நிமிடம் மீண்டும் பி.எஸ்.ஜி தவறு செய்ய, அதை மீண்டும் கோலாக மாற்றினார் லுகாகு. ரேஷ்ஃபோர்ட் அடித்த ஷாட்டை கோல்கீப்பர் பஃபன் எளிதாகப் பிடித்திருக்க வேண்டும். ஆனால், அவர் சரியாகப் பிடிக்காமல் விட்டுவிட்டார். ரீ-பெளன்ட் ஆகி வந்த பந்தை சரியாகக் கவனித்த லுகாகு, வலது பக்கம் மூலையில் அடித்து கோலாக்கினார். இதன் மூலம் பி.எஸ்.ஜியின் அவே கோல் சாதகம் உடைந்தது. இருந்தாலும், அதுவரையிலான மொத்த கோல்களின் எண்ணிக்கையில் பி.எஸ்.ஜி ஒரு கோல் அதிகமாக இருந்தது. முதல் பாதியின் முடிவில் 2-1 என யுனைடட் முன்னிலை வகித்தபோதும், பெரும்பாலும் பி.எஸ்.ஜி அணியே ஆதிக்கம் செலுத்தியது. 

இரண்டாம் பாதியிலும் `அட்டாக்கிங் மைண்ட் செட்டிலேயே ஆடியது பி.எஸ்.ஜி.டி மரியா எம்பாப்பேவின் டிரிபிள்களில் பந்து பெரும்பாலான நேரம் யுனைட்டெட்டின் பாக்ஸுக்கு அருகிலேயே சுழன்றது. பல வாய்ப்புகள் பி.எஸ்.ஜி அணிக்குக் கிடைத்தும் சரியாக அதை ஃபினிஷ் செய்வதில் தடுமாறினர் அந்த அணி வீரர்கள். நெய்மர் இல்லாத குறையை அப்போது உணர்ந்தார்கள் பி.எஸ்.ஜி ரசிகர்கள். 90-வது நிமிடத்தில் டாலட் அடித்த ஷாட்டை தடுக்க முயன்ற பி.எஸ்.ஜி டிஃபென்டர் கிம்பப்பேயின் கையில் பட்டு பந்து வெளியே சென்றது.

VAR-யில் பார்த்த ரெஃப்ரீ அதற்கு பெனால்டி கொடுத்து ஒட்டுமொத்த அரங்கத்தையும் சோகத்தில் ஆழ்த்தினார். பெனால்டியை எதிர்கொண்டார் 22 வயதான மார்கஸ் ரேஷ்ஃபோர்ட். யுனைடட் அணிக்காக அவர் எடுக்கும் முதல் பெனால்டி இது. நெருக்கடியை முகத்தில் துளிகூட காட்டிக்கொள்ளாமல் கிக் அடிக்கத் தயாரானார். கோல் கீப்பரின் வலது பக்கம் தூக்கி அடிக்க, பந்து வலைக்குள் விழ, ஆர்ப்பரித்தனர் யுனைடட் வீரர்கள். கோபத்தில் கத்திக்கொண்டிருந்தார் நெய்மர். முடிவில், 3-1 என அவே கோல் கணக்கில் யுனைடட் வெற்றி பெற்றது.

நிச்சயம் இந்த முடிவுக்கு பி.எஸ்.ஜி தகுதியானது அல்ல. 3-1 எனத் தோல்வியுற்றாலும் யுனைடட் அணியை விட பி.எஸ்.ஜிதான் சிறப்பாக ஆடியது. 72 சதவீதம் பால் பொசஷன் பி.எஸ்.ஜி அணியிடம்தான் இருந்தது. அட்டாக், பாஸ் என எல்லா நிலையிலும் யுனைடட் அணியை விடப் பல மடங்கு அதிகமாக இருந்தது. கோல்களும் யுனைடட் அணியின் முயற்சியை விட பி.எஸ்.ஜி செய்த தவற்றால் அடிக்கப்பட்டதுதான். 

இந்த சாம்பியன்ஸ் லீக் சீசனில், முதல் லெக்கில் தோற்ற நான்கு அணிகளில் மூன்று அணிகள் இரண்டாவது லெக்கில் கம்பேக் கொடுத்து அசத்தியுள்ளன. போர்டா, அயாக்ஸ், டாட்டன்ஹாம், யுனைடட் அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெற்றுவிட்டன.