Published:Updated:

சாம்பியன்ஸ் லீக் வெறும் போட்டியில்லை... கொண்டாட்டம்!

சாம்பியன்ஸ் லீக் வெறும் போட்டியில்லை... கொண்டாட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
சாம்பியன்ஸ் லீக் வெறும் போட்டியில்லை... கொண்டாட்டம்!

சாம்பியன்ஸ் லீக் வெறும் போட்டியில்லை... கொண்டாட்டம்!

சாம்பியன்ஸ் லீக் வெறும் போட்டியில்லை... கொண்டாட்டம்!

சாம்பியன்ஸ் லீக் வெறும் போட்டியில்லை... கொண்டாட்டம்!

Published:Updated:
சாம்பியன்ஸ் லீக் வெறும் போட்டியில்லை... கொண்டாட்டம்!
பிரீமியம் ஸ்டோரி
சாம்பியன்ஸ் லீக் வெறும் போட்டியில்லை... கொண்டாட்டம்!

சாம்பியன்ஸ் லீக், உலகின் அதிக மக்களால் பார்க்கப்படும் விளையாட்டுத் தொடராக இருப்பதற்குக் காரணம் அது தரும் சர்ப்ரைஸ் வெற்றியாளர்களும், வெறியேற்றும் தோல்விகளும்தான். யாரால் யூகித்திருக்க முடியும் 2017-ல் மோனாகோ நாக் அவுட் தாண்டுமென்று? யாரால் கணித்திருக்க முடியும் 2-ம் லெக்கில் பார்சிலோனா 6 கோல் போட்டு PSG-யை தோற்கடிக்கும் என்று? 2018-ல் யாருமே யோசித்திருக்க மாட்டோம், ரோமா 2-ம் லெக்கில் பார்சிலோனாவின் அரணை தகர்த்து செமி ஃபைனல் வரும் என்பதை, இந்த சீசனில் கூட யாரும் நினைத்திருக்க மாட்டார்கள் யுவன்டஸ் அட்லெட்டிகோவை தோற்கடிக்கும் என்றோ, மேன்செஸ்டர் யுனைட்டட் PSG-யை தோற்கடிக்கும் என்றோ... சாம்பியன்ஸ் லீக் ஆச்சர்யங்கள் நிறைந்தது. கால்பந்து யூகிக்கமுடியாதது... அதனால்தான் இப்போது பார்சிலோவை லிவர்பூல் தோற்கடித்துள்ளது, அயாக்ஸை ஸ்பர்ஸ் வென்றுள்ளது.

சாம்பியன்ஸ் லீக் வெறும் போட்டியில்லை... கொண்டாட்டம்!

ஜூன் 2-ம் தேதி நடைபெறப்போகும் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் ஸ்பர்ஸ்(டோட்டன்ஹேம் ஹாட்ஸ்பர்) மற்றும் லிவர்பூல் அணிகள் மோதுகின்றன. கடைசியாக லிவர்பூல் 14 ஆண்டுகளுக்கு முன் சாம்பியன்ஸ் லீகை வென்றது. கடந்த ஆண்டு ஃபைனல் வரை வந்தும் வெல்ல முடியாமல் வெறியோடு திரும்பிச் சென்றது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சாம்பியன்ஸ் லீக் வெறும் போட்டியில்லை... கொண்டாட்டம்!

லிவர்பூலை பொருத்தவரை வெற்றி வரலாற்றில் இன்னொரு மைல் கல். ஆனால், ஸ்பர்ஸ் வென்றால் வரலாறு எழுதப்படும். டோட்டன்ஹேம் ஹாட்ஸ்பர் இதுவரை ஒரு சாம்பியன்ஸ் லீக் கூட வென்றதில்லை. ஜார்கன் க்ளூப் பல முறை ஃபைனல் வந்தும் ஒரு முறை கூட அந்த வெள்ளி கோப்பையை உயர்த்தியதில்லை. ஆனால், பொச்செடீனோவின் கரியரில் இதுவே முதல் சாம்பியன்ஸ் லீக் ஃபைனல். இறுதிப்போட்டி நடைபெறுவது மேட்ரிடில். பல ஆண்டுகள் கழித்து இரண்டு இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் டீம் ஃபைனலில் மோதுகிறது... அதுவும் வெறிகொண்ட லா லிகா ரசிகர்கள் முன்னிலையில்.

சாம்பியன்ஸ் லீகில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு அண்டர்டாக் இருக்கும். இந்த முறை அயாக்ஸ்தான் அண்டர்டாக். பேயர்ன் முனிக், ரியல்மேட்ரிட், யுவன்டஸ் எனத் தொடமுடியாத மூன்று சாம்பியன்களை தோற்கடித்துள்ளது அயாக்ஸின் இளம் டீம். கோல்கீப்பர் ஆண்டிரே ஓனானாவுக்கு வெறும் 23 வயதுதான். பார்சிலோனாவும், மேன்செஸ்டர் சிட்டியும் டிரான்ஸ்ஃபருக்கு போட்டிபோடும் கேப்டன் டீ லைட்-க்கு 19 வயதுதான், 21 வயது மஸ்ரோய் ரொனால்டோவையே ஸ்பிரின்ட்டில் மிரளவைத்தவர். 22 வயது ஃபிரான்க்கி டீ ஜாங் இனியஸ்டாவின் மாற்று என்று இப்போதே பேசத் தொடங்கிவிட்டார்கள். 26 வயது ஹக்கிம் ஜயாக் ஆப்பிரிக்க கண்டெடுத்த மற்றொரு அற்புதமான பிளேயர். அயாக்ஸ் கடந்து வந்த வெற்றிகளுக்குக் காரணமான இந்த பிளேயர்கள் ஒன்றிணைந்து விளையாடுவது இதுவே கடைசி ஆண்டாக இருக்கும். இனி இவர்களில் ஒவ்வொருவரும் பல சாம்பியன்ஸ் கோப்பைகளை கையில் வாங்குவதை நாம் பார்க்கும்போது 2019 சாம்பியின்ஸ் லீக் போட்டிகள் நம் நினைவின் கதவுகளை தட்டலாம். முக்கியமாக ஸ்பர்ஸ் உடன் தோற்றாலும் கம்பீரமாக கரகோஷங்களுடன் வெளியேறிய செமி ஃபைனலின் 2-ம் லெக் நினைவுக்கு வரும்.

சாம்பியன்ஸ் லீக் வெறும் போட்டியில்லை... கொண்டாட்டம்!

இந்த ஆண்டு சாம்பியன்ஸ் லீக் கடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பிப் பார்த்தால் இது அட்டாக்குகளின் சீசன் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. இந்த சீசன் மட்டுமில்லை கடந்த மூன்று ஆண்டுகளும் சாம்பியன்ஸ் கோப்பை அட்டாக்கர்களின் ஆண்டாகவே இருந்துவருகிறது. 2005-06 சீசனில் சராசரியாக மேட்சுக்கு ஒரு கோல் மட்டுமே விழுந்த நிலையில் தற்போது சராசரியாக மூன்று கோல்கள் விழுகின்றன.  2003/04 சாம்பியன்ஸ் லீக் நினைவிருக்கிறதா? இருப்பதிலேயே குறைவான கோல்களை அடித்த FC Porto அணியும், அதிக கோல்களை அடித்த மொனாக்கோவும் ஃபைனலில் மோதினார்கள். 3-0 என்று போர்ட்டோ வென்றது வெறும் அட்டாக்குகளை நம்பியில்லை. ஜோஸ் மொரினியோ தனது மேனேஜர் திறமையை உலகத்துக்குக் காட்டிய சீசன் அது.  

சாம்பியன்ஸ் லீக் வெறும் போட்டியில்லை... கொண்டாட்டம்!

இந்த ஆண்டு பார்சிலோனா 26 கோல்களை தட்டியுள்ளது. அதே சமயம் 10 கோல்களை உள்ளே அனுமதித்துள்ளது. பெஸ்ட் டிஃபெண்டர்கள் இருக்கும் டீம், லா லிகாவில் தனது பெஸ்ட் ஃபார்மில் இருக்கும்போது 38 சதவிகித கோல்களை உள்ளே விடுகிறது. அணியின் குழு முயற்சிகளை உடைத்து, ஒவ்வொரு பிளேயர்களையும் தனிமைப்படுத்தி அவர்களின் பலவீனத்தை பயன்படுத்தினால் வெற்றி பெறலாம் என்பது லிவர்பூல் மேனேஜருக்கு தெரியாமல் இருக்குமா? ஒரு பக்கம் ஆயுதத்தைக் கூர்மை படுத்திக்கொண்டு இன்னொரு பக்கம் கேடயத்தை வலுவிழக்கச் செய்ததால்தான் பார்லினோ தோற்றது. இந்த ஆண்டு சராசரியாக ஒரு போட்டிக்கு 3 கோல்கள் விழுகின்ற நிலையில் 3-0 என்ற முதல் லெக்கின் வெற்றியை நம்பி 2-ம் லெக்கில் யுக்திகள் இல்லாமல் களமிறங்கியதால் பார்சிலோனா தோற்றது. கடந்த மூன்று ஆண்டு களாக இதே நிலைதான்.

சாம்பியன்ஸ் லீக் வெறும் போட்டியில்லை... கொண்டாட்டம்!

எர்னெஸ்ட்டோ வேல்வர்டே இந்த விஷயங்களை அசால்ட்டாக விட்டாலும் அதை அயாக்ஸ் மேனேஜர் எரிக் டென் ஹேக் சரியாகக் கையாண்டார். அயாக்ஸின் ஸ்டேட்டர்ஜியையும் உடைத்து வென்றுள்ளது ஸ்பர்ஸ். லிவர்பூல் மற்றும் ஸ்பர்ஸ் அணிகளின் கம்பேக் வெற்றிக்கு மற்றொரு காரணம் டிரெஸ்ஸிங் ரூம் டாக்ஸ். 2-ம் லெக்கின் முதல் பாதி முடிந்தபிறகு டிரெஸ்ஸிங் ரூமில் ஜார்கன் க்ளூப் கொடுத்த நம்பிக்கைதான் லிவர்பூலை இறுதி யாட்டத்துக்கு கொண்டுவந்துள்ளது. டிரெஸ்ஸிங் ரூமில் லூகஸ் கொடுத்த நம்பிக்கைதான் ஸ்பர்ஸை வெற்றிபெறச் செய்துள்ளது. இந்த வித்தைத் தெரிந்திருந்தால் பார்சிலோனாவும், அயாக்ஸும் கூட வென்றிருக்கலாம். வெற்றிக்குப் பந்தை உதைத்தால் மட்டும் போதாது, தடையும், இலக்கும் தெளிவாக தெரியவேண்டும். இதை உணர்ந்த  இரண்டு திறமையான மேனேஜர்களும், திறமையான டீம்களும்  மோதுகிறார்கள். இதனால்தான் சொல்கிறோம் நாம் மேட்ரிடில் வெறும் போட்டியை மட்டுமில்லை வரலாற்றில் இடம் பிடிக்கப்போகும் கொண்டாட்டத்தையும்  பார்க்கப் போகிறோம்.

ரஞ்சித் ரூஸோ