Published:Updated:

ரொனால்டோவை நேர்த்தியாக `மேன் மார்க்’ செய்த அத்லெடிகோ..! #UCL ரவுண்ட் அப்

ரொனால்டோவை நேர்த்தியாக `மேன் மார்க்’ செய்த அத்லெடிகோ..! #UCL ரவுண்ட் அப்

ரொனால்டோவை நேர்த்தியாக `மேன் மார்க்’ செய்த அத்லெடிகோ..! #UCL ரவுண்ட் அப்

ரொனால்டோவை நேர்த்தியாக `மேன் மார்க்’ செய்த அத்லெடிகோ..! #UCL ரவுண்ட் அப்

ரொனால்டோவை நேர்த்தியாக `மேன் மார்க்’ செய்த அத்லெடிகோ..! #UCL ரவுண்ட் அப்

Published:Updated:
ரொனால்டோவை நேர்த்தியாக `மேன் மார்க்’ செய்த அத்லெடிகோ..! #UCL ரவுண்ட் அப்

2018-19 சாம்பியன்ஸ் லீக் (UCL) ரவுண்ட் ஆஃப் 16 சுற்றின் முதல் லெக் முடிவடைந்தது. கடந்த வாரம் நடந்த 4 போட்டிகளில் எந்தப் போட்டியும் டிராவில் முடியவில்லை. இந்த வாரம் பார்சிலோனா - லியான், லிவர்பூல் - பேயர்ன் முனிச் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் கோல் லெஸ் டிராவில் முடிந்தன. மறுநாள் நடந்த போட்டியில், மான்செஸ்டர் சிட்டி கடைசி ஐந்து நிமிடங்களில் இரண்டு கோல்கள் அடித்து வெற்றிபெற்றது. ஸ்பெயினின் அத்லெடிகோ மாட்ரிட் கிளப், யுவன்டஸை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. 

பார்சிலோனா vs லியான்

பார்சிலோனா வெற்றி பெற்றிருக்க வேண்டிய போட்டி. பால் பொசஷன் 63 சதவிகிதம் பார்சிலோனாவிடம்தான் இருந்தது. எல்லாமே சரியாக அமைந்தும் ஃபினிஷிங்கில் முன்கள வீரர்கள் மெஸ்ஸி, சுவாரஸ், டெம்பல்லே ஆகிய மூவரும் சொதப்பினர். அவுட் ஆஃப் ஃபார்மில் இருந்த சுவாரஸ் ஆடிய ஆட்டம் பார்சிலோனா ரசிகர்களுக்கு வருத்தமளித்தது. ஃப்ரீ கிக் வாய்ப்புகள் எதுவும் கோலாகவில்லை. பார்சிலோனா அடித்த 25 ஷாட்களில் 5 மட்டுமே ஆன் டார்க்கெட்.

முதல் பாதியில் அட்டாக்கிங் கேம் ஆடிய லியான் அணியினர், இரண்டாம் பாதியில் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். குறைந்தது இரண்டு கோல்களாவது அடித்திருக்க வேண்டிய பார்சிலோனாவை மெண்டி, டூபாய்ஸ், டெனெயர் சேர்ந்த டிஃபென்ஸ் கூட்டணி கோல் அடிக்க விடாமல் கட்டுப்படுத்தியது. முக்கியமாக, லியான் கோல் கீப்பர் அந்தோனி லோபஸ் செயல்பட்ட விதம் சிறப்பு. மெஸ்ஸி, டெம்பெல்லே இருவரும் உருவாக்கிய ஷாட்களை இரண்டு பக்கமும் பாய்ந்துபாய்ந்து தடுத்து அதகளப்படுத்தினார். பார்சிலோனாவின் அனைத்து கோல் வாய்ப்புகளையும் தடுத்து,  Away Goal அடிக்கவிடாமல் பார்த்துக்கொண்டது லியான். இரண்டாவது லெக் பார்சிலோனாவின் சொந்த மண்ணில் நடப்பது சாதகம் என்றாலும், Away Goal அடிக்காதது பின்னடைவே! 

லிவர்பூல் vs பேயர்ன் முனிச்

இந்தப் போட்டியிலும் கோல்கள் அடிக்கப்படவில்லை. இருந்தாலும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லை. ப்ரீமியர் லீக்கில் ஒரு போட்டியில் மட்டுமே தோற்று அபாரமான ஃபார்மில் இருந்தது லிவர்பூல். அந்த அணியின் முக்கிய தடுப்பாட்டக்காரர் வேன் டிஜ்க் தடை காரணமாக விளையாடாததால், லிவர்பூல் டிஃபென்ஸ் கொஞ்சம் பலவீனமாகவே காணப்பட்டது. ஆனால், தொடக்கம் முதலே இந்த சீஸனில் அதிக கோல்கள் அடித்த முகமது சாலா, ஃபிர்மினோ படை அட்டாக்கை தொடங்கியது. பேயர்ன் மேனேஜர் நிகோ கோவக், Away goal அடிப்பதில் ஆர்வம் காட்டாமல், எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். அவரது அந்தத் திட்டமும் வெற்றியடைந்தது. ஒவ்வொருமுறை சாலா, மனே அட்டாக்கிங் தேர்டில் வரும்போது, அவர்களைத் தடுக்க கிம்மிச், சூலே கூட்டணி தயாராக இருந்தது.

லிவர்பூல் அணியும் அவே கோல் விடக் கூடாது என்பதற்காக இயல்பான ஆட்டத்தை ஆடவில்லை. 90 நிமிடமும் ஆட்டம் சமநிலையில்தான் சென்றது. பால் பொசஷன், பாஸ் என எல்லா ஏரியாவிலும் இரு அணிகளும் சமநிலையிலேயே இருந்தன. ஹோம் கிரவுண்டில் வெற்றியடையாமல் போனது ஒருபக்கம் இருந்தாலும், அடுத்த லெக்கில் வேன் டிஜ்க் அணிக்குத் திரும்புவது, பேயர்ன் அணியின் முக்கிய டிஃபெண்டர் கிம்மிச் சஸ்பெண்ட் ஆனது லிவர்பூல் அணிக்குச் சாதகமான விஷயங்கள். 

மான்செஸ்டர் சிட்டி vs ஷால்கே

இந்த மேட்ச்தான் இந்த வாரத்தின் பெஸ்ட் போட்டி. அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் ஷால்கே அணியை ப்ரீமியல் லீக்கில் முதல் இடத்தில் இருக்கும் மான்செஸ்டர் சிட்டி எளிதாக வெல்லும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு. ஆனால், ஷால்கே, சிட்டி ரசிகர்களைக் கடைசி வரை பதற்றத்திலேயே வைத்திருந்தது. தொடக்கம் முதலே சிட்டி அட்டாக்கில் இறங்கியது. நிறைய ஷாட்கள் அடித்தும் கோலாக மாறவில்லை. முதல் பாதியின் 18-வது நிமிடத்தில் ஷால்கே கோல் கீப்பர் பாஸிங்கில் சொதப்ப, டேவிட் சில்வா பந்தை வாங்கி அகுவேராவுக்கு அசிஸ்ட் செய்ய, சிட்டிக்கு முதல் கோல் வந்தது. பிறகு 34-வது நிமிடத்தில் ஒட்டமென்டி ஹேண்ட் பால் செய்தது, VAR முடிவில் தெரியவந்தது. ஷால்கே அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. அதை கோலாக மாற்றினார் பென்டலப். 43-வது நிமிடத்தில் மீண்டும் சிட்டி வீரர் ஃபெர்ணான்டினோ டி பாக்ஸ் உள்ளே ஃபவுல் செய்ய, மீண்டும் அந்த அணிக்கு பெனால்டி வழங்கப்பட்டது. பென்டலப் அதை கோலாக மாற்றினார். முதல் பாதியில் சிட்டி 1-2 எனப் பின்தங்கியிருந்தது. 

68-வது நிமிடத்தில் மீண்டும் ஒட்டமென்டி ஃபவுல் செய்ய, இரண்டாவது மஞ்சள் அட்டைக் கொடுத்து வெளியேற்றப்பட்டார். ஏற்கெனவே ஒரு கோல் பின்னடைவில் இருந்த சிட்டி, 10 வீரர்களுடன் ஆடியது. இந்தச் சமயத்தில்தான் சிட்டி மேனேஜர் கார்டியாலோ ஒரு ’மாஸ்டர் மூவ்’ செய்தார். அகுவேராவுக்குப் பதிலாக லெராய் சானே மாற்று வீரராகக் களமிறக்கப்பட்டார். ஆட்டம் 90-வது நிமிடத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் 5 நிமிடங்கள். அப்போது சிட்டிக்கு கிடைத்தது ஒரு ஃப்ரீகிக்! அதை மேஜிக்கல் ஷாட் மூலம் கோலாக மாற்றி அசத்தினார் சானே. 90-வது நிமிடத்தில் மோரிஸ் அசிஸ்ட் செய்ய அதை லாகவமாக கடத்தி மற்றுமொரு கோல் அடித்து சிட்டியை வெற்றியடையச் செய்தார் ஸ்டெர்லிங். மூன்று அவே கோல்கள் அடித்த சிட்டி, காலிறுதிக்குச் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

யுவன்டெஸ் vs அத்லெடிகோ மாட்ரிட்

இரண்டும் பொதுவாக டிஃபென்சிவ் ஆட்டம் ஆடக்கூடிய அணிகள் என்பதால் பெரும்பாலான ஆட்டம் நடுகளத்தை சுற்றியே நடந்தன. ஆட்டத்தின் 10 வது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்த அற்புதமான ஃப்ரீகிக்கை பாய்ந்து தடுத்தார் அத்லெட்டிகோ கோல் கீப்பர் ஓப்லாக். அதன் பிறகு யுவன்டஸ் பெரிதாக வாய்ப்புகளை உருவாக்கவில்லை.முதல் பாதியில் இரண்டு அணிகளும் டிஃபென்ஸிவ் கேம் ஆடியதால், கோல் அடிக்கப்படவில்லை.

இந்தப் போட்டியில் பால் பொசஷனில் யுவன்டஸ் ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், பந்து இல்லாதபோது யுவன்டஸ் மீது அத்லெடிகோ செலுத்திய பிரஷர்தான் அவர்கள் இந்தப் போட்டியை வெல்ல உதவியது. ரொனால்டோவை பக்காவாக `மேன் மார்க்’ செய்து யுவன்டஸின் கோல் வாய்ப்புகளைத் தடுத்தனர் அத்லெடிகோ வீரர்கள். அதுபோக யுவன்டஸ் அணியில் ‘கிரியேட்டிவ்’ நடுகள ஆட்டக்காரர் எவரும் இல்லாதது அந்த அணிக்கு மிகவும் பின்னடைவாக அமைந்தது. ரொனால்டோ, மேண்டசுகிச் போன்ற பெஸ்ட் ஹெட்டர்கள் இருந்தும் அவர்களுக்கு க்ராஸ்கள் அவ்வளவாக வரவில்லை. டிபாலா - ரொனால்டோ கெமிஸ்ட்ரீ கிமினெஸ், கோடின் ஆகியோரின் தடுப்பு சுவரை உடைக்க முடியவில்லை.

இரண்டாம் பாதியில் ஆட்டத்தை மாற்றியது அத்லெட்டிகோ மாட்ரிட். கிரீஸ்மென், டியாகோ காஸ்டா படை அட்டாக் செய்யத் தொடங்கியது. 70 வது நிமிடத்தில் முன்னாள் யுவன்டஸ் வீரர் மொராட்டோ கோல் அடித்தார். ஆனால், VAR முடிவில் அது கோல் இல்லை எனத் தெரியவந்தது. 78 வது நிமிடத்தில் சென்டர் பேக் வீரர் கிமினெஸ் கோல் அடிக்க, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் மற்றொரு சென்டர் பேக் வீரர் கோடினும் கோல் அடித்தார். முடிவில் 2 - 0 என அத்லெட்டிகோ வென்றது. இரண்டு கோல்கள் வித்தியாசம், அவே கோல்கள் இல்லை... அடுத்த லெக்கில் அட்டாக்கில் சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே யுவன்டஸ் காலிறுதியைப் பற்றி நினைத்துப்பார்க்க முடியும்.