Published:Updated:

ஓய்வு பெற்றார் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்!

ஓய்வு பெற்றார் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்!
ஓய்வு பெற்றார் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்!
ஓய்வு பெற்றார் கால்பந்து வீரர் டேவிட் பெக்காம்!

லண்டன்: உலகின் தலைசிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான இங்கிலாந்தின் டேவிட் பெக்காம் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 1975ஆம் ஆண்டு இங்கிலாந்தில் லண்டன் நகரில் பிறந்த பெக்காம், 1993ஆம் ஆண்டு மேன்செஸ்டர் யுனைடெட் அணியில் இணைந்தார்.

பின்னர் 1996ஆம் ஆண்டு இங்கிலாந்து தேசிய அணியில் அவருக்கு இடம் கிடைத்தது. அந்த அணிக்காக 115 சர்வதேச போட்டிகளில் விளையாடிய பெக்காம், 2009ஆம் ஆண்டு சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

2003ஆம் ஆண்டு வரை மேன்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடிய அவர், 2004ஆம் ஆண்டு ரியல்மாட்ரிட் அணியில் இணைந்தார்.

##~~##
2007ஆம் ஆண்டு அந்த அணியில் இருந்து விலகி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கேலக்சி அணியில் இணைந்தார். இதற்கிடையே 2009-10ல் இத்தாலியின் ஏ.சி.மிலன் அணிக்காக ஓராண்டு காலம் லோனிலும் அவர் விளையாடினார்.
இந்த நிலையில் கால்பந்து பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக டேவிட் பெக்காம் அறிவித்துள்ளார். பெக்காமின் இந்த கால்பந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.