Published:Updated:

ஆச்சர்யம்... அதிர்ச்சி... ஆர்ப்பாட்டம்! - களைகட்டுது சாம்பியன்ஸ் லீக்!

ஆச்சர்யம்... அதிர்ச்சி... ஆர்ப்பாட்டம்! - களைகட்டுது சாம்பியன்ஸ் லீக்!
பிரீமியம் ஸ்டோரி
ஆச்சர்யம்... அதிர்ச்சி... ஆர்ப்பாட்டம்! - களைகட்டுது சாம்பியன்ஸ் லீக்!

ஆச்சர்யம்... அதிர்ச்சி... ஆர்ப்பாட்டம்! - களைகட்டுது சாம்பியன்ஸ் லீக்!

ஆச்சர்யம்... அதிர்ச்சி... ஆர்ப்பாட்டம்! - களைகட்டுது சாம்பியன்ஸ் லீக்!

ஆச்சர்யம்... அதிர்ச்சி... ஆர்ப்பாட்டம்! - களைகட்டுது சாம்பியன்ஸ் லீக்!

Published:Updated:
ஆச்சர்யம்... அதிர்ச்சி... ஆர்ப்பாட்டம்! - களைகட்டுது சாம்பியன்ஸ் லீக்!
பிரீமியம் ஸ்டோரி
ஆச்சர்யம்... அதிர்ச்சி... ஆர்ப்பாட்டம்! - களைகட்டுது சாம்பியன்ஸ் லீக்!
ஆச்சர்யம்... அதிர்ச்சி... ஆர்ப்பாட்டம்! - களைகட்டுது சாம்பியன்ஸ் லீக்!

ந்த சீசன் சாம்பியன்ஸ் லீக் தொடரை ஒற்றை வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் அது ‘கம்பேக்!’ ஒன்றல்ல, இரண்டல்ல, நான்கு கம்பேக் வெற்றிகள். எல்லாமே யாருமே எதிர்பார்க்காத வெற்றிகள். சில, கனவிலும்கூட நினைத்துப் பார்க்காத வெற்றிகள். எதிர்பாராத ஆச்சர்யங்களையும் அதிர்ச்சிகளையும் அளித்த 2019 சாம்பியன்ஸ் லீக் சீசனின் ரீகேப் இங்கே.

ஆச்சர்யம்... அதிர்ச்சி... ஆர்ப்பாட்டம்! - களைகட்டுது சாம்பியன்ஸ் லீக்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹீரோ டூ ஜீரோ!

மூன்று முறை தொடர்ந்து சாம்பியன் பட்டம் வென்ற ரியல் மாட்ரிட் அணி, இம்முறை காலிறுதிக்கே நுழையாமல் வெளியேறியது. முதல் சுற்றில் 2-1 என முன்னிலையோடு இருந்த அந்த அணி, சொந்த மைதானத்தில் அயாக்ஸ் அணியிடம் 4-1 எனப் படுதோல்வி அடைந்து வெளியேறும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால், ஜிடேன், கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாமல் தடுமாறத் தொடங்கிய அந்த அணியின் மோசமான ஆட்டம், அந்த அதிர்ச்சியை அரங்கேற்றியது.

ஆச்சர்யம்... அதிர்ச்சி... ஆர்ப்பாட்டம்! - களைகட்டுது சாம்பியன்ஸ் லீக்!

அயாக்ஸ் அணி, போர்னபோ மைதானத்துக்குள் நுழைந்தபோது, நிச்சயம் யாருமே இந்த முடிவை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அயாக்ஸ் அணி வீரர்கள்கூட தங்கள் கனவிலும் இதை நினைத்திருக்கமாட்டார்கள். 18 நிமிடங்களில் இரண்டு கோல்கள் வாங்கி பின்தங்கிய ரியல் மாட்ரிட், அடுத்த 18 நிமிடங்களில் லூகாஸ் வஸ்க்யூஸ், வினிசியஸ் ஜூனியர் என இரண்டு முக்கிய வீரர்களை காயத்தால் இழந்தது. இரண்டாவது பாதியிலும் அயாக்ஸ் பட்டையைக் கிளப்பி கோலடித்து 3-0 என முன்னிலை பெற்றது. அசேன்சியோ, ஒரு கோல் அடித்து, மாட்ரிட் ரசிகர்களுக்கு நம்பிக்கை விதைக்க, அடுத்த இரண்டாவது நிமிடம் ஃப்ரீ கிக்கில் கோல் வாங்கியது மாட்ரிட். 4-1. எல்லாம் முடிந்துவிட்டது.

ஆச்சர்யம்... அதிர்ச்சி... ஆர்ப்பாட்டம்! - களைகட்டுது சாம்பியன்ஸ் லீக்!



முதல் லெக் ஆட்டத்தின்போது, மாட்ரிட் கேப்டன் செர்ஜியோ ரமோஸ் வேண்டுமென்றே மஞ்சள் அட்டை பெற்று, இந்த ஆட்டத்துக்கு சஸ்பெண்ட் ஆனார். ஏனெனில், சாம்பியன்ஸ் லீக் தொடரில், இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்றால், அடுத்த ஆட்டம் ஆட முடியாது. ஒருவேளை, அதைக் காலிறுதி, அரையிறுதி போட்டியின்போது பெற நேர்ந்தால் கஷ்டமாகிவிடும் என்பதால், போன ஆட்டத்தில் பெற்று, பலம் குறைந்த அயாக்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் வெளியே உட்கார முடிவு செய்து அப்படிச் செய்திருந்தார் அவர். ஆனால், பேர்னபோவின் கண்ணாடி அறைக்குள் அமர்ந்திருந்த அவர் கண் முன்பாகவே, தன் அணியின் டிஃபன்ஸ் நொறுங்கியதைக் கண்டார்.

டிஃபண்டர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை, ஃபுல் பேக் வீரர்கள் சரியாக, டிஃபன்ஸிவ் தேர்டில் டிராக் செய்யவில்லை, நடுகள வீரர்கள் அயாக்ஸ் வீரர்களைச் சரியாக மேன் மார்க் செய்யவில்லை என ஏகப்பட்ட பஞ்சாயத்து. ஓர் அணி தோற்பதற்கு இதைவிட வேறு எந்தத் தவறும் செய்ய  தேவையில்லை. அனைத்துத் தவறுகளையும் மாட்ரிட் களத்தில் செய்தது. எதிராளிகளைக் குறைத்து மதிப்பிட்டு, இவற்றை விடப் பெரிய தவற்றை கேப்டன் ரமோஸ் முதல் போட்டியிலேயே செய்ய, மூன்று முறை தொடர்ந்து வென்ற தொடரின் இரண்டாம் சுற்றிலேயே இம்முறை வெளியேறியது மாட்ரிட்.  

தி சோல்ஷர் எஃபக்ட்!


மாட்ரிட் வெளியேறியதற்கு அடுத்த நாள், ஒரே இரவில் இரண்டு கம்பேக் வெற்றிகள் அரங்கேறின. கடந்த ஆண்டு பார்சிலோனாவுக்கு அதிர்ச்சியளித்த ரோமா அணிக்கு பேரதிர்ச்சி கொடுத்தது போர்டோ. முதல் சுற்றில் 2-1 என ரோமா வெற்றிபெற, அடுத்த சுற்றில் 2-1 என வெற்றி பெற்றது போர்டோ. மொத்த கோல்கள், அவே கோல்கள் எல்லாமே சமமாக இருக்க, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதில் கிடைத்த பெனால்ட்டியை அலெக்ஸ் டெல்லாஸ் கோலடிக்க, 4-3 என்ற கணக்கில் காலிறுதிக்குள் நுழைந்தது போர்டோ. 

ஆச்சர்யம்... அதிர்ச்சி... ஆர்ப்பாட்டம்! - களைகட்டுது சாம்பியன்ஸ் லீக்!

இன்னொரு ஆட்டம்தான் அதைவிட மிரட்டல் ஆட்டம். தொடர் சொதப்பல்களால் பயிற்சியாளர் மொரினியோவை நீக்கிவிட்டு, முன்னாள் வீரர் சோல்ஸ்கரை தற்காலிகமாக நியமித்தது மான்செஸ்டர் யுனைடட். பிரீமியர் லீக் போட்டிகளில் பட்டையைக் கிளப்பியவர்கள், பி.எஸ்.ஜி அணியுடனான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியின் முதல் சுற்றில் 2-0 என தோல்வியடைந்தனர். அதன்பிறகு கம்பேக் எல்லாம் வாய்ப்பே இல்லை என்று நினைக்க, அதை மாற்றிக் காட்டியது யுனைடட். 

இரண்டாவது சுற்றின், 2-வது நிமிடத்திலேயே கோலடித்து கம்பேக்கைத் தொடங்கியது யுனைடட். அதன்பிறகு இரு அணிகளும் ஒரு கோல் அடிக்க, 2-1 என்ற முடிவை நோக்கி ஆட்டம் நகர்ந்துகொண்டிருந்தது. ஆட்டம் முடிந்தால் பி.எஸ்.ஜி காலிறுதிக்குள் நுழைந்துவிடும். ஆனால், அங்குதான் அந்த மிகப்பெரிய ட்விஸ்ட் நடந்தது. இஞ்சுரி டைமின் நான்காவது நிமிடத்தில், யுனைடட் அணிக்குப் பெனால்டி கிடைக்க, அதை கோலாக்கி, அந்த அணியை அடுத்த சுற்றுக்கு அழைத்துச் சென்றார் ரேஷ்ஃபோர்ட். யாரும் எதிர்பாராத கம்பேக் நடந்தது.

1999-ம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் மான்செஸ்டர் யுனைடட், பேயர்ன் மூனிச் அணிகள் மோதின. கடைசி நிமிடம் வரை பேயர்ன் 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. 90-வது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தில் நீடித்தது யுனைடட். இஞ்சுரி டைம். யுனைடட் அணிக்குக் கார்னர் கிடைக்க, அதை எடுக்கிறார் பெக்கம். முதல் கோலை அடித்த டெரி ஷெரிங்கம், அதை தட்டிவிட, அந்தப் பந்தை கோலாக்கினார் அப்போதைய மான்செஸ்டர் யுனைடட் ஃபார்வேர்ட் சோல்ஸ்கர். கால்பந்து உலகின் மகத்தான கம்பேக் வெற்றியாகக் கருதப்படும் அந்தப் போட்டியின் நாயகன், பயிற்சியாளராகவும் தன் அணிக்கு கம்பேக் வெற்றி பெற்றுக்கொடுக்க, மெர்சலானார்கள் யுனைடட் ரசிகர்கள். 

ஆச்சர்யம்... அதிர்ச்சி... ஆர்ப்பாட்டம்! - களைகட்டுது சாம்பியன்ஸ் லீக்!

நான் ராஜா... எங்கேயும் நான் ராஜா...

யுவன்டஸ் - அத்லெடிகோ மாட்ரிட் ஆட்டம். வாண்டா மெட்ரோபொலிடான அரங்கில், 2-0 என யுவன்டஸ் அணியை வீழ்த்துகிறது அத்லெடிகோ. கிறிஸ்டியானோ ரொனால்டோவால் எதுவும் செய்யமுடியவில்லை. ‘மாட்ரிட்டும் போச்சு, ரொனால்டோவும் போயிடுவார்' என்று புலம்பினார்கள் ரசிகர்கள். ஆனால், அதையெல்லாம் பொய்யாக்கி, மாபெரும் கம்பேக் கொடுத்தார் அந்த போர்ச்சுகல் நாயகன்.

‘‘அத்லெடிகோ மாட்ரிட் அணிக்கு எதிராக மூன்று கோல் வித்யாசத்தில் ஜெயிப்பதெல்லாம் நடக்காத காரியம்...’' -  வல்லுனர்கள் முதல் ரசிகர்கள் வரை எல்லோரும் சொன்னார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதில் தவறேதும் இல்லை. ஐரோப்பாவின் மாபெரும் அரணை உடைப்பது எளிதில்லை. அதிலும் 90 நிமிடங்களில் 3 முறை என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாது ஒன்று. அதுவும் கடைசி 5 போட்டிகளில் (463 நிமிடங்கள்) ஒரு கோல் கூட வாங்காமல் அசுர பலத்தோடு இருக்கும்போது, யுவன்டஸ் கம்பேக் கொடுப்பதற்கெல்லாம் ஏது வாய்ப்பு? யுவன்டஸ் ரசிகர்களே நம்பிக்கை இல்லாமல்தான் மைதானத்துக்குள் நுழைந்திருப்பார்கள். 

ஆச்சர்யம்... அதிர்ச்சி... ஆர்ப்பாட்டம்! - களைகட்டுது சாம்பியன்ஸ் லீக்!

ரொனால்டோவின்  ஜீனியஸ் மூவ்மென்ட்களால், இரண்டு முறை உடைந்தது அத்லெடிகோவின் மகத்தான அரண். 27-வது நிமிடம், இடது விங்கில் இருந்து இரண்டாவது போஸ்ட்டுக்கு பெர்னார்டேஷி போட்ட கிராஸை, புயலாகப் பாய்ந்து, யுவான்ஃப்ரானைத் தாண்டிக் குதித்து ஹெட்டர் செய்து கோலாக்கினார் சி.ஆர்-7. இரண்டாவது கோல், அதைவிட அதி அற்புதம். ஜோ கேன்சலோ போட்ட கிராஸ், பெனால்ட்டி ஏரியாவுக்குள் நுழைந்தது. டியேகோ கோடின், ஜோஸே கிமினஸ் இருவருக்கும் இடையே வருகிறது. இருவரும் குதிக்கிறார்கள். கோடின் தலைக்குமேல் செல்கிறது பந்து. இருவருக்கும் நடுவில் பாய்ந்து, மீண்டும் ஹெட்டர் செய்கிறார் ரொனால்டோ. பந்தை அட்டகாசமாக டைவ் அடித்துத் தடுக்கிறார் கோல்கீப்பர் ஓப்லாக். ஆனால், அதற்கு முன்பாகவே பந்து கோல் எல்லையைத் தாண்டிவிட்டது. அது சாதாரண ஹெட்டர் இல்லையே! துப்பாக்கியிலிருந்து கிளம்பிய தோட்டாவாகத்தானே கோல் போஸ்டுக்குள் நுழைந்தது. அதை எப்படித் தடுப்பது?! யுவன்டஸ் 2, அத்லெடிகோ 0. யுத்தம் சமநிலைக்கு வந்தது. 

ஆச்சர்யம்... அதிர்ச்சி... ஆர்ப்பாட்டம்! - களைகட்டுது சாம்பியன்ஸ் லீக்!
ஆச்சர்யம்... அதிர்ச்சி... ஆர்ப்பாட்டம்! - களைகட்டுது சாம்பியன்ஸ் லீக்!

அதன்பிறகும் யுவன்டஸ் ஆதிக்கம் அடங்கவில்லை. 86-வது நிமிடம் ஆட்டம் மொத்தமாக முடிவுக்கு வந்தது. இதுபோன்ற பெரிய சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்கள், ரொனால்டோவின் பெனால்ட்டி இல்லாமல் முடிவுக்கு வந்ததில்லை. 2014 சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியை, இதே அத்லெடிகோவுக்கு எதிராக பெனால்ட்டியோடு முடித்து வைத்தார் ரொனால்டோ. 2016 ஃபைனலின் டை பிரேக்கரும், இவரது பெனால்ட்டியோடுதான் முடிந்தது.  இப்போதும் அத்லெடிகோ மாட்ரிட்டை    தன்   பெனால்ட்டியால் வீழ்த்தினார் ரொனால்டோ. முதல் இரண்டு கோல்களையும் சாதாரணமாகக் கொண்டாடியவர், இப்போது தன் டிரேட் மார்க் ஸ்டைலில் காற்றில் பறந்து கொண்டாடினார். அலையன்ஸ் மைதானம் சிலிர்த்தது.

90 நிமிடங்களின் முடிவில், யாரும் எதிர்பாராததை நிகழ்த்திக்காட்டியது யுவன்டஸ். சாம்பியன்ஸ் லீக் வரலாற்றின் மிகச் சிறந்த கம்பேக் ஒன்றை அரங்கேற்றினார் கிறிஸ்டியானோ. ஒரு 34 வயது வீரருக்கு 100 மில்லியன் யூரோக்கள் கொடுத்தது முட்டாள்தனமான முடிவாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகையின் ஒவ்வொரு யூரோவுக்குமான பதிலை ரொனால்டோ கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

மற்ற போட்டிகளில் மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல், பொருஷியா டார்ட்மண்ட், பார்சிலோனா அணிகள் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்துள்ளனர். யுவன்டஸ் அணி அயாக்ஸ் அணியோடு மோதுகிறது. லிவர்பூல் போர்டோவை எதிர்கொள்கிறது. மான்செஸ்டர் யுனைடட், பார்சிலோனாவைச் சந்திக்கிறது. இங்கிலாந்து டெர்பியில் ஸ்பர்ஸ், மான்செஸ்டர் சிட்டியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

ஆட்டம் தொடர்கிறது!

மு. பிரதீப் கிருஷ்ணா