Published:Updated:

ஐஎஸ்எல்... ஐ லீக்... இது இந்தியாவின் கால்பந்து கனவு!

ஐஎஸ்எல்... ஐ லீக்... இது இந்தியாவின் கால்பந்து கனவு!
பிரீமியம் ஸ்டோரி
ஐஎஸ்எல்... ஐ லீக்... இது இந்தியாவின் கால்பந்து கனவு!

ஐஎஸ்எல்... ஐ லீக்... இது இந்தியாவின் கால்பந்து கனவு!

ஐஎஸ்எல்... ஐ லீக்... இது இந்தியாவின் கால்பந்து கனவு!

ஐஎஸ்எல்... ஐ லீக்... இது இந்தியாவின் கால்பந்து கனவு!

Published:Updated:
ஐஎஸ்எல்... ஐ லீக்... இது இந்தியாவின் கால்பந்து கனவு!
பிரீமியம் ஸ்டோரி
ஐஎஸ்எல்... ஐ லீக்... இது இந்தியாவின் கால்பந்து கனவு!

6 மாதங்கள், 95 போட்டிகள் என கால்பந்து அதகளத்துக்குப் பின் இந்தியன் சூப்பர் லீக் (ISL) சீசன் 5 ஒரு புதிய சாம்பியனை கண்டெடுத்துள்ளது. “ஐபிஎல்-தான் எங்களுக்கு ராசி இல்ல, ஐஎஸ்எல் நல்ல ராசிதான்” என இந்த முறை ஐஎஸ்எல் கோப்பையை வென்று கெத்து காட்டியிருக்கிறது பெங்களூர் எஃப்.சி அணி. கடந்த ஆண்டு சென்னையின் எஃப்.சியிடம் இறுதி போட்டியில் தோல்வியுற்று, கோப்பைத் தேனை ருசிக்க முடியாமல் போன போது “அடுத்த ஆண்டு நாங்கள் மீண்டும் வருவோம், கோப்பையை வெல்வோம்” என்று தன்னம்பிக்கையுடன் சொன்னார் அந்த அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. அவர் சொன்னது போலவே இறுதி போட்டியில் பலமான எஃப்.சி கோவாவை வீழ்த்தி இந்த முறை கோப்பையை ருசித்திருக்கிறது பெங்களூரு. தொடக்க ஆட்டத்திலேயே நடப்பு சாம்பியனான சென்னையின் எஃப்.சி அணியை வீழ்த்தி வெற்றியுடன் சீசனை தொடங்கியது பெங்களூர் அணி.  சென்னை அணிக்கோ கெட்ட கனவாக நினைத்து மறக்க வேண்டிய சீசனாக இந்த சீசன்  அமைந்தது. இந்தத் தொடரில் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே வென்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது சென்னை. பெங்களூர் அணி இதற்கு நேரெதிராக தொடர்ந்து 11 போட்டிகளில் தோல்வியே இல்லாமல், நான்கு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பிடித்தது.

ஐஎஸ்எல்... ஐ லீக்... இது இந்தியாவின் கால்பந்து கனவு!

பெங்களூர் சாதித்தது எப்படி?

2 ஆண்டுகள் பெங்களூர் அணியின் பயிற்சியாளராக இருந்த ஆல்பெர்ட் ரோக்கா பதவியிலிருந்து விலகியபோது, வீரர்கள் அவரின் உதவியாளரான கார்லஸ் குவாட்ரட்தான் புதிய பயிற்சியாளராக வேண்டும் என ஒருமித்த குரலில் சொன்னார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பயிற்சியாளர் மாறினாலும் அணியின் தத்துவம் மாறவில்லை. “Attacking is the best defence” என்று சொல்வார்கள். அதுதான் பெங்களூர் அணியின் சக்சஸ் சீக்ரெட். பந்தை அவ்வளவு எளிதாக எதிரணிக்கு விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அதே சமயம் எதிரணியின் டிஃபென்ஸ் அரணை உடைப்பதில் மும்முரமாக இருப்பார்கள். அந்த அடையாளத்தை எந்த சூழ்நிலையிலும் மாற்ற முயற்சிக்கவில்லை குவாட்ரட். உதாரணத்துக்கு, பெங்களூர் அணியின் முக்கிய வீரர் மிக்கு தொடரின் பாதியில் காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் போக நேரிட்டது. கடந்த சீசனில் இவர் 15 கோல்கள் அடித்து அந்த அணியின் டாப் ஸ்கோரராக திகழ்ந்தார். இப்படி ஒரு வீரருக்கு காயம் ஏற்படும் போது அணியின் அட்டாக்கிற்கு பெரும் சிக்கல் ஏற்படும் தானே..? இந்த சூழ்நிலையில் மற்ற பயிற்சியாளர்கள் தடுப்பாட்டத்தில் பலத்தை கூட்டத்தான் திட்டம் தீட்டுவார்கள். ஆனால், சுனில் சேத்ரியை நடுகளத்தில் ஆட வைப்பது அவரது கேமை பாதிக்கும் என்பதால் இன்னும் அதிகமாக அட்டாக் செய்யும்படி வீரர்களுக்கு அறியுறித்தினார் குவாட்ரட். நடுகளத்தில் ஆடும் உடான்டா சிங் முன் சென்று 5 கோல் அடித்தார். அவர்களுக்கு அடுத்து அதிகம் கோல் அடித்தவர் ராகுல் பெக்கே என்னும் தடுப்பாட்டக்காரர். அவர்களின் இந்த அட்டாக்கிங் அணுகுமுறை தான் அரையிறுதியின் முதல் லெக்கில் நார்த்-ஈஸ்ட் யுனைட்டெட் அணியிடம் 2-1 என தோல்வியுற்று இரண்டாவது லெக்கில் 3-0 என வெல்ல காரணமாக இருந்தது.

கோல் அடிக்க முற்படும் போது பால் பொசஷன் அடிக்கடி இழக்க நேரிடும். அது எதிரணிக்கு கோல் அடிப்பதற்கு வாய்ப்பாகவும் மாறும். ஆனால் அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல், பயமின்றி அட்டாக் செய்ததற்கு காரணம் டிஃபெண்டர்கள் கொடுத்த நம்பிக்கைதான். நிஷு குமார், பெக்கே, ஜுயானன், கப்ரா ஆகியோர் கட்டிய டிஃபென்ஸ் அரணை முறியடிக்க முடியாமல் எதிரணியர் தள்ளாடினர். இந்த சீசனின் டாப் ஸ்கோரிங் அணியான கோவா, பெங்களூருக்கு எதிராக ஒரே ஒரு கோல் மட்டும் தான் அடித்தது. பெங்களூர் அணியின் கோல்கீப்பர் இந்த தொடரில் 61 சேவ்கள் செய்து ‘கோல்டன் க்ளவ்’ விருதைப் பெற்றார்.

ஐஎஸ்எல்... ஐ லீக்... இது இந்தியாவின் கால்பந்து கனவு!

பெங்களூரின் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் நம்பிக்கை! வீரர்கள் கோச் மீதும், கோச் வீரர்கள் மீதும், வைத்திருந்த நம்பிக்கை தான் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம்.  குவாட்ரட் தன் வீரர்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். மற்ற அணிகள் வீரர்களை, ஃபார்மேஷனை அடிக்கடி மாற்றிக் கொண்டிருக் கையில், குவாட்ரட் அதைத் தவிர்த்தார். அது அணியின் கெமிஸ்ட்ரியை உயர்த்தியது. விளைவு தொடர்ந்து 11 போட்டிகள் தோல்வியே இல்லாமல் இறுதியில் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து , கோப்பையையும் தட்டிச் சென்றது பெங்களூர் எஃப்.சி.

வாழ்த்துகள்!

ந்தியாவின் முதன்மையான கால்பந்து தொடரான ஐ-லீக் கோப்பையை முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்திருக்கிறது சென்னை சிட்டி எஃப்.சி! கடந்த சீசன்வரை புள்ளிப்பட்டியலில் இரண்டாம் பாதியில் போராடிக்கொண்டிருந்த அந்த அணி, இந்த சீசனின் முதல் வாரத்திலிருந்தே டாப் ஸ்பாட்டில் அமர்ந்து பட்டையைக் கிளப்பியது. யாரும் எதிர்பார்க்காத ஓர் அணி, இந்தக் கோப்பையை வெல்லக்காரணம் என்ன..? 

ஐஎஸ்எல்... ஐ லீக்... இது இந்தியாவின் கால்பந்து கனவு!

சிங்கப்பூரைச் சேர்ந்த நவாஸை, பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்தபோது, யாரும் இப்படியான மாற்றத்தை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அணி வீரர்களில், அவர்கள் பொசிஷன்களில், ஆட்ட அணுகுமுறையில், சென்னை அணியின் ஆட்டிட்யூடில்... அனைத்திலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார் நவாஸ். ஐ-லீக் தொடருக்கு முன்பான சென்னை அணியின் 3 மாத ப்ரீ சீசனில், தனக்கான ஆயுதங்களைத் தயார் செய்தார் நவாஸ்.

பொதுவாக நம் ஊரில், ஃபுல் பேக் ஆடும் வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தில் முக்கிய அங்கம் வகிக்கமாட்டார்கள். ஆனால், நவாஸ் அதையும் எதிர்பார்த்தார். ஃபுல் பேக்குகள், எதிரணியின் பாக்ஸ் வரை சென்று கிராஸ் போட்டுவிட்டு, உடனடியாக தங்கள் பாக்சுக்கு வந்து டிஃபண்ட் செய்யவேண்டும் என்று விரும்பினார். ஏற்கெனவே இருக்கும் வீரர்களை அதற்கு தயார் செய்யாமல், 90 நிமிடமும் களத்தில் சுழலக்கூடிய, கிராஸ், பாஸ் என அனைத்திலும் கில்லியாக இருக்கும் நடுகள வீரர்களை ஃபுல் பேக் பொசிஷனுக்குத் தயார் செய்தார். இப்படி ஒவ்வொரு பொசிஷனிலும், வீரர்களின் குணத்திற்கு ஏற்ப, அவர்களின் பொசிஷனை மாற்றினார். 

துறுதுறுவென துடிப்பாக ஓடும் நடுகள வீரர் அஜித் குமார் லெஃப்ட் பேக் ஆனார். உயரமாகவும் திடமாகவும் இருக்கும் அட்டாகிங் மிட்ஃபீல்டர் பிரவிட்டோ, ஹோல்டிங் மிட்ஃபீல்டராக மாற்றப்பட்டார். நல்ல உயரமும், ஏரியல் பலமும் கொண்ட நடுகள வீரர் கௌரவ் போரா சென்டர் பேக் பொசிஷனில் விளையாடினார். கிராசிங்கில் கில்லியான எட்வின் சிட்னி டிஃபன்ஸின் வலது ஏரியாவில் கில்லியானார். உயரமும், உடல்வாகும் கொண்ட முன்கள வீரர் ஜோசப் கப்லான் நடுகளம், விங் எனப் பல ஏரியாக்களில் புதிய அனுபவம் பெற்றார். 

ஐஎஸ்எல்... ஐ லீக்... இது இந்தியாவின் கால்பந்து கனவு!

இந்த பொசிஷன் மாற்றங்கள், அணியின் அணுகுமுறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நவாஸ் செய்த இன்னொரு மிகப்பெரிய விஷயம் - 5 ஸ்பெயின் வீரர்களை சென்னை அணிக்கு ஒப்பந்தம் செய்தது! கோல்கீப்பர் நௌசத் சான்டானா, டிஃபண்டர் ராபர்டோ ஸ்லாவா இருவரும் பின்களத்தில் பலம் கூட்ட, பெட்ரோ மான்சி, நெஸ்டர் கார்டிலோ, சேன்ட்ரோ ராட்ரிக்யூஸ் அடங்கிய மூவர் குழு, மற்ற அணிகளின் பின்களத்தைப் பதம் பார்த்தது. இவர்களின் ஸ்பானிஷ் ஸ்டைல் ஃபுட்பால், ஐ-லீக் தொடரில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. சென்னை ஆடிய ஒவ்வொரு போட்டியிலும் கோல் மழை பொழிந்தது. 20  ஆட்டங்களில் 49 கோல்கள் அடித்தது சென்னை சிட்டி. கடந்த 9 சீசன்களில் இதுதான் டாப் கோல் ஸ்கோரிங் ரெக்கார்டு.

இவர்கள் மட்டும் கோலடிப்பதில் கவனம் செலுத்தாமல், சக இந்திய வீரர்களோடு இணைந்து ஆடியதுதான் அந்த அணியின் மிகப்பெரிய வெற்றி. ரொமேரியோ, ரஞ்சித் என யார் நல்ல பொசிஷனில் இருந்தாலும் யோசிக்காமல் அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்தனர். பயிற்சியிலும் சரி, களத்திலும் சரி இந்திய வீரர்களுடன் ஒவ்வொரு நுட்பங்களையும் ஆலோசிக்கின்றனர். இந்திய வீரர்களுடன் மிகச் சிறப்பான கெமிஸ்ட்ரியை ஏற்படுத்திக்கொண்டனர்.

இந்த வெற்றியை சென்னை என்ற பெயருக்காக மட்டும் கொண்டாடினால் போதாது. இது உண்மையிலேயே சென்னையின், தமிழகத்தின் கால்பந்துக்குக் கிடைத்த வெற்றி. மற்ற சென்னை விளையாட்டு அணிகளைப்போல் பெயரளவில் மட்டும் ஊர்ப் பெயரைச் சுமக்காமல், 17 தமிழக வீரர்களை ஒப்பந்தம் செய்து, உண்மையிலேயே தமிழக அணியாகவே இருக்கிறது சென்னை சிட்டி. இறுதிப் போட்டியில் ஆடிய எட்வின் சிட்னி, மைக்கேல் ரெஜின், ஸ்ரீராம், அஜித், ரொமேரியோ ஐந்து பேரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தவிர்த்து, பாண்டியன், பிரவிட்டோ, விஜய் போன்றவர்களும் தொடர்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தார்கள். தமிழகத்தைச் சேர்ந்த 17 வீரர்களை சாம்பியன்கள் ஆக்கியதுதான் சென்னை சிட்டி அணியின் மிகப்பெரிய வெற்றி.

ராம் கார்த்திகேயன்