Published:Updated:

90 நிமிடங்கள்... 9 கோல்கள்... 9 நாள்கள்... எம்பாப்பே- கவானி- நெய்மர் கூட்டணியின் முரட்டு பதிலடி! #PSG

90 நிமிடங்கள்... 9 கோல்கள்... 9 நாள்கள்... எம்பாப்பே- கவானி- நெய்மர் கூட்டணியின் முரட்டு பதிலடி! #PSG

மூவரும் தங்கள் பொசிஷன்களை `swap' செய்துகொண்டே இருக்க, யாரை யார் மார்க் செய்வது என்று புரியாமல் தடுமாறினார்கள் கின்காம்ப் டிஃபண்டர்கள். எம்பாப்பே - நெய்மர் இருவரும் கின்காம்ப் பாக்சுக்குள்ளேயே '1-2 பாஸ்' போட்டு கோல் அடித்ததெல்லாம் உட்சபட்ச கொடுமை. 

பிரான்ஸின் முதன்மைக் கால்பந்து தொடரான `லீக் 1'-ல் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் ஆதிக்கம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 6 சீசன்களில், 5 முறை சாம்பியன் பட்டம் வென்று அசத்திய அந்த அணி, இந்த சீசனில் தோல்வியே சந்திக்காமல் மிரட்டிக்கொண்டிருக்கிறது. நெய்மர், கவானி, எம்பாப்பே அடங்கிய அசத்தல் முன்களம் கோல்மழை பொழிய, முன்னாள் யுவன்டஸ் கேப்டன் கியான்லூயி பஃபன் கோல் போஸ்ட்டில் கலக்க, 19 போட்டிகளில், 17 வெற்றி, 2 டிரா என 53 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது பி.எஸ்.ஜி. 

வலது விங்கில் உலகக் கோப்பை நாயகன் எம்பாப்பே, சென்டர் ஸ்ட்ரைக்கராக அனுபவ கவானி, இடது விங்கில் உலகின் காஸ்ட்லி வீரர் நெய்மர் என MCN என்னும் இந்த மூவர் கூட்டணி மிரட்டுகிறது ... கால்பந்து உலகில் இப்படி அதிரடி முன்களம் கொண்ட அணி பி.எஸ்.ஜி தான். இந்தப் போட்டிக்கு முன்புவரை, பி.எஸ்.ஜி அடித்திருந்த 52 கோல்களில், இவர்கள் மட்டுமே 36 கோல்கள் (நெய்மர் - 11, கவானி - 11 , எம்பாப்பே - 14) அடித்திருந்தனர். பலமான லயான், மார்சிலே அணிகளே இந்தக் கூட்டணியிடம் திண்டாடின. 

90 நிமிடங்கள்... 9 கோல்கள்... 9 நாள்கள்... எம்பாப்பே- கவானி- நெய்மர் கூட்டணியின் முரட்டு பதிலடி! #PSG

எதிர்த்து விளையாடிய ஒவ்வோர் அணியையும் இவர்கள் பந்தாடிக்கொண்டிருக்க, இந்த வாரம் கின்காம்ப் அணி சிக்கிக்கொண்டது. ஜனவரி 10-ம் தேதியன்று பி.எஸ்.ஜி அணி தொடர்ந்து 5 முறை வென்றிருந்த `Coupe de la Ligue' தொடரிலிருந்து அந்த அணியை வெளியேற்றி இருந்தது கின்காம்ப். 9 நாள்கள் கழித்து, இரண்டு அணிகளும் மீண்டும் சந்திக்க, அந்தத் தோல்விக்கு பி.எஸ்.ஜி சொன்ன பதில் - 9 கோல்கள்! ஆம்... 90 நிமிடங்களில் 9 கோல்கள்! அதில் இந்த மூவர் கூட்டணி அடித்தது மட்டும் 8 கோல்கள்! 

சக பிரேசில் வீரர் டேனி ஆல்வஸ் பாக்சுக்கு வெளியே இருந்து போட்ட த்ரூ பாலை, மிக அழகாகக் கட்டுப்படுத்தி, 12 நிமிடத்தில் கோல் கணக்கைத் தொடங்கிவைத்தார். முன்களத்தில் கில்லியாக இருக்கும் மூவரும் தங்கள் பொசிஷன்களை `swap' செய்துகொண்டே இருக்க, யாரை யார் மார்க் செய்வது என்று புரியாமல் தடுமாறினார்கள் கின்காம்ப் டிஃபண்டர்கள். எம்பாப்பே - நெய்மர் இருவரும் கின்காம்ப் பாக்சுக்குள்ளேயே '1-2 பாஸ்' போட்டு கோல் அடித்ததெல்லாம் உட்சபட்ச கொடுமை. 

90 நிமிடங்கள்... 9 கோல்கள்... 9 நாள்கள்... எம்பாப்பே- கவானி- நெய்மர் கூட்டணியின் முரட்டு பதிலடி! #PSG

இரண்டு கோல்கள் அடித்து முன்னணியில் இருந்தாலும், தொடர்ந்து எதிரணியை `press' செய்தனர் பி.எஸ்.ஜி வீரர்கள். விளைவு - முதல் பாதியிலேயே மூன்றாவது கோல்! 3-0 என டிரெஸ்ஸிங் ரூம் சென்ற பி.எஸ்.ஜி வீரர்கள், திரும்பி வந்ததும் ருத்ரதாண்டவம் ஆடினர். 24 நிமிட இடைவெளியில் 6 கோல்கள். அதில் 17 நிமிடத்தில் ஹாட்ரிக் அடித்து அசத்தினார் எடின்சன் கவானி. நெய்மர் கோலடிக்க எம்பாப்பே அசிஸ்ட் செய்வது, எம்பாப்பே கோலடிக்க கவானி அசிஸ்ட் செய்வது என மூவருக்குள்ளும் செம கெமிஸ்ட்ரி. போதாக்குறைக்கு டி மரியா, டிராக்ஸ்லர் என அனைவரும் அட்டாக்கில் இறங்க, பி.எஸ்.ஜி அணியின் ஆட்டம் அட்டகாசமாக இருந்தது. அதிலும் குறிப்பாக அந்த ஐந்தாவது கோல்...!

90 நிமிடங்கள்... 9 கோல்கள்... 9 நாள்கள்... எம்பாப்பே- கவானி- நெய்மர் கூட்டணியின் முரட்டு பதிலடி! #PSG

கார்னர் வாய்ப்பு. பந்தை பாக்சுக்குள் அடிக்காமல், அருலில் நின்ற டி மரியாவுக்கு பாஸ் போட்டார் இடது கார்னரில் நின்றிருந்த ஜூலியன் டிராக்ஸ்லர். புயல் வேகத்தில் பாக்சுக்குள் ட்ரிப்பிள் செய்து வந்தார் டி மரியா. டிஃபண்டர்கள் சூழ்ந்தபோது, நெய்மருக்கு பாஸ் போட்டுவிட்டு அவர்களைக் கடந்தார். அந்த ஒரு நொடிக்குள், டி மரியாவைப் பார்க்காமலேயே, அவருக்கு `ஒன் டச் பாஸ்' போட்டிருந்தார் நெய்மர். பாஸ் கிடைத்ததும், அப்படியே ட்ரிப்பிள் செய்து, கிராஸ் போட, அதை அழகாக ஹெட் செய்து கோலாக்கினார் கவானி. அற்புதமான டீம் கோல்! 

80-வது நிமிடத்தில் எம்பாப்பே கோலடித்து, தன் பங்கிற்கு இன்னொரு ஹாட்ரிக் பதிவு செய்தார். லீக் 1 தொடரின் 45 ஆண்டு வரலாற்றில், ஒரே போட்டியில் இரண்டு வீரர்கள் ஹாட்ரிக் அடித்தது இதுவே முதல் முறை. இந்த மூவரும் மாறி மாறி 8 கோல் அடித்திருக்க, டிஃபண்டர் தாமஸ் முனீர் தன் பங்குக்கு ஒரு கோல் அடித்து, 9-வது கோலை நிறைவு செய்தார். 9 நாள்களுக்கு முன், எதிர்பாராத அதிர்ச்சியைச் சந்தித்த பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானம், மீண்டும் உயிர் பெற்றது. 

90 நிமிடங்கள்... 9 கோல்கள்... 9 நாள்கள்... எம்பாப்பே- கவானி- நெய்மர் கூட்டணியின் முரட்டு பதிலடி! #PSG

இந்த லீக் 1 சீசனில் விளையாடிய 19 போட்டிகளில் இன்னும் ஒரு தோல்வியைக்கூட சந்திக்காமல் மிரட்டிக்கொண்டிருக்கிறது பி.எஸ்.ஜி. இதற்கு முந்தைய சீசன்களில், தடுப்பாட்டம்தான் அவர்கள் காலை வாரும். ஆனால், இப்போது பஃபன், டேனி ஆல்வஸ் போன்ற உலகத்தர வீரர்கள் `தியாகோ சில்வா அண்ட் கோ'வுடன் இணைந்திருப்பதால், இந்த சீசன், `இன்வின்சிபிள்ஸ்' பட்டத்தை பி.எஸ்.ஜி வெல்லும் என்று எதிர்பார்க்கலாம்!