Published:Updated:

19 போட்டிகளில் தோல்வியே இல்லை! - 'இன்வின்சிபிள்' சீஸனை நோக்கி லிவர்பூல்

பிரீமியர் லீக் கால்பந்து தொடரில், 19 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், ஒரு போட்டியில்கூடத் தோற்காமல் 'இன்வின்சிபிள்' அணியாக வலம் வருகிறது லிவர்பூல். நேற்று நடந்த நியூகாஸில் யுனைடட் அணியுடனான போட்டியில் 4-0 என வெற்றி பெற்று, 51 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது அந்த அணி. 

ஒரு சீஸனில், ஒரு போட்டியில்கூடத் தோற்காத அணியை 'இன்வின்சிபிள்' என்று சொல்வது வழக்கம். பிரீமியர் லீகில் அர்செனல் அணி, 2003-04 சீஸனின் 38 போட்டிகளில் ஒன்றில்கூடத் தோற்காமல், கோப்பையைக் கைப்பற்றியது. அதன் பின் எந்த அணியும் அப்படி சீஸனை நிறைவு செய்ததில்லை. இந்த சீஸனில் லிவர்பூல் அணிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 

19 போட்டிகளில் தோல்வியே இல்லை! - 'இன்வின்சிபிள்' சீஸனை நோக்கி லிவர்பூல்

இதுவரை விளையாடியுள்ள 19 போட்டிகளில் 16-ல் வெற்றி பெற்றுள்ள லிவர்பூல், 3 போட்டிகளை டிரா செய்துள்ளது. வழக்கமாக டிஃபன்ஸில் சொதப்பி புள்ளிப் பட்டியலில் சறுக்கும் அந்த அணி, டிஃபண்டர் விர்ஜில் வான் டைக், கோல்கீப்பர் ஆலிசன் ஆகியோரின் வருகைக்குப் பின் தடுப்பாட்டத்தில் பட்டையைக் கிளப்புகிறது. 19 போட்டிகளில் வெறும் 7 கோல்கள் மட்டுமே விட்டுள்ளது அந்த அணி. இந்த சீஸனில் அவர்களின் சிறப்பான ஆட்டத்துக்கு இதுதான் முக்கியக் காரணம். 

ஒரு மாதம் முன்புவரை, புள்ளிப்பட்டியலில் லிவர்பூலுக்கு முன்னால் இருந்த மான்செஸ்டர் சிட்டி, இப்போது மூன்றாவது இடத்துக்குச் சறுக்கியுள்ளது. டிசம்பர் மாதம் விளையாடிய 4 போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்துள்ளது சிட்டி. அதிலும், கடைசி 2 போட்டிகளில் கிறிஸ்டல் பேலஸ், லீசெஸ்டர் சிட்டி அணிகளிடம் தோற்றுள்ளது. இந்தத் தோல்விகளால் அந்த அணி இப்போது மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. சிட்டிக்கும் லிவர்பூலுக்கும் இடையிலான வித்தியாசம் இப்போது 7 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. 

19 போட்டிகளில் தோல்வியே இல்லை! - 'இன்வின்சிபிள்' சீஸனை நோக்கி லிவர்பூல்

கடைசி 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தி வரும் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அந்த அணியின் முன்கள வீரர்கள் ஹேரி கேன், எரிக்சன், சன், அல்லி, லூகாஸ் மௌரா அனைவரும் அசத்தால் ஃபார்மில் இருப்பதால், வெற்றிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அர்செனல், நேற்று பிரிட்டன் அண்ட் ஹோவ் ஆல்பியான் அணியுடனான போட்டியை 1-1 என டிரா செய்தது. வாட்ஃபோர்ட் அணியை 2-1 என வீழ்த்திய செல்சீ புள்ளிப்பட்டியலில் நான்காம் இடத்தில் நீடிக்கிறது. 

19 போட்டிகளில் தோல்வியே இல்லை! - 'இன்வின்சிபிள்' சீஸனை நோக்கி லிவர்பூல்

ஜோஸ் மொரினியோ நீக்கப்பட்ட பின், தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது மான்செஸ்டர் யுனைடட் அணி. நேற்று ஹடர்ஸ்ஃபீல்ட் அணியை 3-1 என வீழ்த்தியது. கடந்த சில மாதங்களாகச் சொதப்பிய பால் போக்பா, அசத்தலாக இரண்டு கோல்கள் அடித்தார். பர்ன்லி (12 புள்ளிகள்), ஃபுல்ஹாம் (11), ஹடர்ஸ்ஃபீல்ட் (10) அணிகள் கடைசி 3 இடங்களில் 'ரிலகேஷனை' எதிர்நோக்கியுள்ளன.