கால்பந்தைப் பொறுத்தவரை ஒரு அணியின் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் வீரர்களைவிட, பயிற்சியாளர்களின் பங்களிப்பு அதிகம். வேறு வேறு அணிகளில் ஆடியவர்களை ஒருங்கிணைத்து, அணிக்கென்று ஒரு ஸ்டைல் அமைத்து, கோடிகளில், புகழில் மிதக்கும் வீரர்களின் ஈகோவை சமாளித்து அணியை வழிநடத்துவதென்பது சாதாரண விஷயமே கிடையாது. அதிலும் தேசிய அணியின் பயிற்சியாளர்களின் வேலை இன்னும் கொஞ்சம் சிரமாமனது.

பெரும்பாலும் கிளப் அணிகளை வழிநடத்தும் பயிற்சியாளர்கள் மட்டும்தான் பெரிய அளவில் அறியப்படுவார்கள். தேசிய அணியின் பயிற்சியாளருக்கு அந்தப் பாக்கியம் வேண்டுமென்றால் உலகக் கோப்பையை வெல்லவேண்டும். வேறு வழியில்லை. கிளப் பயிற்சியாளர்களைப் போல் வீரர்கள் கான்ட்ராக்ட் பிரச்னை, டிரான்ஸ்ஃபர் மார்க்கெட் பிரச்னை இவர்களுக்கு இல்லை. ஆனால், டெக்னிக்கலாக இவர்கள் நிறைய சங்கடங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

ஆண்டு முழுதும் கிளப்புடன் ஆடும் வீரர்கள் சில நாள்கள் மட்டுமே தேசிய அணியுடன் இருப்பார்கள். அந்த காலகட்டத்துக்குள் அணியின் ஸ்டைலை, அனுகுமுறைகளை அவர்களுக்குள் புகுத்தவேண்டும். இந்த விஷயத்தில் எல்லா பயிற்சியாளர்களும் ஜெயித்துவிடுவதில்லை. அப்படி ஜெயித்த ஒருவர்தான் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரத் சவுத்கேட்!

இங்கிலாந்து ரசிகன்!

முதலில் இங்கிலாந்து கால்பந்து ரசிகனின் சங்கடங்களைத் தெரிந்துகொண்டால்தான், இந்தக் கட்டுரையின் அவசியம், சவுத்கேட் செய்த அதிசயம் புரியும்.

2014 கால்பந்து உலகக்கோப்பை. பிரேசிலில் நடந்ததால், விடுதியில் இரவு 2 மணிக்கெல்லாம் கண்விழித்துப் பார்த்துக்கொண்டிருந்தோம். பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா போன்ற முன்னணி அணிகளின் ஆட்டம் என்றால் மட்டும் ஃபைனல் இயர் சீனியர்கள் இருப்பார்கள். நான் மட்டும் மெக்ஸிகோ - கேமரூன், அல்ஜீரியா - ரஷ்யா போன்ற போட்டிகளுக்கும் கண்விழித்து உட்கார்ந்திருப்பேன். அந்த அணிகளின் வீரர்களைப் பற்றிப் பெரிதாகத் தெரியாது. ஆனால், பிரேசிலின் பிரமாண்ட மைதானங்களில் அமர்ந்து 90 நிமிடமும் கோஷம் எழுப்பிக்கொண்டிருக்கும் அந்த ரசிகர்களைக் காண்பதற்காகவே எல்லா போட்டிகளையும் பார்ப்பேன்.

``நீ எந்த டீமுக்கு சப்போர்ட் தம்பி?’’ ஒரு சீனியர் கேட்டார்.

``இங்கிலாந்து ப்ரோ.’’

மொத்த குரூப்பும் நம்மைப் பார்த்துச் சிரிக்கும்.

``என்ன... ரூனி ஃபேனா?’’

``இல்ல ப்ரோ, ஜான் டெர்ரி.’’ அந்த நக்கல் சிரிப்பு அடங்கவில்லை.

ரூனி, பெக்கம் யார் பெயரைச் சொல்லியிருந்தாலும் அங்கு தப்பித்திருக்க முடியாது.

ஏனெனில் இங்கிலாந்தின் நிலை அப்படி. ஒன்ஸ் அப்பான் எ டைம் உலகக் கோப்பை வென்றார்கள். முன்னொரு காலத்தில் மிகப்பெரிய அணியாக விளங்கினார்கள். இந்த நூற்றாண்டில் இங்கிலாந்து கால்பந்து அணி வெறும் பங்கேற்பாளர் மட்டும்தான். யூரோ, உலகக் கோப்பை என எல்லா ஏரியாவிலும் அடிவாங்கும். 1966-ல் கோப்பை வென்ற பிறகு ஒருமுறை மட்டுமே உலகக் கோப்பை அரையிறுதியை எட்டியது. 1990-க்குப் பிறகு அரையிறுதியே கனவானது. யூரோ...இன்னும் கொடுமை. 2008-ல் தகுதி பெறவேயில்லை. கடந்த ஆண்டு அப்போதைய கத்துக்குட்டி ஐஸ்லாந்திடம் தோற்று இரண்டாம் சுற்றோடு வெளியேறியது.

இப்படி கடந்த சில ஆண்டுகளாக அடிமேல் அடிவாங்கிக்கொண்டே இருந்தது இங்கிலாந்து. எந்த பெரிய தொடரிலும் குறிப்பிடத்தகுந்த வெற்றி இல்லை. வெற்றி பெறாத அணிகளை நம்மூர்காரர்கள் பெரிதாக விரும்பமாட்டார்களே! அதனால் கால்பந்து ரசிகர்கள் கூடியிருக்கும் இடத்தில், இங்கிலாந்து ஃபேன்கள் எப்போதுமே ‘ஆட் மேன் அவுட்' தான்.

இங்கு மட்டுமல்ல, உலகம் முழுக்க இங்கிலாந்துக்கார ரசிகர்களுக்கும் இதுதான் நிலைமை. சர்வதேச அரங்குகளில் கத்துக்குட்டி அணிகளின் ரசிகர்களெல்லாம் இவர்களை வம்பிழுத்து பிரளயம் ஆன நிகழ்வுகள் உண்டு. ஆனால், இனி அது இல்லை. அந்த இங்கிலாந்து இனி இல்லை. 2018 உலகக் கோப்பைக்குப் பிறகு, இங்கிலாந்து அணிக்கு, அதன் ரசிகர்களுக்கு இதுவரை இருந்த சங்கடங்கள் தீர்ந்துவிட்டன. மற்ற ஹெவிவெயிட் அணிகளுக்கு இணையான அணியாக இங்கிலாந்தும் உருவெடுத்துள்ளது. த்ரீ லயன்ஸை உலக அரங்கில் உரக்கக் கர்ஜிக்க வைத்துவிட்டார் கேரத் சவுத்கேட்!

இந்த இங்கிலாந்து வேற லெவல்!

15 ஆண்டுகளாக சொந்த மண்ணில் தோல்வியே சந்தித்திடாத ஸ்பெய்ன் அணிக்கு அதிர்ச்சியளித்தது சவுத்கேட்டின் இளம் படை. முதல் 30 நிமிடங்களிலேயே 3 கோல்கள் அடிக்க, ஸ்பெய்ன் மட்டுமல்ல, மொத்த உலகமுமே அரண்டுபோனது. இங்கிலாந்திடம் யாரும் எதிர்பார்த்திடாத ஆட்டம். உலகக் கோப்பைக்கு சில மாதங்கள் முன்பு தொடங்கிய இந்த சவுத்கேட் அதிரடி இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இங்கிலாந்து மீண்டும் மகத்தான அணியாக மாறிக்கொண்டிருக்கிறது.

உலகக் கோப்பையில் ஸ்பெயின், ஜெர்மனி போன்ற சாம்பியன்களெல்லாம் சிறிய அணிகளிடம் அடிவாங்க, அரையிறுதிக்குள் நுழைந்து அசத்தியது இளம் இங்கிலாந்து அணி. அவர்களின் அரையியறுதி பயணத்தில் குரோஷியாவுக்கு முன் பெரிய அணிகளைச் சந்திக்கவில்லை. ஆனால், மற்ற ஜாம்பவான் அணிகள்போல் சிறிய அணிகளிடம் அவர்கள் தோற்கவில்லை. இதற்கு முந்தைய இங்கிலாந்து அணிகளிடம் இல்லாத ஒரு விஷயத்தை, இந்தப் புதிய இங்கிலாந்து அணிக்கு அவர் கொடுத்தார் - வெற்றித் தாகம்!

உடைபட்ட டெம்ப்ளேட்ஸ்!

இங்கிலாந்து அணிக்குள் வெகுநாட்களாக இருந்த பிரச்னைகளை கொஞ்சம் கொஞ்சம் உடைத்தெறிந்ததிலேயே சவுத்கேட் பயிற்சியாளராக வெற்றி பெறத் தொடங்கினார். இதற்கு முந்தைய பயிற்சியாளர்களுக்கு ஒரு ‘டெம்ப்ளேட்' ஃபார்மேஷன் இருக்கும். 4-2-3-1, 4-3-3 என குறிப்பிட்ட காலத்துக்கு ஒரே ஃபார்மேஷனைத்தான் தொடர்வார்கள். அது மொத்தமாக புளித்துப்போகும்போதுதான் அடுத்த ஃபார்மேஷனுக்கு மாறுவார்கள். இப்படி டெம்ப்ளேட்டுக்குள்ளேயே உழன்று கொண்டிருந்த அணியை மொத்தமாக மாற்றினார் இந்த முன்னாள் ஆஸ்டன் விலா வீரர்.

வீரர்களுக்குத் தகுந்த, தன் ஸ்டைலை புகுத்தக்கூடிய ஃபார்மேஷனைப் பிடிப்பதற்காக நட்புறவுப் போட்டிகளில் பல ஃபார்மேஷன்களை முயற்சி செய்தார். ஆன்டோனியோ கான்டேவின் வருகைக்குப் பின் பிரீமியர் லீக் அணிகள் 3 டிஃபண்டர்கள் கொண்ட ஃபார்மேஷனை அதிகம் பயன்படுத்தியதால், அந்த மாற்றத்தைப் பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். டாட்டன்ஹாம், மான்செஸ்டர் சிட்டி வீரர்களை விங் பேக், ஃபுல் பேக் ரோல்களில் பயன்படுத்துவது எளிதாகியது. கிளப், இன்டர்நேஷனல் என பெரும்பாலான போட்டிகளில் ஒரே ஃபார்மேஷனில் விளையாடியது அவர்களது முழு திறனையும் வெளிக்கொண்டுவந்தது.

இங்கிலாந்து ரசிகர்கள் அதுவரை நினைத்துப் பார்த்திடாத ‘3 மேன் டிஃபன்ஸ்' இங்கிலாந்தின் ஆஸ்தான ஃபார்மேஷன் ஆனது. வழக்கமாக பெரிய தொடர்களில் கோட்டை விடும் இங்கிலாந்தின் டிஃபன்ஸை அது வலுவாக்கியது. ‘Playing from the back' சிஸ்டத்துக்கு அந்த வீரர்கள் அழகாகப் பொருந்தினார்கள். ஸ்டோன்ஸ், வால்கர் இருவரும் தங்கள் கிளப்பில் ஆடும் பாஸிங் கேமை, தேசிய அணிக்கும் அழகாக செயல்படுத்தினார் சவுத்கேட். விங்கர், நடுகள வீரர்களைவிட விங்-பேக் வீரர்களை அணியின் பிரதானமாக்கினார். டிரிப்பியர் - உலகக் கோப்பையின் சிறந்த டிஃபண்டரானார். ஆனால், அதையும் அவர் கடைசிவரை தொடரவில்லை. இப்போது நடந்துகொண்டிருக்கும் UEFA Nations League தொடரில் 4-3-3 ஃபார்மேஷனைக் கையாளத் தொடங்கிவிட்டார். விளைவு, டிஃபன்ஸில் மட்டும் கொஞ்சம் பலமாக இருந்த இங்கிலாந்து, அதிரடி அட்டாக்கால் அரை மணி நேரத்தில் ஸ்பெய்னின் அரணை தரைமட்டமாக்கியது.

இப்போது ‘3 மேன் டிஃபன்ஸ்', ‘4 மேன் டிஃப்ன்ஸ்' என எந்த ஃபார்மேஷனிலும் இங்கிலாந்தால் ஜொலிக்க முடியும். ஒவ்வொரு வீரரும் அதற்குத் தயாராக இருக்கிறார்கள். விங் பேக், ஃபுல் பேக், சென்டர் பேக் என எந்தப் பொசிஷனிலும் ஆடுவார் கைல் வால்கர். மிட்ஃபீல்ட், சென்டர் பேக் பொசிஷன்களில் ஆடுவார் எரிக் டையர். இப்படி வீரர்கள் எந்த பொசிஷனிலும் ஆடக்கூடிய ஃப்ளெக்ஸிபிளிட்டி கொண்டுள்ளனர். இதுவரை இங்கிலாந்து அணியிடம் இல்லாத பல கேரக்டர்களை, இந்த இளம் அணிக்குள் புகுத்தியுள்ளார் சவுத்கேட்!

வீரர்கள் தேர்வு!

ஃபார்மேஷன் முடிவை விட, வீரர்கள் தேர்வில் சவுத்கேட் எடுத்த முடிவுதான் இங்கிலாந்து அணிக்கு இப்போது அடையாளம் கொடுத்திருக்கிறது. ஃபார்மில் இல்லாத கோல்கீப்பர் (அப்போதைய கேப்டன் ஆப்ஷன்) ஜோ ஹார்ட் வெளியே உட்காரவைக்கப்பட்டார். தொடர்ந்து சொதப்பிய சீனியர்களுக்கெல்லாம் வாய்ப்பு கொடுப்பதைத் தவிர்த்தார். இவ்வளவு ஏன் கடந்த மாதம் நடந்த ஐரோப்பிய நேஷன்ஸ் லீக் போட்டியில் வாட்ஃபோர்ட் வீரர் டிராய் டீனி இடம்பெறுவார் என்று கருதப்பட்ட நிலையில், ‘‘டீனி நல்ல வீரர். ஆனால், 30 வயது ஆகிவிட்டது. இங்கிலாந்து அணிக்கு புதுமுக வீரர்கள் வருவதுதான் நல்லது’’ என்று ஓப்பனாக, அதே சமயம் நாகரீகமாகச் சொன்னார் சவுத்கேட். ‘இதுதான் இங்கிலாந்து அணி. அது இப்படித்தான் இருக்கவேண்டும்' என்று அணிக்கான அடையாளத்தை ஏற்படுத்திவிட்டார். இதுதான் சவுத்கேட்.

ப்ளேயிங் லெவனிலும் அதே நிலைதான். ரூனி ஓய்வுக்குப் பிறகு கேப்டன்களாக இருந்த காஹில், ஹெண்டர்சன் ஆகியோருமே தங்களின் இடத்துக்காகப் போராட வேண்டியிருந்தது. அவர்களில் யார் அணியில் நிரந்தர இடம் பிடித்து அணியை வழிநடத்துவார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கையில் இளம் ஸ்டிரைக்கர் ஹேரி கேன் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அதிரடி முடிவுகளுக்கு சவுத்கேட் தயங்கியதே இல்லை.
இங்கிலாந்து அணியை கலாய்த்தவர்களையே பார்த்த இங்கிலாந்து ரசிகர்களுக்கு, இங்கிலாந்து அணி உலகக் கோப்பையில் பயன்படுத்திய ‘விசித்திர' கார்னர் அனுகுமுறையை மற்ற அணிகள் பயன்படுத்துவதை காணக்கிடைத்த தருணமெல்லாம் வாழ்நாள் பொக்கிஷம். இங்கிலாந்து அணியை இனி யாரும் கேலி செய்யப்போவதில்லை, மட்டம் தட்டப் போவதில்லை. அவர்களுக்கு அடையாளம் கிடைத்துவிட்டது.

‘It's coming home' என்று கோப்பைக்கு ஆசைப்பட்டவர்களுக்கு, தன்மானத்தையும் அடையாளத்தையும் பரிசாகக் கொடுத்திருக்கிறது இந்த இளம் இங்கிலாந்து அணி. அதைப் பெற்றுக்கொடுத்துள்ளார் கேரத் சவுத்கேட்.

- மு.பிரதீப் கிருஷ்ணா

பெயர்: கேரத் சவுத்கேட்

பிறந்தது: வாட்ஃபோர்ட், இங்கிலாந்து

வயது : 46

ஆடிய அணிகள் : கிறிஸ்டல் பேலஸ், ஆஸ்டன் வில்லா, மிடில்ஸ்போரோ

இங்கிலாந்து பயிற்சியாளராக:

போட்டிகள்: 28

வெற்றி: 15

டிரா: 7

தோல்வி: 6

வெற்றி சதவிகிதம்: 53.57