பிரீமியம் ஸ்டோரி

ள்ளிரவிலும் சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் கால்பந்து வாசம். சிக்னலில் நின்று கொண்டிருந்த நான், என்ன சத்தம் என்று திரும்பிப் பார்த்தால்,  பேஸ்கட் பால் கோர்ட் அளவிலான டர்ஃப் மைதானத்தில், விறுவிறுப்பான கால்பந்து போட்டி  நடைபெற்றுக் கொண்டிருந்தது.

லேட்-நைட்டில் ஃபுட்பாலா? ஆமாம்... சென்னையில் இப்ப இதுதான் ட்ரெண்ட். ப்ளே ஸ்டேஷனில் கோல் அடித்துக்கொண்டிருந்த கூட்டத்தை, களத்துக்கு வந்து விளையாடவைத்திருக்கிறது ஃபுட்சால்!
’ஃபுட்சால்’ அப்படினா?  சாக்கர் என்பது ஸ்பானிஷ் மொழியில் ‘ஃபுட்பால்’ என்றும், இண்டோர் என்பது ‘சாலா’ என்றும் அழைக்கப்படுகிறது. 4200 ஸ்கொயர் ஃபீட் அளவிலான இண்டோர் மைதானத்தில் விளையாடும் கால்பந்துக்குப் பெயர்தான்  ஃபுட்சால்.

ஃபுட்ஸால் செம ஃபன்!

சாதாரண கால்பந்து மைதானத்தைப் போன்று  இல்லாமல், காம்பேக்ட் ஸ்பேஸில் ஃபுட்சால் ஆட்டங்கள் களைகட்டுகின்றன. கடந்த சில ஆண்டுகளிலேயே ஐந்துக்கும் மேற்பட்ட ஃபுட்சால் மைதானங்கள் சென்னையில் அறிமுகமாகி இளைஞர்கள் மத்தியில் ஹிட் அடித்திருக்கின்றன.

டர்ஃப்... கிக்... கோல்!

ட்ராஃபிக் குறையாத வேளச்சேரி, ராஜ்பவன் காலனி ரோடு சிக்னலில் நின்றால், ‘டர்ஃ 137’ என்ற போர்டு நம் கண்ணில் சிக்கும். காலை 5 மணியோ, இரவு 10 மணியோ, ஃபுட்சால் கிரவுண்டுக்கு சென்றால்.. மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மரின் பெயர்கள் கொண்ட ஜெர்ஸிக்கள் அணிந்த இளைஞர்கள் ஃபுட்சாலில் பிஸியாக இருப்பர்.

ஃபுட்சாலின் ஸ்பெஷலே மைதானத்தின் தரம்தான். “ஒரு மணி நேர ஆட்டத்துல, நான் ஒரு வேர்ல்டு க்ளாஸ் ப்ளேயரா என்னை நினைச்சுப்பேன். இந்தச் சூழல்ல விளையாடுறது ஸ்பெஷல் அனுபவத்தை கொடுக்குது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் விளையாட வருவோம். ஆமாம், ஃபுட்பால் ஒரு அடிக்‌ஷன்தானே”  என்கிறார் ஃபுட்ஸால் ரசிகர் கிருஷ்ணன்.

சிமென்ட் லேயர், புல் தரை என உயர் தரம் கொண்டு வடிவமைக்கப் படும் டர்ஃப் மைதானத்தில், வீரர்களுக்கு காயம் ஏற்படுவது குறைவு.

ஃபுட்ஸால் செம ஃபன்!

மழை வந்தால் தண்ணீர் நிற்காது, கீழே விழுந்தால் காயம் ஏற்படாது, இடைவெளி இல்லாத கால்பந்து அனுபவம்  டர்ஃப் மைதானத்தில்!

ரூஃப் - டாப் ஃபுட்சால்

டர்ஃப்பில் சிறப்பான  அனுபவம் கிடைக்கும் போது, ரூஃப் - டாப்பில் கால்பந்து விளையாடும் செட்-அப் இருந்தால் என்ன? என்ற எண்ணத்தில் தோன்றியது தான் டிக்கி - டக்கா. சென்னை கீழ்பாக்கம், தி-நகர் பகுதிகளில் அமைந்திருக்கும் டிக்கி-டாக்கா ஃபுட்சால் மைதானம், ரூஃப் டாப்பில் அமைந்துள்ளது.

ஃபுட்ஸால் செம ஃபன்!

‘‘சென்னையில்  விளையாட்டு மைதானங்களுக்குப் பஞ்சம்.   கிரவுண்டில் ஸ்லாட் பிடித்து, ஒரு மணி நேரம் விளையாடுவதற்குள் ஏரியா பசங்களுடன் சண்டையே நடந்துவிடும். அப்படி சில பகுதிகளில் இடம் கிடைத்தாலும், சரியான சீரமைப்பு இல்லாமல் இருக்கும்.  ரிசல்ட்? விளையாட்டுப் பிரியர்களை களத்துக்கு வரவைக்கும் புதிய திட்டங்களை கொண்டதுதான் ரூஃப் - டாப் ஃபுட்சால் என்கிறார் டிக்கி - டக்கா நிறுவனர் பிரகலாத்.

ஃபுட்ஸால் செம ஃபன்!

கட்டணம் அதிகம் ப்ரோ!

ஒரு மணி நேரத்திற்கான டர்ஃப் ஸ்லாட்டின் கட்டணம் 1300 ரூபாயிலிருந்து 3000 ரூபாய் வரை! ஒவ்வொரு நொடிக்கும் கட்டணம் செலுத்துவதால், முழுமையான 60 நிமிடங்களை பயன்படுத்திவிட வேண்டியது முக்கியம். பெரும்பாலானோர், ஆபீஸ், கல்லூரி நேரம் முடிந்து வருவதால் நைட் ஃபுட்ஸாலுக்கு டிமாண்ட் அதனால் விளையாட்டு நேரத்திற்கான ஸ்லாட்டை முன்னரே புக்கிங் செய்வது அவசியமாம்!
லெட்ஸ் ஃபுட்ஸால்!

- கார்த்திகா ராஜேந்திரன், படங்கள்: ஆ.வள்ளிசெளத்திரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு