ஒவ்வோர் ஆண்டும் அந்த விருது விழா நடக்கும். சில நூறு போட்டியாளர்கள் கோதாவில் இருப்பார்கள். ஒவ்வொரு முறையும், இறுதி 3 இடத்தில் அவர்கள் இருவர் வந்துவிடுவார்கள். மூன்றாவது இடம் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், வெற்றியாளர்கள் அவர்கள் இருவர்தான். கடந்த 10 ஆண்டுகளாகக் கால்பந்து உலகத்துக்குப் பழகிப்போன விஷயம் இது. கிறிஸ்டியானோ ரொனால்டோ, லயோனல் மெஸ்ஸி இருவரின் ஆதிக்கமும் கால்பந்தை ஒரே `டெம்ப்ளேட்’டுக்குள் வைத்திருந்தது. பாலன் டி ஓர், ஃபிஃபா பெஸ்ட் பிளேயர் என எந்த விருதாக இருந்தாலும் இவர்கள்தான் டாப் - 2 சாய்ஸ். இந்த வருடம், இந்த 10 வருட வழக்கம் முடிவுக்கு வருகிறது. கிட்டத்தட்ட முடிவையும் எட்டிவிட்டது. 2018-ம் ஆண்டுக்கான `UEFA பிளேயர் ஆஃப் தி இயர்’, ‘FIFA Men’s player of the year’ இரண்டு விருதுகளையும் வென்றிருக்கிறார் லூகா மோட்ரிச். அதுவும் ரொனால்டோவைப் பின்னுக்குத்தள்ளி!

இந்த விருதுகள் மோட்ரிச்சுக்கு வழங்கப்பட்டிருப்பது சாதாரண விஷயம் இல்லை. ஏனெனில், இதற்கு முன்பு பலமுறை பாலன் டி ஓர் விருது கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது. பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. ஒவ்வொரு முறையும், வேறு ஒரு வீரர் மிகச்சிறப்பாக ஆடியிருந்தாலும் ரொனால்டோ, மெஸ்ஸி மட்டுமே பிரதானப் படுத்தப்படுவார்கள். அதையெல்லாம் தாண்டி மோட்ரிச் இந்த விருதை வென்றிருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் 2018 உலகக் கோப்பை. அதில் அவர் வென்ற `கோல்டன் பால்’ விருது!

2014 பிரேசில் உலகக் கோப்பையில் மெஸ்ஸி, கோல்டன் பால் விருதை வாங்கிய போது சலசலப்பு ஏற்பட்டது. `கோல்டன் பால்’ விருது என்ன ஆறுதல் பரிசா. நாக் அவுட் சுற்றில் ஒரு கோல் கூட அடிக்காதவர் எப்படிச் சிறந்த வீரராக முடியும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால், ரஷ்யாவில் சமீபத்தில் முடிந்த 2018 உலகக் கோப்பையின் சிறந்த வீரர் விருதை, குரோஷியா கேப்டன் லூகா மோட்ரிச் வாங்கியபோது எல்லோரும், `சரியான சாய்ஸ்’ எனப் பாராட்டினர்.

`Captaincy is all about either pulling from the front or pushing from behind’ - கேப்டன் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, `டைகர்’ நவாப் அலிகான் பட்டோடி சொன்ன விளக்கம் இது. இந்த உலகக் கோப்பையில் லூகா மோட்ரிச் Pulling from the front என்பதற்கு முன்னோடியாக இருந்தார். 33 வயதில் பாக்ஸ் டு பாக்ஸ் ரன்னிங்கில் பின்னியெடுத்தார். ஃபைனலுக்கு முன்புவரை ஒட்டுமொத்தமாக இந்த உலகக் கோப்பையில் 40 மைல் தூரத்தைக் கடந்திருந்தார். மற்ற இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.

பொதுவாக, 30 வயதைக் கடந்த வீரர்கள், 70 நிமிடத்துக்கு மேல் களத்தில் ஆக்டிவாக இருப்பது குறைவு. மோட்ரிச் இந்தத் தொடரில் கொஞ்சம் கூட சோர்வடையவில்லை. குரோஷியா நாக் அவுட் சுற்றில் விளையாடிய 3 போட்டிகளும் 120 நிமிடங்கள் வரை நீடித்தது. இதில், இங்கிலாந்துக்கு எதிரானப் போட்டியில் மட்டுமே, மோட்ரிச் வெளியே வந்தார். அதுவும் கடைசி இரண்டு நிமிடங்கள் மட்டுமே. மற்ற அனைத்துப் போட்டிகளிலும் களத்தில் பம்பரமாகச் சுற்றிச் சுழன்றார்.

இந்த உலகக் கோப்பையில் குரோஷியா ஓர் அற்புதமான அணி. ஆனால், அங்கு மிஸ்ஸானது ஒரு ஆர்ட்டிஸ்ட். அந்த இடத்தைச் சரியாக நிரப்பியவர் மோட்ரிச். மோட்ரிச் பெர்ஃபெக்ஷனின் உச்சம். ரைட் பேக் கொடுக்கும் பாஸை, தன் பாக்ஸுக்குள் வாங்கி எதிரணியின் கோல் போஸ்டுக்கு அருகில் போடும் `பின் பாயின்ட்’ கிராஸ்கள் எதிரணி ரசிகர்களையும் சிலிர்க்கவைக்கும்.

மோட்ரிச் ஒரு Underrated player. அர்ஜென்டினாவுக்கு எதிராக அவுட் சைட் தி பாக்ஸில் இருந்து கோல் அடித்தபின்னரே, லூாகா மோட்ரிச்சை பாராட்டியது கால்பந்து உலகம். ஆனால், ஸ்டார்கள் நிறைந்த ரியல் மாட்ரிட் கிளப்பிலேயே, சைலன்ட்டாக மிரட்டிக் கொண்டிருப்பவர் மோட்ரிச். விங் டு விங் லாங் பாஸ், டிரிப்ளிங், செட் பீஸ் எடுப்பது, களத்தை நொடியில் ஸ்கேன் செய்வது, எதிரணி டிஃபண்டர்களை பாக்ஸுக்கு வெளியே இழுப்பது, சக வீரர்களுக்கு ஸ்பேஸ் கொடுப்பது, கமாண்டிங், டிக்டேட்டிங் என மோட்ரிச் ஒரு கம்ப்ளீட் மிட்ஃபீல்டர். அதனால்தான், யாருடைய பெஸ்ட் லெவனிலும் அவர் பெயர் மிஸ்ஸாவதில்லை. அவர் உலகக் கோப்பையின் சிறந்த வீரர் விருதை வென்றதில் ஆச்சர்யமும் இல்லை!

உலகக் கோப்பையில் ஃபைனலை எட்டாமல் இருந்திருந்தால் நிச்சயம் அவருக்கு இந்த விருதுகள் கிடைத்திருக்காது. ஆனால், அதற்காக மட்டுமே விருதுகள் கொடுக்கப்பட வில்லை என்பதையும் மறுக்க முடியாது. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சாம்பியன்ஸ் லீக் தொடரை வென்ற ரியல் மாட்ரிட் அணியில் அவரது பங்களிப்பும் சாதாரணமானது அல்ல. கிளப் உலகக் கோப்பையை வென்றுதான் 2017/18 சீசனை வெற்றிகரமாகத் தொடங்கியது ரியல் மாட்ரிட். அந்தத் தொடரின் சிறந்த வீரர் விருதை வாங்கியது மோட்ரிச்தான். ஆனால், அப் போது யாரும் அதைப் பெரிதுபடுத்தவில்லை. ஆனால், அவரின் அசத்தல் ஆண்டு இப்போது அமர்க்களமாகத் தொடங்கியிருக்கிறது.

இந்த ஆண்டு பாலன் டி ஓர் விருதை மட்டும் மோட்ரிச் வென்றுவிட்டால், இந்த தசாப்த காலத்தின் மிகச்சிறந்த மிட்ஃபீல்டர் என்ற பெருமையையும் பெற்று விடுவார். ரொனால்டோ யுவன்டஸ் அணிக்குச் சென்ற பிறகு, இவரது ஜெர்சியைத்தான் ரியல் மாட்ரிட் ரசிகர்கள் அதிகம் ஆர்டர் செய் கிறார்களாம். ஆமாம்...கால்பந்து மாறுகிறது..!

- மு.பிரதீப் கிருஷ்ணா