உலகக் கோப்பை கால்பந்துத் தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது. வெற்றிக் கொண்டாட்டங்கள் இன்னும் பல நாடுகளில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. தோல்வி அடைந்தவர்கள் அதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்துகொண்டிருக்கின்றனர். வெற்றி, தோல்வி, கொண்டாட்டம் எனப் பல உணர்வுகளை வழங்கிய இந்த உலகக் கோப்பை நிறைய பாடங்களையும் கற்பித்திருக்கிறது.

மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் என சூப்பர் ஸ்டார்களையே மையப்படுத்தித் தொடங்கிய இந்த உலகக் கோப்பை, பாதியிலேயே அவர்களை வெளியேற்றியது. ஒற்றை வீரரை நம்பிக் களமிறங்கிய அணிகளெல்லாம் ரொம்பவே திணறின. லயோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி முதல் போட்டியில் இருந்தே தடுமாறியது மிகப்பெரிய சோகம்.

கத்துக்குட்டி ஐஸ்லாந்து, குரோஷியா போன்ற அணிகளிடமெல்லாம் எதிர்பாராத அடி வாங்கியது அர்ஜென்டினா. நாக் அவுட் போட்டியில் ஃபிரான்ஸ் வீரர்கள் மெஸ்ஸியை முற்றுகையிடத் திகைத்துப் போனது அர்ஜென்டினா. இந்த உலகக் கோப்பையில் ஒரேயொரு வெற்றியோடு வெளியேறியது. இன்னொரு ஜாம்பவான் வீரர் ரொனால்டோவுக்கும் அதே நிலை. அவர் வழக்கம்போல் பட்டையக் கிளப்பினார். ஆனால், அவரது அணிதான் சோபிக்கத் தவறியது.

முதல் போட்டியிலேயே ஹாட்ரிக் அடித்து தோல்வியிலிருந்து காப்பற்றினார் ரொனால்டோ. ஆனால், மற்றவர்கள் அவருக்கு நிகராக ஆடவில்லை. இரண்டாவது சுற்றிலேயே வெளியேற வேண்டிய சூழ்நிலை. மெஸ்ஸியைப் போல் ரொனால்டோவுக்கும் உலகக் கோப்பை வெல்லும் கனவு பாழானது. இவர்களின் நிலைதான் அடுத்த தலைமுறை சூப்பர் ஸ்டார் நெய்மர் நிலையும்.

மற்ற இருவரும் தனியாகப் போராட, இவர் ‘நான் தனி ஆளாகத்தான் போராடுவேன்’ என்று ஆடத் தொடங்கினார். அணியில் திறமையான வீரர்கள் இருந்தும், தன் தனித்துவத்தை நிரூபிக்க நினைத்தார். விளைவு - பெல்ஜியம் அணியின் கூட்டு முயற்சியால் வெளியேறியது. இப்படித் தனி ஒரு வீரரை மட்டும் நம்பி வந்திருந்த அணிகளெல்லாம் சீக்கிரமே ரஷ்யாவை விட்டு வெளியேறின.

‘டீம் வொர்க்’ மட்டுமே கால்பந்து அரங்கில் தடம் பதிக்க முடியும் என்பதைப் பல அணிகள் மூலம் நிரூபித்தது இந்த 2018 ஃபிஃபா உலகக் கோப்பை. குரோஷியா, இங்கிலாந்து, ரஷ்யா, ஸ்வீடன் என எதிர்பாராத அணிகளெல்லாம் எதிர்பாராத வெற்றிகளைப் பெற்றன. ஃபிரான்ஸ் இளம் படையை வைத்து அசத்தியது. ஒவ்வோர் அணியிலும் நட்சத்திர வீரர்கள் இருந்தார்கள். ஆனால், அவர்கள் பதினோறு பேரில் ஒருவராக இருந்தார்களே தவிர, தனி ஒருவராக விளையாடவில்லை.

மிகவும் மோசமான ரேங்கிங்கோடு உலகக் கோப்பையைத் தொடங்கிய ரஷ்யா, காலிறுதி வரை முன்னேறி அதிர்ச்சியளித்தது. நட்சத்திரங்களே இல்லாத ஸ்வீடனும் காலிறுதிக்கு முன்னேறியது.ஓர்அணியாகச் செயல்பட்டதுதான் இந்த அணிகளின் அசாத்திய வெற்றிகளுக்குக் காரணம். பிரேசில் ஆட்டத்தில் ஒவ்வொரு பாஸும் நெய்மரை நோக்கிப் போகும். அர்ஜென்டினாவின் போட்டியில் ஒவ்வொரு முறையும் பந்து மெஸ்ஸியை நோக்கி நகரும். ஆனால், இந்த அணிகளின் ஆட்டம் அப்படியிருக்காது. ஒவ்வொரு பாஸும், கிராஸும் கோல் நோக்கிப் பயணிக்கும். அங்கு ஒவ்வொரு வீரருமே சூப்பர் ஸ்டார்தான்.

அந்த எண்ணம்தான் பெல்ஜியம், ஃபிரான்ஸ், இங்கிலாந்து, குரோஷியா போன்ற அணிகளை கடைசிக் கட்டம் வரை எடுத்துச் சென்றது. அந்த அணிகளில் நிறைய ஸ்டார் வீரர்கள் இருந்தார்கள். ஆனால், அவர்கள் அணியினரோடு ஒன்றி ணைந்து ஆடினார்கள். அந்த அணிகளில் 11 பேரும் சமமாகவே பார்க்கப் பட்டனர். கிரீஸ்மேனுக்கு ஃபிரான்ஸ் அணி எத்தனை பாஸ்கள் கொடுக்கிறதோ, அதை ஜிரௌடுக்கும் கொடுக்கும். ஒவ்வொரு வீரரையும் அவர்கள் நம்பினார்கள். அந்தக் கூட்டு முயற்சிதான் பெரிய அணிகளையெல்லாம் வீழ்த்த அவர்களுக்கு உதவியது.

இதன் பிறகும் மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் எனத் தனி மனித கொண்டாட்டங்கள் கால் பந்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், அவர்கள் ஓர் அணியாக விளையாடும் வரை, அணியில் ஒருவராக விளையாடும்வரை நிச்சயம் உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய அரங்கில் வெற்றியை ருசித்திட முடியாது. இந்த உலகக் கோப்பை அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

இது இளைஞர்களின் தொடர்!

ஸ்பெய்ன், ஜெர்மனி போன்ற அனுபவ அணிகளெல்லாம் சொதப்பல் ஆட்டம் ஆட, இளம் அணிகள் ஜொலித்தன. இந்தத் தொடரின் மிகவும் இளம் அணியான நைஜீரியா, அர்ஜென்டினாவுக்குக் கடும் சவால் கொடுத்து வெளியேறியது. அடுத்த இரண்டு இளம் அணிகள் - ஃபிரான்ஸ், இங்கிலாந்து. எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாகச் செயல் பட்டு, அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது.

உலகக் கோப்பை போன்ற தொடர்களில் திறமையைவிட, அனுபவம் ரொம்ப முக்கியம். எந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று நன்கு உணர்ந்து ஆட வேண்டும். ஆனால், முதல் முறையாக உலகக் கோப்பையில் ஆடும் வீரர்கள் பலர் மிகச்சிறந்த செயல் பாட்டைக் கொடுத்து உள்ளனர்.

இளம் வயதில் பொதுவாகவே பல நெருக்கடிகள் இருக்கும். ஒரு போட்டியில் சொதப்பினாலும் பல வசைகளைச் சந்திக்க நேரிடும். ஆனால், அந்த வீரர்கள் எந்த நெருக்கடியையும் உணராமல் தங்கள் பெயர்களை இந்த உலக அரங்கில் பதித்துள்ளனர். கோல் மழை பொழிந்த இங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன், சிறப்பாகச் செயல்பட்ட அந்த அணியின் கோல்கீப்பர் பிக்ஃபோர்ட், சூப்பர் டீம் கேம் ஆடி, குரோஷியா அணியின் தூணாக விளங்கிய ஆன்ட்டி ரெபிச், அசத்தல் கோலால் அர்ஜென்டினாவுக்கு ஆட்டம் காட்டிய பெஞ்சமின் பவார்ட் என இந்த உலகக் கோப்பை கண்டெடுத்த நட்சத்திரங்கள் ஏராளம்.

அவர்களுள் மொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்தியவர் ஃபிரான்ஸ் வீரரான கிலியன் எம்பாப்பே! வயது 19 தான். ஆனால், ஒரு உலகத்தர வீரருக்கு இருக்கும் அத்தனை திறமைகளையும் தன்னிடம் கொண்டுள்ளார்.