Published:Updated:

2019 உலகக் கோப்பை... தோனி தேவையா? ஸ்போர்ட்ஸ் விகடன் நவம்பர் ஸ்பெஷல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
2019 உலகக் கோப்பை... தோனி தேவையா? ஸ்போர்ட்ஸ் விகடன் நவம்பர் ஸ்பெஷல்
2019 உலகக் கோப்பை... தோனி தேவையா? ஸ்போர்ட்ஸ் விகடன் நவம்பர் ஸ்பெஷல்

2019 உலகக் கோப்பை... தோனி தேவையா? ஸ்போர்ட்ஸ் விகடன் நவம்பர் ஸ்பெஷல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஸ்போர்ட்ஸ் விகடன் - நவம்பர் மாத இதழ் இதோ உங்களுக்காக.... கிரிக்கெட், கால்பந்து, கேரம், ரேஸிங் எனப் பல்வேறு விளையாட்டுகளைப் பற்றிய அலசல் கட்டுரைகள், பேட்டிகள், இன்ஃபோகிராஃப்கள் எனச் சிறப்பாக வந்துள்ளது இந்த இதழ். இந்த இதழின் சிறப்புகள் பற்றிய மினி டீசர்...

நவம்பர் மாத ஸ்போர்ட்ஸ் விகடன் இதழை டவுன்லோடு செய்ய http://bit.ly/SPORTSVIKATAN3

சாதனைகளால் சரித்திரம் படைத்த மாவீரர்கள் எல்லோருமே தடுமாறும் நேரம் ஓய்வை அறிவிக்கும் நேரம். சிலர் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும்போதே ஓய்வை அறிவித்துவிடுவார்கள். சிலர் ஓய்வை அறிவிக்க மனம் இல்லாமல் விமர்சனங்களால் துன்புறத்தப்பட்டு பிறகு வெளியேறுவார்கள். சிலர் வெளியேற்றப்படுவார்கள். இப்படி ஒரு சூழலில் இப்போது ஒரு மாவீரனும் வந்து நிற்கிறார். மஹேந்திர சிங் தோனியின் ஓய்வு இப்போது மிகப்பெரிய பேசுபொருளாகியுள்ளது. ஒரு மகத்தான வீரனை சில மோசமான ஆட்டங்களுக்காக விமர்சிப்பது சரியா? அவர் மீண்டும் தன் பழைய ஆட்டத்தை வெளிப்படுத்த முதலில் அவருக்கான அவகாசம் தரவேண்டும். இறுதிக்கட்டத்தில் தோனியின் மீது சுமையை ஏற்றுவது தவறு. ஆட்டத்தில் கவனம் செலுத்த அவருக்கு அவகாசம் கொடுப்பதே இந்திய கிரிக்கெட் அவருக்குச் செய்யும் மரியாதை. அதையும் தாண்டி தோனி ஏன் இந்திய அணிக்குத் தேவை என்பதை அலசுகிறது இந்த ஸ்போர்ட்ஸ் விகடனின் கவர் ஸ்டோரி!

2019 உலகக் கோப்பை... தோனி தேவையா? ஸ்போர்ட்ஸ் விகடன் நவம்பர் ஸ்பெஷல்

வடசென்னை திரைப்படம் வெளியாகி வரவேற்புகளையும், விமர்சனங்களையும் சந்தித்துக்கொண்டிருக்கிறது. அத்திரைப்படத்தில் தனுஷ் நடித்த `அன்பு' கேரக்டரை செதுக்கியவர் கேரம் சாம்பியன் மரிய இருதயம். இரண்டு உலக சாம்பியன் பட்டங்களையும், 5 முறை தேசிய சாம்பியன் பட்டமும் வென்ற அந்த நாயகனுடனான நேர்காணல் இந்த இதழின் `லெஜண்ட் ஸ்பெஷல்'. அவரது கேரம் வாழ்க்கை, பெர்சனல் பக்கம் என மனம் திறந்து பேசியுள்ளார் மரிய இருதயம். 

முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து அமர்க்களமாக கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார் பிரித்வி ஷா. இன்னும் பள்ளிச் சிறுவனின் முகம்தான். ஆனால், அடித்து வெளுக்கிறார். பிரித்வியின் பயணம் இந்த இதழில் இன்னொரு சிறப்பு. அதேபோல் ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களைக் கடந்திருக்கும் இந்திய கேப்டன் விராட் கோலியைப் பற்றிய ஒரு கிராஃபிக் லுக் உங்களுக்காக... இதற்கு நேர்மாறாகப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் அணுகுமுறை இந்திய அணியை எப்படிப் பாதிக்கும் என்றும் அலசியுள்ளோம். 

இதையெல்லாம் கடந்து, மோடோ ஜி.பி நாயகன் வேலன்டினா ரோஸி பற்றிய சிறப்புக் கட்டுரை மோட்டார் பிரியர்களுக்காகக் காத்திருக்கிறது. ஐ.எஸ்.எல் தொடரில் சென்னையின் எஃப்.சி சொதப்புவதற்கான காரணங்கள், மகளிர் டி-20 உலகக் கோப்பை பிரிவ்யூ, வாசகர் கேள்விகள், நாஸ்டால்ஜியா புகைப்படங்கள் என கலர்ஃபுல்லாக வந்திருக்கிறது நவம்பர் மாத ஸ்போர்ட்ஸ் விகடன் இதழ். படித்து உங்கள் விமர்சனங்களை முன்வையுங்கள். ஸ்போர்ட்ஸ் விகடன் குறித்த உங்கள் விமர்சனங்களை கமென்ட்டிலோ அல்லது Sports@vikatan.com என்ற ஈமெயில் முகவரிக்கோ எழுதுங்கள்.

நவம்பர் மாத ஸ்போர்ட்ஸ் விகடன் இதழை டவுன்லோடு செய்ய http://bit.ly/SPORTSVIKATAN3

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு