Published:Updated:

``மெஸ்ஸி - ரொனால்டோ ரைவல்ரிக்கு பதிலா இனி அவங்க ரெண்டு பேர்தான்!’’- ராவணன் #FRABEL

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``மெஸ்ஸி - ரொனால்டோ ரைவல்ரிக்கு பதிலா இனி அவங்க ரெண்டு பேர்தான்!’’- ராவணன் #FRABEL
``மெஸ்ஸி - ரொனால்டோ ரைவல்ரிக்கு பதிலா இனி அவங்க ரெண்டு பேர்தான்!’’- ராவணன் #FRABEL

``மெஸ்ஸி - ரொனால்டோ ரைவல்ரிக்கு பதிலா இனி அவங்க ரெண்டு பேர்தான்!’’- ராவணன் #FRABEL

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

எதிர்பார்த்ததைப் போலவே பெல்ஜியம் அரையிறுதிக்கு வந்துவிட்டது. ஃபிரான்ஸ் அரையிறுதி வந்ததில் ஆச்சர்யமில்லை. ஏனெனில், ஃபிரான்ஸ்தான் சாம்பியனாகும் என்பது என் கணிப்பு. பெல்ஜியம் - ஃபிரான்ஸ் (#FRABEL) அணிகள்தான் ஃபைனலில் மோதும் என நினைத்திருந்தேன். ஆனால், அந்த இரு அணிகளும் அரையிறுதியில் மோதுவதால், இந்தப் போட்டி ஃபைனல் போல இருக்கும். ஸ்பெயின் - போர்ச்சுகல் போட்டியை எப்படி எல்லோரும் எதிர்பார்த்தார்களோ, அதேபோல இந்தப் போட்டிக்கும் எதிர்பார்ப்பு இருக்கும். போட்டி விறுவிறுப்பாக இருக்கும்.

இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் என்றாலும், ஃபிரான்ஸ் வெற்றிபெறும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஏனெனில், ஒரு அணியாக ஃபிரான்ஸ் சிறப்பாக செயல்படுகிறது. மற்ற அணிகளில் ஒரு தனிப்பட்ட வீரர் மீது நம்பிக்கை இருக்கும். ஆனால், ஃபிரான்ஸில்தான் ஒட்டுமொத்த அணியின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. டிஃபன்ஸ், விங் பேக், ஸ்ட்ரைக்கர்கள், மிட்ஃபீல்டர்கள் என எல்லோருமே களத்தில் தங்களின் 100 சதவீதத்தைக் கொடுக்கிறார்கள். 

பிரேசிலுக்கு எதிரான காலிறுதியில் முழுக்கமுழுக்க டிஃபன்ஸில் கவனம் செலுத்தி, லுகாகுவை ரைட் விங்கில் ஆடவிட்டு, விநோதமான ஸ்ட்ரேட்டஜியை பின்பற்றியது பெல்ஜியம். கெவின் டி ப்ரூய்னுக்கு நடுகளத்தில் ஃப்ரி ரோல் கொடுத்திருந்தார்கள். டி ப்ருய்ன், ஹசார்டு இருவரும் எப்படி இயங்குகிறார்கள் என்பதைப் பொறுத்தே பெல்ஜியத்தின் முடிவு இருக்கும். பெல்ஜியத்தின் அட்டாக் நன்றாக இருக்கிறது. கடந்த போட்டியில் பெலனியை பிளேயிங் லெவனில் இறக்கியிருந்தார்கள். இதற்கு முன் அவர் சப்ஸ்டிட்யூட்டில்தான் வந்தார். அவுட் ஸ்டேண்டிங் ஆட்டம்.  கொம்பனி மீண்டு வந்திருப்பது டிஃபன்ஸில் பலம் சேர்க்கும். 

 ஃபிரான்ஸைச் சேர்ந்த ஜிரோடு நல்ல ஸ்ட்ரைக்கர். நல்ல ஃபினிஷர். பந்தை ஹோல்ட் செய்வார். ஹெட்டிங் கோல் அடிப்பார். ஆனால், அவர் நம்பர் - 9 பொசிஷனில் ஆட முடியாது. அவருக்கு கீழே ஆடும் கிரீஸ்மேன் அட்டகாசமான பால் பிளேயர்.  அவர்தான் நம்பர் -9 பொசிஷனுக்கு சரியானவர். போக்பா, இதுவரை ஒரு கோல் அடித்திருக்கிறார். லாங் பாஸ், கிராஸ் போடுவதில் அசத்துகிறார். 

என்னைப் பொறுத்தவரை ஃபிரான்ஸ் அணியில் என்னை அதிகம் கவனம் ஈர்த்தது கான்டேதான். உலகக் கோப்பையில் இதுவரையிலான போட்டிகளில் அவர்தான் அவுட்ஸ்டேண்டிங் பெர்ஃபார்மர். டிஃபண்டர்களுக்கு அவ்வளவு உதவி செய்கிறார். பந்தை வின் பண்ணுகிறார்; இல்லையெனில் எதிரணி வீரர்கள் பந்தை வின் பண்ண விடாமல் தடுக்கிறார். பந்தை மிஸ் செய்தால், எங்கெல்லாமோ போய் ஓடி எடுக்கிறார். என்ன ஓட்டம்... என்ன ஸ்டமினா...  ஓடுவது மட்டுமல்ல, கரெக்டான இடத்தில் பந்தை பாஸ் செய்கிறார்.  சரியான பொஷிசனில் நிற்கிறார். டேக்கிள் செய்கிறார். ஒவ்வொரு கோச்சும் இந்தமாதிரி ஒரு வீரரைத்தான் எதிர்பார்ப்பார்கள். பொதுவாக, இந்தமாதிரி வீரர்களின் பெயர் வெளியே தெரியாது. ஆனால், அவர்கள்தான் அணியின் துருப்புச்சீட்டு. அவர்கள்தான் டீம் பிளேயர்கள். கான்ட்டே டீம் பிளேயர். 

நெருக்கடியான தருணங்களை எளதில் சமாளிப்பதும், கவுன்ட்டர் அட்டாக்கில் துரிதமாக செயல்படுவதும் பெல்ஜியத்தின் சாதகம். அதேநேரத்தில், அர்ஜென்டினாவுக்கு எதிராக முழு அளவில் தயாரானதைப் போல, பெல்ஜியத்துக்கு எதிராகவும் அவர்கள் வியூகம் வகுக்கக் கூடும். சென்டரில் இருக்கும் ஸ்ட்ரைக்கர் லுகாகுவை எதற்காக விங்கில் ஆட வைக்கிறார்கள் என அதற்கேற்ப இவர்களும் தயாராக இருப்பர். ஃபிரான்ஸ் அன்று அர்ஜென்டினாவை பிளாக் செய்ததுபோல, ஹசார்டையும், டி ப்ரூய்னையும் பிளாக் செய்துவிட்டால் போதும் எளிதில் ஃபிரான்ஸ் வென்றுவிடும்.

உலகக் கோப்பைக்கு ஒரு புதுமுகம், அணிக்கு ஒரு புதுமுகம், இளம் வீரர், ஃபர்ஸ்ட் லெவனில் தவறாது இடம்பிடிப்பவர் என, ஃபிரான்ஸின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் எம்பாப்பே. அர்ஜென்டினாவுக்கு எதிராக இரண்டு கோல்கள் அடித்தது, ஒரு பெனால்டி வாங்கியது என அவரது பெர்ஃபாமன்ஸ் செம. இந்த உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்  திடீரென எல்லோரின் கவனத்தையும் ஈர்த்துவிட்டார். கடந்த ஆண்டு கூட அவரை யாருக்கும் தெரியாது. சரியாக, உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக லைம்லைட்டுக்கு வந்துவிட்டார். பி.எஸ்.ஜி- கிளப்பில் செம ஃபார்மில் இருந்தார். சாம்பியன்ஸ் லீக்கில் கலக்கினார், நெய்மர் காயம் அடைந்ததும் அந்த இடத்தையும் நிரப்பினார். அதே ஃபார்மோடு உலகக் கோப்பை வந்து, ரஷ்யாவிலும் ஒரு கலக்கு கலக்கி விட்டார். முன்னணி வீரர்கள் ரொனால்டோ, மெஸ்ஸிக்கு அடுத்ததாக சிறந்த பிளேயர் என பெயரெடுத்துவிட்டார்.   

எம்பாப்பே ரொம்பவே நம்பிக்கையுடன் ஆடுகிறார். அசாத்திய வேகம், டிரிபிளிங்,  மூவ்மென்ட்ஸ் என எல்லாமே பக்கா. ஒரு வீரர் பந்து தன்னிடம் வரும்போது அந்த சூழலை எப்படி சமாளிக்கிறார் என்பது முக்கியம். அந்தவகையில், எந்தத் தயக்கமும் இல்லாமல் பந்தை ரிசீவ் செய்வது, டிரிபிள் செய்வது, பாஸ் போடுவது  என  எல்லா இடத்திலும் கான்ஃபிடன்டாக செயல்படுகிறார். 

ஃபிரான்ஸ் ஃபைனல் வரை முன்னேறினால், எம்பாப்வே நிச்சயம் சூப்பர் ஸ்டார்கள் வரிசையில் இடம்பிடிக்கக் கூடும். இப்போது மெஸ்ஸி - ரொனால்டோ ரைவல்ரிதான் இருக்கிறது. நெய்மர் தனித்து நிற்கிறார். விரைவில் நெய்மர் - எம்பாப்பே ரைவல்ரியை கால்பந்து உலகம் சந்திக்கும்.  சொல்லப்போனால், நெய்மரை விட எம்பாப்பே பெரிய பிளேயராக வருவார். எம்பாப்பே ஒரு டீம் பிளேயர். அணிக்குத் தேவையான நேரத்தில் கோல் அடிக்கிறார். நெய்மரை சூப்பர் ஸ்டார் என மூன்று ஆண்டுகளாக சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அவர் இன்னும் அந்த ஸ்டேஜை அடையவில்லை. எம்பாப்பே இதே மாதிரி ஆடினால், ரொனால்டோ, மெஸ்ஸிக்கு அடுத்ததாக அவர் கொண்டாடப்படுவார். 

பெல்ஜியம் - ஃபிரான்ஸ் இரு அணிகளும் நாக் அவுட் சுற்றில் இதுவரை எக்ஸ்ட்ரா டைமில் ஆடவில்லை. இந்தமுறையும் எக்ஸ்ட்ரா டைமுக்கு கேம் போக வாய்ப்பில்லை. ஒருவேளை பெனால்டி ஷூட் அவுட் போனால், 50-50 தான். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு