Published:Updated:

எக்ஸ்ட்ரா டைமில் கோல் அடித்து, பெனால்டியில் கோட்டை விட்ட ரஷ்யா...! #RUSCRO #WorldCup

எக்ஸ்ட்ரா டைமில் கோல் அடித்து,  பெனால்டியில் கோட்டை விட்ட ரஷ்யா...! #RUSCRO #WorldCup
எக்ஸ்ட்ரா டைமில் கோல் அடித்து, பெனால்டியில் கோட்டை விட்ட ரஷ்யா...! #RUSCRO #WorldCup

எக்ஸ்ட்ரா டைமில் கோல் அடித்து, பெனால்டியில் கோட்டை விட்ட ரஷ்யா...! #RUSCRO #WorldCup

கடைசி 20 ஆண்டுகளில் குரோஷிா ஒருமுறை கூட கால் இறுதி சுற்றைச் தாண்டியதில்லை. சோவியத் யூனியன் பிரிந்த பிறகு ரஷ்யா ஓருமுறை கூட காலிறுதியில் நுழையவில்லை. இரண்டு அணிகளும் சமமானவை. ரஷ்யாவுக்கு ஜெயிக்கும் ஒவ்வொரு ஆட்டமும் வரலாறுதான். குரோஷியாவோ, உலகக் கோப்பையில் அடுத்த சுற்றான அரையிறுதிக்கு நுழைந்தால் வரலாற்றில் பதியப்படும். வரலாறு படைப்பதற்கான போட்டியாக ஆரம்பித்தது ரஷ்யா-குரோஷியா இடையிலான ஆட்டம். #RUSCRO

இரண்டு சமமான அணிகள் தங்களின் முழு பலத்தையும் பரிசோதிக்கிறது என்பதால் ஒரு பெரிய போராட்டத்தை எதிர்பார்த்திருந்தார்கள் ரசிகர்கள். பரபரப்பான ஆட்டத்தில் முதல் கோலை அடித்தது ரஷ்யாதான். ஸ்பெயின் போல ஒன் டச் பாஸ்ளை பயன்படுத்தி உள்ளே நுழைந்தார் செர்ஷேவ். செர்ஷேவ் டியுபாவுக்கு பாஸ்கொடுத்துவிட்டு டிஃபெண்டர்களை தாண்டி ஓட, அதை மீண்டும் செர்ஷேவுக்கு பாஸ் செய்தார் டியுபா. வலதுகாலில் பந்தை எடுத்து, இடதுகாலுக்கு மாற்றி, 75 அடி தூரத்தில் இருந்து நம்பிக்கையாக ஒரு கிக் எடுத்து பந்தை கோல் போஸ்ட்டில் உள்ளே அனுப்பி வைத்தார் செர்ஷேவ். கோல் கீப்பர் இந்த கிக்கை எதிர்பார்க்கவேயில்லை போல, ஸ்தம்பித்து நின்றுவிட்டார்.

முதல் கோலுக்கு பிறகு ஆட்டத்தின் உக்கிரம் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய ஆரம்பித்தது. ஃபவுல்கள், கார்டுகள் என்று என ஆட்டம் சூடுபிடித்தது. சரியாக 8 நிமிடம் கழித்து, ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்தது குரோஷியா. லெஃப்ட் விங்கில் இருந்து வந்த பந்தை டிஃபென்டர்களை தாண்டி கொண்டுபோனார் மாரியோ மேண்ட்சுகிச். சுற்றி 5 ரஷ்ய டிஃபென்டர்கள் மேண்ட்சுகிச்சை கவனிக்க, கூடவே ஓடிவந்த ரமாரிச்சை மார்க் செய்ய தவறிவிட்டார்கள். மேண்ட்சுகிச் பந்தை சரியான நேரம் பார்த்து ராமரிச்சுக்கு பாஸ் கொடுக்க அதை கோலாக்கி நிலமையைச் சமன் செய்துவிட்டார்  ராமரிச். 

ரஷ்யாவும், குரோஷியாவும் அடுத்தடுத்து அட்டாக் செய்துகொண்டே இருந்தன. ரமாரிச் ரஷ்ய டிஃபெண்டர்களை பிஸியாகவே வைத்திருந்தார். அதிலும், பைசைக்கிள் கிக் மூலம் கோல் அடிக்க முயன்றதெல்லாம் நிச்சயம் பாராட்ட வேண்டிய மூவ்கள். இவான் பெர்சிச் அடித்த அந்த கிக், கோல் என்று கத்தவேண்டிய தருணம், பந்து போஸ்ட் கம்பத்தின் உள்பக்கத்தில் பட்டு வெளியேறிவிட்டது.

ஆட்டம் முடிவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இரு அணிகளம் சப்ஸ்டியூஷன்களை மாறிமாறி களமிறக்கின. 67-வது நிமிடத்தில் ரஷ்யாவின் அட்டாக்கை பலப்படுத்த செர்ஷேவை தூக்கிவிட்டு ஸ்மோலோவை கொண்டுவந்தார்கள். எக்ஸ்ட்ரா டைம் தேவையில்லை, எப்படியாவது ஆன் டைமில் (90 நிமிடத்தில்) ஆட்டத்தை முடித்துவிடவேண்டும் எனும் முனைப்பில் மூன்று சம்ஸ்டியூட்டுகளையும் களமிறக்கியிருந்தது குரோஷியா. சப்ஸ்டியூஷன்களே இல்லாத நேரத்தில் எக்ஸ்ட்ரா டைம் விளையாடவேண்டிய நிலையில், கோல்கீப்பர் சுபாஷிச் ஹேம்ஸ்டிரிங் இன்ஜுரியில் அவதிப்பட்டார். வேறு வழியே இல்லை என்பதால் வலியுடனும், ரஷ்ய அட்டாக்கர்களுடனும் 30 நிமிடங்கள் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது.

எக்ஸ்டிரா டைம் ஆரம்பித்த முதல் ஐந்து நிமிடத்திலேயே Šime Vrsjalko இஞ்சுரியால் மாற்றப்பட்டார். சோதனைகளை பொறுத்தால்தான் சாதனை என்பதை குரோஷியா காண்பித்தது. கிடைத்த கார்னர் கிக்கில் டொமாகோ விடா ஹெட்டர்  கோல் அடிக்க , கோல்கீப்பர் அகினிவும் சரி, ரஷ்ய டிபென்டர்களும் சரி யாருமே அதைத் தடுக்கவில்லை. குரோஷியா முன்னிலை பெற்றது.  காயத்தால் அவதிப்பட்டாலும், ரஷ்யாவின் இரண்டு அட்டகாசமாக அட்டாக்குகளை தடுத்து, தன்னை நிலைநிறுத்திக் கொண்டே இருந்தார் சுபாஷிச். 

குரோஷியாவின் சந்தோஷம் நிலைக்கவில்லை. 14 நிமிடத்தில் ரஷ்யாவும் ஒரு கோல் அடித்தது. சுகோயிவின் ஃப்ரீக்கை தன்னை மார்க் செய்திருந்த மேண்ட்சுகிச்சிடம் இருந்து எஸ்கேப் ஆகி, தாவிக் குதித்து தலையால் முட்டி கோலாக்கினார் ஃபெர்னாண்டஸ். செட் பீஸ் கோல்களின் ஆதிக்கமே இந்த உலகக் கோப்பையில் அதிகம். எக்ஸ்ட்ரா டைமில் விழுந்த இரண்டு கோல்களுமே செட் பீஸ் மூலம் உருவானவை. பெர்ணாண்டஸ் ஆட்டத்தின் ஹீரோவாக திகழ்ந்திருக்கலாம். ஆனால், பெனால்ட்டி ஷூட் அவுட்டில் அவர் மிஸ் செய்த பெனால்ட்டி ரஷ்யாவைக் கண்ணீர் சிந்தவைத்துவிட்டது.

கடைசியாக, பெனால்ட்டி ஷூட் அவுட்டில் ஸ்மோலோவின் பெனால்ட்டியை அட்டகாசமாக தடுத்தார் சுபாஷிச். அகினிவும் சளைத்தவரில்லை என்பதை நீருபிக்க கோவாசிக்கின் கிக்கை தடுத்தார். லூகா மோட்ரிச்சின் கிக்கையும் தடுக்க முயற்சித்தார், ஆனால், பந்து கோல் போஸ்ட்டில் பட்டு பாக்ஸுக்குள் சென்றுவிட்டது. ரஷ்யாவை விட ஒரு பெனால்ட்டி அதிகமாக அடித்து அரையிறுதிக்குச் சென்றது குரோஷியா. கடைசியாக நடந்த ஐந்து உலகக் கோப்பையிலும், உலகக் கோப்பையை நடத்தும் நாட்டின் கால்பந்து அணி அரையிறுதில் நுழைந்திருந்தது. தற்போது  ரஷ்யா அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. காரணம், குரோஷியா அணியின் ஒருங்கிணைப்பு. இந்த உலகக்கோப்பையின் பெஸ்ட் டீம் எது என்ற கேள்விக்கு பதில் நிச்சயம் குரோஷியாவாகத்தான் இருக்கும்.

அடுத்த கட்டுரைக்கு