Published:Updated:

ஒச்சாவோவின் அரணைத் தகர்த்த பிரேசில்... காலிறுதியில் காத்திருக்கு சஸ்பென்ஸ்! #BRAMEX

ஒச்சாவோவின் அரணைத் தகர்த்த பிரேசில்... காலிறுதியில் காத்திருக்கு சஸ்பென்ஸ்! #BRAMEX

ஒச்சாவோவின் அரணைத் தகர்த்த பிரேசில்... காலிறுதியில் காத்திருக்கு சஸ்பென்ஸ்! #BRAMEX

Published:Updated:

ஒச்சாவோவின் அரணைத் தகர்த்த பிரேசில்... காலிறுதியில் காத்திருக்கு சஸ்பென்ஸ்! #BRAMEX

ஒச்சாவோவின் அரணைத் தகர்த்த பிரேசில்... காலிறுதியில் காத்திருக்கு சஸ்பென்ஸ்! #BRAMEX

ஒச்சாவோவின் அரணைத் தகர்த்த பிரேசில்... காலிறுதியில் காத்திருக்கு சஸ்பென்ஸ்! #BRAMEX

கால்பந்தை ஆண்டாண்டு காலமாகப் பார்க்கும் ரசிகனுக்கும்... நேற்று பார்க்கத்தொடங்கிய ரசிகனுக்கும்... பிரேசில் என்ற பெயரில் ஓர் இனம்புரியாத ஈர்ப்பு எப்போதும் உண்டு. இதுவரை நடந்து முடிந்த இருபது உலகக்கோப்பைத் தொடர்களில் ஐந்து முறை சாம்பியன் பட்டமும், இரண்டு முறை ஃபைனல் வரையும் சென்றிருக்கிறது பிரேசில். ஆனால், இந்த முறை பிரேசில் அணி காலிறுதிக்குச் செல்லுமா என்பது மேட்ச் தொடங்குவதற்கு முன் பலரின் சந்தேகமாக இருந்தது. காரணம்... உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட அணிகள் ஒவ்வொன்றாக வெளியேறிக்கொண்டிருக்கின்றன. #BRAMEX 

நடப்புச் சாம்பியன் ஜெர்மனி லீக் போட்டிகளோடு வெளியேறிவிட்டது. ரவுண்டு ஆஃப் 16 சுற்றோடு அர்ஜென்டினா, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் காலி. பலரின் ஆதர்சமாக இருக்கும் பிரேசில் மட்டும்தான் இன்னும் போட்டியில் இருந்தது. பரபரப்பாக நடந்த நேற்றைய போட்டியில் மெக்ஸிகோவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, பிரேசில் காலிறுதிக்குத் தகுதிபெற்றுவிட்டது.

ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் கவனமும் நேற்று ரஷ்யாவின் சமாரா அரங்கத்தின் மேல்தான் குவிந்திருந்தது. காலிறுதிக்குத் தகுதிபெற பிரேசில் மற்றும் மெக்ஸிகோ அணிகள் நேற்று மோதின.

மெக்ஸிகோ அணியுடன் ஒப்பிட்டால் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பிரேசில் அணி பலம் வாய்ந்தது. இரு அணிகளும் இதற்கு முன் 40 முறை மோதியுள்ளன. அவற்றில் 23 மேட்ச்களில் பிரேசில் வெற்றி பெற்றிருக்கிறது. 7 மேட்ச்கள் டிராவிலும் முடிந்திருக்கின்றன. உலகக் கோப்பையில் இவ்விரு அணிகளும் இதற்கு முன் நான்குமுறை மோதியுள்ளன. ஒரேயொரு போட்டி மட்டும் டிராவில் முடிந்திருக்கிறது. மீதி மூன்றில் ஒன்றில் கூட மெக்ஸிகோ வெற்றி பெறவில்லை. ஆனால், முதல் லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஜெர்மனியை 1-0 என வீழ்த்தி ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்திருந்த மெக்ஸிகோவைக் குறைத்து எடைபோட முடியாது. லீக் போட்டிகளோடு ஜெர்மனி நடையைக் கட்ட மெக்ஸிகோ மிக முக்கியமான காரணம். மேலும், `தி கிரேட் வால் ஆஃப் மெக்ஸிகோ' என செல்லமாக அழைக்கப்படும் கோல் கீப்பர் கிலெர்மோ ஓச்சோவாவின் அரணைத் தகர்க்க பிரேசில் போராட வேண்டும். போதாக்குறைக்குப் பிரேசில் டிஃபண்டர் மார்சலோ காயம் காரணமாக நேற்றைய போட்டியில் ஆடவில்லை.
 

மேட்ச் தொடங்கி இரண்டாவது நிமிடத்திலேயே மெக்ஸிகோ பாய்ஸ், பிரேசிலின் பாக்ஸை முற்றுகையிட்டனர். இடது விங்கிலிருந்து கொயார்டோ அடித்த கிராஸ் கோல் கீப்பரின் கையில் பட்டு ரைட் விங்குக்குச் சென்றது. நல்லவேளையாக அங்கே நின்றுகொண்டிருந்த லொஸானோ அடித்த பந்தை மிராண்டா தடுத்துவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் பிரேசில் தன் அட்டாக்கைத் தொடங்கியது. இரு அணிகளும் அட்டாக் மேல் அட்டாக் செய்தும் எதிரணியினரின் டிஃபண்டர்ஸ் மற்றும் கோல் கீப்பரைத் தாண்டி கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முதல்பாதி கோல் எதுவுமின்றி முடிவுக்கு வந்தது. `ரவுண்டு ஆஃப் 16' சுற்றில் முந்தைய நாள் நடைபெற்ற இரண்டு ஆட்டங்களைப் போல் இப்போட்டியும் பெனால்டி ஷூட் அவுட் வரை செல்லுமோ என ரசிகர்கள் சிந்திக்கத் தொடங்கினர். ஒருவேளை மேட்ச் பெனால்டி ஷூட் அவுட் வரை சென்றால், மெக்ஸிகோ கோல் கீப்பர் ஒச்சாவோவைத் தாண்டி பிரேசில் அணி சாதிக்குமா என்ற பயம் பிரேசில் ரசிகர்களைத் தொற்றிக்கொண்டது.

இரண்டாம் பாதி தொடங்கியதும் ஆட்டத்தில் அனல் பறந்தது. 47-வது நிமிடத்திலேயே பிரேசிலின் கொடினியோ பாக்ஸூக்கு அருகே இருந்து ஷூட் செய்த பந்தை, ஒச்சாவோ சர்வசாதாரணமாக சேவ் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் மெக்ஸிகோவின் கொயார்டோ தனி ஆளாக பிரேசிலின் பெனால்டி ஏரியா வரை எடுத்துச்சென்ற பந்தை கோல் போஸ்ட்டுக்கு வெளியே ஷூட் செய்தார். இரு அணிகளின் அட்டாக்கிங் ஆட்டமும் சூடுபிடித்தது. அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. 51-வது நிமிடத்தில் பிரேசிலின் வில்லியன் இடது விங்கிலிருந்து அடித்த கிராஸ், மெக்ஸிகோ டிஃபண்டர் மற்றும் கோல் கீப்பரைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தது. அதை கோல் கம்பத்துக்குள் உதைக்க கேப்ரியல் ஜீசஸ் மற்றும் நெய்மர் ஒருசேர முயற்சி செய்ய... ஒருவழியாக நெய்மரின் காலில் பட்டு ஆட்டத்தின் முதல் கோல் விழுந்தது. `பிரேசில்டா!' என ட்வீட்கள் பறந்தன. பிரேசில் ரசிகர்கள் அப்போதுதான் கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். பிரேசில் 1-0 என முன்னிலை பெற்றது.

பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு இந்தத் தொடரில் இது இரண்டாவது கோல். இந்த உலகக் கோப்பைத் தொடரில் ரொனால்டோவைத் தவிர மற்ற ஸ்டார் ப்ளேயர்கள் அனைவருமே விமர்சனத்துக்கு உள்ளாகினர். நெய்மரும் அதிலிருந்து தப்பவில்லை. கோஸ்டா ரிகாவுக்கு எதிரான லீக் போட்டியில் மட்டும் அவர் ஒரேயொரு கோல் போட்டிருந்தார். செர்பியாவுக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் முன்னிலையில் இருந்தபோது, நெய்மருக்கு ஏகப்பட்ட வாய்ப்புகளை மிட் ஃபீல்டர்கள் உருவாக்கிக் கொடுத்தனர். எளிதாக கோல் அடிக்கக்கூடிய வாய்ப்புகளையும் வீணடித்து அசடு வழிந்தார் நெய்மர். சைட் லைனில் விழுந்து அவர் உருண்டது `கோயிலுக்கு முன்னாடி உருண்டாலும் புண்ணியம். குழாயடிக்குக் கீழ உருண்டு என்ன பிரயோஜனம்?' என மீம் மெட்டீரியல் ஆனது. தன் மீதான விமர்சனங்களுக்கு நெய்மர் நேற்று தன்னால் முடிந்த பதிலடி கொடுத்தார்.

முதல் கோல் விழுந்த பிறகு பிரேசில் கோல் கீப்பர் அலிசன் மற்றும் மெக்ஸிகோ கோல் கீப்பர் ஒச்சாவோ இருவரும் கண்ணைக்கூட இமைக்காமல் `பிஸி' ஆகினர். இரு அணிகளும் மாறி மாறி கோல் நோக்கி ஷூட் செய்தன. பிரேசிலின் வில்லியனிடமிருந்து பந்தைத் தடுக்க மெக்ஸிகோ டிஃபண்டர்ஸ் போராடினர்.

88-வது நிமிடத்தில் தனக்குக் கிடைத்த பந்தை லெஃப்ட் விங்கிலிருந்து மெக்ஸிகோவின் பாக்ஸ் வரை மின்னல் வேகத்தில் கடத்திச் சென்றார் நெய்மர். கோல் நோக்கி பந்தை அவர் அடிக்க, ஒச்சாவின் காலில் பட்டு பந்து டிஃப்ளெக்ட் ஆனது. மாற்று வீரராகக் களமிறங்கியிருந்த ராபர்ட்டோ ஃபிர்மினோ அதை கோலாக்கினார். 2-0 என பிரேசில் முன்னிலை பெற்றது. ஆட்டத்தைச் சமன் செய்யும் வாய்ப்பையும் இழந்ததால், மெக்ஸிகோவின் நம்பிக்கை தகர்ந்தது. 
2-0 என முன்னிலை பெற்றதால், பிரேசில் ஆட்டத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் பார்த்தது. மெக்ஸிகோவின் முயற்சிகள் மிட் ஃபீல்டிலேயே முறியடிக்கப்பட்டன. 90 நிமிடங்கள் நிறைவடைந்ததும், கூடுதலாக 6 நிமிடங்கள் `இஞ்சுரி டைம்' வழங்கப்பட்டது. அதிலும் மெக்ஸிகோவால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர இறுதியில் 2-0 என பிரேசில் மெக்ஸிகோவை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதிபெற்றது. 1994-ம் ஆண்டிலிருந்து உலகக் கோப்பைக் காலிறுதிக்குத் தகுதிபெறாமல் இருந்ததே இல்லை என்ற சாதனையை பிரேசில் அணி தக்கவைத்துக் கொண்டது.

நேற்று நடந்த மற்றொரு போட்டியில் பெல்ஜியம் அணி 3-2 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதிபெற்றது. கஸான் மைதானத்தில் 6-ம் தேதி நடக்கவிருக்கும் காலிறுதிப் போட்டியில், பெல்ஜியம் மற்றும் பிரேசில் அணிகள் மோதவிருக்கின்றன.