Published:Updated:

சப்ஸ்டிட்யூட்கள் அடித்த இரண்டு கோல்கள்... கடைசி கிக்கில் வென்ற பெல்ஜியம்! #BELJAP

சப்ஸ்டிட்யூட்கள் அடித்த இரண்டு கோல்கள்... கடைசி கிக்கில் வென்ற பெல்ஜியம்! #BELJAP

சப்ஸ்டிட்யூட்கள் அடித்த இரண்டு கோல்கள்... கடைசி கிக்கில் வென்ற பெல்ஜியம்! #BELJAP

Published:Updated:

சப்ஸ்டிட்யூட்கள் அடித்த இரண்டு கோல்கள்... கடைசி கிக்கில் வென்ற பெல்ஜியம்! #BELJAP

சப்ஸ்டிட்யூட்கள் அடித்த இரண்டு கோல்கள்... கடைசி கிக்கில் வென்ற பெல்ஜியம்! #BELJAP

சப்ஸ்டிட்யூட்கள் அடித்த இரண்டு கோல்கள்... கடைசி கிக்கில் வென்ற பெல்ஜியம்! #BELJAP

ராஸ்டோ அரினாவில் நேற்று நடந்த, ரவுண்டு ஆஃப் 16 போட்டியில் 2 கோல்கள் முன்னிலையில் இருந்த ஜப்பானை போராடித் தோற்கடித்துள்ளது பெல்ஜியம். முதல் பாதியில் கோல் எதுவுமே இல்லையென்றாலும், இரண்டாம் பாதியில் அட்டாக் மழை பொழிய, பெல்ஜியம்-3, ஜப்பான்-2 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வெற்றிபெற்றது. நட்சத்திர பிளேயர்கள் ஒருவரும் கோல் அடிக்கவில்லை. `தன் தலையே தனக்கு உதவி’ என இரண்டு ஹெட்டர்கோல்கள் உதவியுடன் ஆட்டத்தைச் சமன்செய்ய, கடைசி அட்டாக்கை கோலாக்கி வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார் சாட்லி. 

இதுவரை டிஃபென்ஸை பற்றியே கவலைப்படாத பெல்ஜியம் மேனேஜரை, டிஃபென்ஸ் பற்றி கவலைப்பட வைத்துள்ளார்கள் ஜப்பானியர்கள். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிக கோல்களை போட்டது பெல்ஜியம்தான். எவ்வளவு பிரமாதமான டீமாக இருந்தாலும், முதல் பாதியில் எத்தனை கோல் வாங்கியிருந்தாலும், பெல்ஜியம் அணி நேர்மையாக ஆட்டம் முடிவதற்குள் எல்லா கோல்களையும் திருப்பித் தந்துவிடுகிறது. ஆனால், கோல்களை வாங்குவதை மட்டும் நிறுத்துவதாக இல்லை. பெல்ஜியத்தின் அட்டாக், பிரேசில், ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து என எந்த டீம் வந்தாலும் அதைக் கலங்கடித்துவிடும். அதற்கு ஒரு உதாரணம்தான் நேற்று ஜப்பானுடன் நடைபெற்ற போட்டி. 

போட்டியின் முதல் பாதியில் பெல்ஜியம் கொஞ்சம் சாதுவாகத்தான் விளையாடியது. ஜப்பான் தானே என்று நினைத்திருப்பார்கள் போல. டி ப்ருய்ன், ஹசார்டு என முன்னணி பிளேயர்களின் பாஸ்களே ஏடாகூடமாக இருக்க, ஜப்பானின் டிஃபென்ஸ் எதிர்பார்த்ததை விட பலம்வாய்ந்ததாக இருந்தது. முதல் பாதி முடியும் வரை பெல்ஜியத்தால் ஒரு கோல் கூட போடமுடியவில்லை. ஜெயிக்க டிஃபென்ஸ் மட்டும் போதாது என்பதற்காக முதல் பாதியிலேயே பல கோல் முயற்சிகளை மேற்கொண்டனர் ஜப்பானியர்கள். முதல் பாதியில் கோல்களே இல்லை. ஆனால், ஆட்டம் தொய்வில்லாமல் இருந்தது. 

இரண்டாம் பாதி தொடங்கியதும், ஒருவழியாக 48-வது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது ஜப்பான். ஷிபாஸ்கி மிடில் லைனிலிருந்து ஒரு த்ரூ பாஸ் கொடுக்க, நடுவில் இருந்த பெல்ஜியம் டிஃபெண்டர் வெர்டோன்கென் அதைத் தடுக்க முயற்சி செய்தார். முடியவில்லை. அந்த பாஸை வாங்கிய கென்கி ஹராகுச்சி, கோல்கீப்பர் கோர்ட்வாவை ஏமாற்றி பந்தை கோல்கீப்பருக்கு வைடாக அடித்து கோலாக்கினார். அடுத்த நான்கு நிமிடத்தில் இன்னொரு அட்டாக். இன்னொரு கோல். பந்தை பெனால்ட்டி லைன் அருகில் வரை கொண்டுவந்த ஹின்ஜி ககாவா தானே கோல் நோக்கி அடிக்க முடியும் என்ற நிலை இருந்தபோதும், பொறுமையாகச் சுற்றிப்பார்த்து டிஃபெண்டர்கள் இல்லாமல் தனியாக நின்றுகொண்டிருந்த டகாஷி இனூய்-க்கு பாஸ் செய்தார்.

பந்தை வாங்கிய உடன் ஒரு லாங் ஷாட். இந்த உலகக் கோப்பையில் ஜப்பானின் சிறந்த கோல் இதுதான். பெல்ஜியத்தின் மோசமான டிஃபென்ஸுக்கு இந்த கோல் உதாரணம். ரீப்ளே செய்துபார்த்தால் ஃப்ரீகிக் கோல் போல இருக்கும். ஐந்து பேர் கோல் பாக்ஸில் நின்றிருக்க இரண்டு பேர் மட்டும் ககாவாவிடம் பந்தை வாங்க முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். இனோயுவை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. ரிவால்டோவின் 2002 கோலுக்குப் பிறகு பெல்ஜியம் வாங்கும் முதல் outside box கோல் இது. 

இதன் பிறகு அட்டாக்குகளை செய்யாமல் வெறும் டிஃபென்ஸில் கவனம் செலுத்தியது ஜப்பான். இதை அட்வான்டேஜாக எடுத்துக்கொண்ட பெல்ஜியம் வீரர்கள் எல்லோருமே அட்டாக்கில் இறங்கினார்கள். ஜப்பான் டெக்னிக்கலாக விளையாடியதால் பெல்ஜியமின் ஸ்டார் பிளேயர்களால் ஒரு கோல் கூட போடமுடியவில்லை. லுகாகு ஹெட்டர் செய்தபந்து மிஸ்ஸாக, அடுத்த சில நிமிடங்களில் அற்புதமான ஒரு ஹெட்டர் கோல் போட்டார் பெல்ஜியமின் வெர்டோன்கென். கோல்கீப்பர் கவாஷிமாவின் தலைக்கு மேல் சென்று கோல்போஸ்டின் கார்னரில் உள்ளே சென்று கோலானது. 

மெர்டென்ஸை வெளியே எடுத்துவிட்டு, ஃபெலனியை உள்ளே இறக்கியதற்கு மேனேஜர் சந்தோஷப்பட்டிருப்பார். 73-வது நிமிடம், ஹசார்டு வளைந்து நெளிந்து லெஃப்ட் விங்கில் இடத்தை உருவாக்கி ஒரு பெர்ஃபெக்ட் கிராஸ் கொடுக்க, ஜப்பானால் குதிக்க முடியாது உயரத்தில் குதித்து பந்தை கோல் போஸ்ட் உள்ளே அனுப்பி வைத்தார் ஃபெலனி. இரண்டு அணிகளுமே சமமாக இருந்த நிலையில், இருவருமே கோல் வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டே இருந்தனர். 85-வது நிமிடம் சாட்லியின் ஹெட்டரை கவாஷிமா தடுக்க, அந்தப் பந்து லுகாகுவுக்குக் கிடைத்து கோலாகிவிடும் என்று நினைத்தால் வேகமான செயல்பட்டு லுகாகுவின் ஹெட்டரையும் தடுத்தார் கவாஷிமா.

கெஸுகே ஹோண்டாவின் ஃப்ரீ கிக்கைத் தடுத்து கோர்டிஸும் தனது பெர்ஃபார்மென்ஸை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் கடைசி அட்டாக், கோர்டிஸ் பந்தை டி ப்ருய்னுக்கு கொடுக்க, அதை ஃப்ரீயாக இருந்த முனிருக்கு பாஸ் செய்ய, அதை கோல் பாக்ஸ் அருகே கொண்டுசென்று, தரையோடு தரையாக லோ கிராஸ் ஒன்றைக் கொடுத்தார். லுகாகு அந்த கிராஸை எடுக்காமல் பந்துக்கு வழிவிட, பின்னால் ஓடிவந்த சாட்லி சுலபமாக அதை கோலாக்கி பெல்ஜியமை குவாட்டர் ஃபைனலுக்குக் கொண்டு சென்றுவிட்டார்.

அடுத்த போட்டியில் தன்னுடன் பலமடங்கு பலம்வாய்ந்த பிரேசில் அணியை எதிர்கொள்ளப்போகிறது பெல்ஜியம். டிஃபென்ஸ் இதேபோல இருந்தால் செமி ஃபைனலுக்குப் போகமுடியாது என்பதை பெல்ஜியம் மேனேஜர் ரொபர்டோ மார்டினெஸ் இந்தப் போட்டியிலிருந்து உணர்ந்திருப்பார்.