Published:Updated:

ஸ்பெயினை உலகக்கோப்பையிலிருந்து வெளியேற்றிய அந்த 1,031 பாஸ்கள்! #ESPRUS

ஸ்பெயினை உலகக்கோப்பையிலிருந்து வெளியேற்றிய அந்த 1,031 பாஸ்கள்! #ESPRUS
News
ஸ்பெயினை உலகக்கோப்பையிலிருந்து வெளியேற்றிய அந்த 1,031 பாஸ்கள்! #ESPRUS

சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் தொடர்ந்து கோப்பை வெல்லும் ரியல் மாட்ரிட், லீகில் முக்கிய அணியான பார்சிலோனா அணிகளுக்கு விளையாடும் நட்சத்திர வீரர்கள் அனைவரையும் கொண்ட அணி ஸ்பெயின் அணி. ஆனால், ரஷ்யாவுக்கு எதிரான போட்டியில் பெனால்ட்டியில் கோட்டைவிட்டு பரிதாபகரமாக உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியிருக்கிறது ஸ்பெயின்.

கால்பந்து ரசிகர்களின் ஃபேவரிட் அணிகள் ஒன்றன்பின் ஒன்றாக உலகக்கோப்பையிலிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றன. நடப்புச் சாம்பியன் ஜெர்மெனி முதல் சுற்றிலேயே வெளியேற, அடுத்த சுற்றில் கால்பந்து உலகின் சூப்பர் ஸ்டார்கள் மெஸ்ஸியும், கிறிஸ்டியானோ ரொனால்டோவும் இருக்கும் அர்ஜென்டினா, போர்ச்சுகல் அணிகள் வெளியேறின. இப்போது முன்னாள் சாம்பியன் ஸ்பெயினும் வெளியேறியிருக்கிறது. #ESPRUS

சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் தொடர்ந்து கோப்பை வெல்லும் ரியல் மாட்ரிட், லா லிகா சாம்பியன் பார்சிலோனா என முன்னணி கிளப்களுக்காக விளையாடும் நட்சத்திர வீரர்கள் அனைவரையும் கொண்ட அணி ஸ்பெயின். ஆனால், ரஷ்யாவுக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், பெனால்ட்டியில் கோட்டைவிட்டு பரிதாபமாக உலகக்கோப்பையிலிருந்து வெளியேறியிருக்கிறது ஸ்பெயின். உண்மையில், மேட்ச்சின் முடிவு ஷுட் அவுட் வரை போனதும், ரேங்கிங்கில் 70-வது இடத்தில் இருக்கும் ரஷ்யாவுக்கு எதிராக, 120 நிமிடங்கள் போராடியும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பதும், 2010-ல் உலகச் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயினுக்கு அழகல்ல. 

ஸ்பெயினின் தோல்விக்குக் காரணம் என்ன?
தோல்விக்கான முதல் காரணம், பந்தை மாற்றி மாற்றி ஆயிரம் பாஸ்களை போட்டு தங்களுக்குள்ளேயே விளையாடிக்கொண்டதுதான். 1,031 பாஸ்களில் 9 மட்டுமே கோல் போஸ்ட்டை நோக்கி பாய்ந்துவந்த ஷாட்கள். மற்ற எல்லாமே ஸ்பெயின் வீரர்கள் தங்களுக்குள் நடத்திக்கொண்ட வார்ம் அப் பயிற்சி. முதல் கோலும் செர்ஜியோ ரமோஸ் போட்டதில்லை. அது ரஷ்ய வீரரின் காலில் பட்டுப்போன ஓன் கோல். ரஷ்யாவின் தவற்றால், முன்னணி பெற்ற ஸ்பெயின், அதன்பிறகு கோல் அடிக்கவேண்டும் என்கிற வெறியில் இறுதிவரை விளையாடவில்லை. ரஷ்யாவுக்கு பெனால்ட்டி கிடைத்து 1-1 என்கிற சமநிலை வந்தபிறகும் ஸ்பெயின் வீரர்கள் கோல் போடுவதில் ஆர்வம் காட்டவில்லை. அதனால்தான் கூடுதல் நேரம் முடிந்தும், ஆட்டம் பெனால்டி ஷுட் அவுட்டுக்குப் போனது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

டியாகோ கோஸ்டா ஏன் முழுமையாக விளையாடவில்லை?!
போர்ச்சுகலுக்கு எதிரான போட்டியில் 2 கோல்கள் அடித்தவர் டியாகோ கோஸ்டா. ஸ்பெயினின் முக்கிய முன்கள வீரர். ஸ்ட்ரைக்கர். ஆனால், அவருக்கான பாஸ்களை ஸ்பெயின் வீரர்கள் கொடுக்கவேயில்லை. கிட்டத்தட்ட 10 வீரர்களுடன் விளையாடுவதுபோலவே ஸ்பெயின் விளையாடியது. ஆட்டத்தின் 80-வது நிமிடத்தில் இன்னும் மோசமாக நடந்துகொண்டார் ஸ்பெயின் கோச் ஃபெர்னான்டோ ஹியரோ. ஸ்ட்ரைக்கரான டியாகோ கோஸ்டாவுக்கு பதிலாக இயாகோ ஆஸ்பாஸ் களமிறக்கப்பட்டார். பிளேமேக்கர் இனியஸ்டா ஏன் பிற்பாதியில் சப்ஸ்டிட்யூட்டாக தாமதமாக அணிக்குள் கொண்டுவரப்பட்டார், டியாகோ கோஸ்டா ஏன் பாதியில் வெளியேற்றப்பட்டார் என்பதற்கு பதில் யாரிடமும் இல்லை. 

ரோட்ரிகோ மாயம்?!
60 நிமிடங்களுக்கு மேல் சப்ஸ்டிட்யூட்களை களமிறக்க ஆரம்பித்த ஸ்பெயின் அணி, எக்ஸ்ட்ரா டைமில்தான் முக்கிய ஸ்ட்ரைக்கரான ரோட்ரிகோவைக் களமிறக்கியது. கடைசி 15 நிமிடத்தில் மிகச்சிறப்பாகவே விளையாடினார் ரோட்ரிகோ. இவர் அடித்த பந்தை ரஷ்ய கோல்கீப்பர் அகின்ஃபீவ் பாய்ந்து பிடிக்கவில்லையென்றால் 2-1 என ஸ்பெயின் முன்னிலை பெற்றிருக்கும். 

ரஷ்யா தன்னுடைய டிஃபென்ஸை மீறி கோல் அடிக்கவே அடிக்காது என ஸ்பெயின் நினைத்ததும், ரஷ்ய கோல் கீப்பர் அகின்ஃபீவின் திறமைகளை ஜஸ்ட் லைக் தட் என டீல் செய்ததுமே தோல்விக்கான முக்கியக் காரணங்கள். ரஷ்யாவுக்கு எதிரான ஆட்டத்தைத் தாண்டி ஸ்பெயின் கால்பந்து சங்கம் இந்த உலகக்கோப்பைக்கு முன் செய்த அதிரடி முடிவுகளும், இங்கே பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. கடைசி நேரத்தில் பயிற்சியாளரை மாற்றியதும், காலாவதியாகிப் போன டிக்கி டாக்காவை இன்னும் அவர்கள் மறக்காததும், வெகு சீக்கிரமே ஸ்பெயின், ரஷ்யாவிலிருந்து வெளியேற வழிவகுத்துவிட்டது.