Published:Updated:

தொடரும் சோகம்... உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது `சாம்பியன்’ ஜெர்மனி!

தொடரும் சோகம்... உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது `சாம்பியன்’ ஜெர்மனி!

தொடரும் சோகம்... உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது `சாம்பியன்’ ஜெர்மனி!

Published:Updated:

தொடரும் சோகம்... உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது `சாம்பியன்’ ஜெர்மனி!

தொடரும் சோகம்... உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது `சாம்பியன்’ ஜெர்மனி!

தொடரும் சோகம்... உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது `சாம்பியன்’ ஜெர்மனி!

சோ ஹான்-வூ... உச்சரிக்கக் கொஞ்சம் கடினமான பெயர்தான். ஆனால், ஜெர்மனி ரசிகர்கள் இந்தப் பெயரை இனி ஜென்மத்துக்கும் மறக்க மாட்டார்கள். நடப்பு சாம்பியனாக உலகக் கோப்பையில் ஆடவந்திருந்த ஜெர்மனி அணி, லீக் போட்டிகளோடு வெளியேறி மீண்டும் நாடு திரும்புகிறது. 1938-ம் ஆண்டுக்குப் பிறகு (1950-ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஜெர்மனி ஆடத் தடை விதிக்கப்பட்டிருந்தது), முதல் முறையாக முதல் சுற்றோடு ஜெர்மனி வெளியேறுகிறது. இவை அனைத்துக்கும் காரணமானவரின் பெயர்தான் சோ ஹான்-வூ; தென் கொரியா அணியின் கோல் கீப்பர். இன்றைய போட்டியில் கோல் நோக்கி ஜெர்மனி வீரர்கள் அடித்த பந்தை அருமையாக சேவ் செய்து, ஜெர்மனியின் தோல்வியை உறுதி செய்தார் அவர்.

தென் கொரியாவை வீழ்த்தி, 'ரவுண்ட் ஆஃப் 16' சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட ஜெர்மனி, இஞ்சுரி டைமில் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் வாங்கி, உலகக் கோப்பையில் இருந்தே வெளியேறியது.

உலகக் கோப்பையில் குருப் எஃப் பிரிவில் இடம்பெற்றுள்ள நடப்பு சாம்பியன் ஜெர்மனி, தென் கொரியா அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி கசன் அரினா ஸ்டேடியத்தில் நடந்தது. கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய ஜெர்மனி அதிரடியாக ஐந்து மாற்றங்களைச் செய்திருந்தது. தாமஸ் முல்லர், டிராக்ஸலர் உள்ளிட்ட கீ பிளேயர்கள் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டனர்.  தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் இருந்த தென் கொரியாவும் நான்கு வீரர்களை மாற்றியிருந்தது.

முதல் பாதியில் ஜெர்மனி வேர்ல்ட் சாம்பியன் போல ஆடவில்லை. அதிலும், தென் கொரிய வீரர் எடுத்த ஃப்ரி கிக்கை, கோல் கீப்பர் நூயர் கையில் பிடித்து நழுவ விட்டதெல்லாம் உச்சம். அதிர்ஷ்டவசமாக அதைத் தென் கொரிய வீரர்கள் கோல் அடிக்கவில்லை. பொசஷன் அதிகம் வைத்திருந்தும், ஷாட் ஆன் டார்கெட், சான்ஸ் கிரியேட் செய்வதில் ஜெர்மனி வீரர்கள் தடுமாறினர். அப்படியே அமைந்த ஓரிரு வாய்ப்புகளையும் கோலாக மாற்றுவதில் சொதப்பினர். முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

47-வது நிமிடத்தில் பாக்ஸின் லெஃப்ட் கார்னில் கிம்மிக் கொடுத்த கிராஸை 6 யார்டு தூரத்தில் இருந்து ஹெட்டர் செய்தார் கோரட்ஸ்கா. அதை தன் இடதுபுறம் டைவ் அடித்து தடுத்தார் கொரியா கோல் கீப்பர் சோ. அட்டகாசமான  Save. மற்றொரு குரூப் மேட்ச்சில் ஸ்வீடன் கோல் அடித்துவிட்டதால், ஜெர்மனி இந்தப் போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. 51-வது நிமிடத்தில் ஒசில் கொடுத்த பாஸை, 20 யார்டு தூரத்தில் இருந்த வெர்னர், நின்று நிதானமாக கோல் அடித்திருக்கலாம். ஆனால், அதை அப்படியே  volley அடிக்கிறேன் என கம்பத்துக்கு மேல் அடித்து வீணடித்தார்.

லட்டு லட்டான வாய்ப்புகளை மிஸ் செய்வதைப் பார்த்து, சப்ஸ்டிட்யூட் பிளேயர்களை இறக்கினார் ஜெர்மனி கோச் ஜோகிம் லூ. கதிராவுக்குப் பதிலாக கோமஸ், கோரட்ஸ்காவுக்குப் பதிலாக முல்லர் களமிறங்கினர். ஜெர்மனி கோல் அடிக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, ஜெர்மனி பெனால்டி பாக்ஸை முற்றுகையிட்டனர் கொரியன் பாய்ஸ். ஆனால், ஷாட் ஆன் டார்கெட் அடிப்பதற்குப் பதிலாக, பாக்ஸில் கிடந்து திணறிக்கொண்டிருந்தனர்.

கடைசி பத்து நிமிடம். சென்ட்ர் பேக் தவிர்த்து மற்ற எல்லா ஜெர்மனி வீரர்களும் அட்டாக்கிங் மிட்ஃபீல்டர்களாக மாறியிருந்தனர். பொசஷன், ஷாட் ஆன் டார்கெட் என ஜெர்மனியின் கையே ஓங்கியிருந்தது. ஹம்மல்ஸ் ஒரு ஹெட்டர் செய்தார். ஆனால், அதுவும் ஜஸ்ட் மிஸ். எல்லோரும் ஜெர்மனி எப்படா கோல் அடிக்கும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தபோது அந்த ஆச்சர்யம் நிகழ்ந்தது.

இஞ்சுரி டைமில் ஜெர்மனிக்கு அதிர்ச்சி கொடுத்தது கொரியா. 90+3 நிமிடத்தில் கொரியாவுக்குக் கிடைத்த கார்னர் கிக்கை, கிம் யங் வார் கோல் அடித்தார். ஆனால், அசிஸ்டன்ட் ரெஃப்ரி ஆஃப் சைட் என கொடியை உயர்த்தியதால், ஜெர்மனி ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ஆனால்,  VAR மூலம் ரெஃப்ரிக்கு ரிவ்யூ கோருமாறு உத்தரவு வர, ரெஃப்ரி டெக்னிக்கல் லைனில் இருந்த ஸ்கிரினீல் பார்த்தார். அதில், பந்து ஜெர்மனி டிஃபண்டர் சுலே காலில் பட்டு வலைக்குள் விழுந்தது கன்ஃபார்ம் ஆனது. இதனால், கொரியா கோல் அடித்ததாக அறிவிக்கப்பட்டது.

கொரியா 1-0 என  முன்னிலை பெற்றதால், ஜெர்மனி வீரர்கள் எப்படியும் ஒரு கோல் அடித்து விடத் துடித்தனர். கோல் கீ்ப்பர் நூயர் பாக்ஸில் இருந்து வெளியேறி வந்து அட்டாக்கிங் செய்ய தயாராகி விட்டார். ஒரேயொரு டிஃபண்டர் ஹம்மல்ஸ் மட்டுமே ஜெர்மனி எல்லையில் இருந்தார். இந்த நேரத்தில் ஆஃப் லைனில் இருந்து வந்த ஒரு லாங் பாஸ், ஜெர்மனியின் கதையை முடித்து விட்டது.  ஆம், ஆளே இல்லாத இடத்தில் அட்டகாசமாக ஒரு கோல் அடித்து விட்டார் சன் ஹியூங் மின்.

முடிவில், 2-0 என ஜெர்மனியை வீழ்த்தியது கொரியா. குரூப் சுற்றில் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடம் பிடித்து, குரூப் சுற்றுடன் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது உலக சாம்பியன் ஜெர்மனி. இதன் மூலம், நடப்பு சாம்பியன்கள் அடுத்த உலகக் கோப்பையில் குரூப் சுற்றுடன் வெளியேறும் சோக சாதனை தொடர்கிறது. ஆம், 2002-ல் ஃபிரான்ஸ், 2010-ல் இத்தாலி, 2014-ல் ஸ்பெயினைத் தொடர்ந்து, 2018-ல் ஜெர்மனி குரூப் சுற்றுடன் உலகக் கோப்பைக்கு குட்பை சொன்னது.

இதே பிரிவில் இன்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஸ்வீடன் 3-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோவை வீழ்த்தியது. இரு அணிகளும் 6 புள்ளிகளுடன் இப்பிரிவின் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பிடித்தனர். ஒருவேளை ஜெர்மனி இன்று வெற்றி பெற்றிருந்தால், கோல் வித்தியாச கணக்குப்படி மெக்ஸிகோ லீக் போட்டிகளோடு வெளியேறும் நிலை இருந்தது. ஆனால், ஜெர்மனி தோற்றதால் மெக்சிகோ மற்றும் ஸ்வீடன் அணிகள் 'ரவுண்ட் ஆஃப் 16' சுற்றுக்குத் தகுதி பெற்றன.