Published:Updated:

மெஸ்ஸியின் முதல் கோல்... தப்பியது அர்ஜென்டினா..! #WorldCup #NIGARG

மெஸ்ஸியின் முதல் கோல்... தப்பியது அர்ஜென்டினா..! #WorldCup #NIGARG

மெஸ்ஸியின் முதல் கோல்... தப்பியது அர்ஜென்டினா..! #WorldCup #NIGARG

மெஸ்ஸியின் முதல் கோல்... தப்பியது அர்ஜென்டினா..! #WorldCup #NIGARG

மெஸ்ஸியின் முதல் கோல்... தப்பியது அர்ஜென்டினா..! #WorldCup #NIGARG

Published:Updated:
மெஸ்ஸியின் முதல் கோல்... தப்பியது அர்ஜென்டினா..! #WorldCup #NIGARG

2014 உலகக் கோப்பை லீக் சுற்று... அர்ஜென்டினா - நைஜீரியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சமநிலையில் இருக்கிறது. அர்ஜென்டின டிஃபண்டர் ரோயோ வெற்றிக்கான கோலை அடித்தார். அப்போது அவரைப் பெரிதாக யாரும் கொண்டாடிடவில்லை. நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது. அதே இரண்டு அணிகள். அதே குரூப் பிரிவு. இப்போது 1-1 என சமநிலை. மீண்டும் தன் அணிக்கு வெற்றிக்கான கோலை அடிக்கிறார் மார்கோஸ் ரோயோ. அனைத்து வீரர்களும் ரசிகர்களும் அவரைக் கொண்டாடுகின்றனர். மொத்த அர்ஜென்டினாவும் அவரைக் கொண்டாடுகிறது. மார்கோஸ் ரோயோவின் அந்தக் கோலை, அர்ஜென்டினாவை உலகக் கோப்பையின் அடுத்த சுற்றுக்கு எடுத்துச் சென்றிருக்கிறது. தன் அணிக்கு வரவிருந்த அவமானத்தை உடைந்தெறிந்திருக்கிறது.

வழக்கம்போல் அர்ஜென்டினா அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. குரோஷியாவுக்கு எதிராகச் சொதப்பிய கோல்கீப்பர் கேபயாரோ நீக்கப்பட்டு, அர்மானி சேர்க்கப்பட்டார். 31 வயதான அர்மானி அர்ஜென்டினா அணிக்காக விளையாடும் முதல் போட்டி இது. மேலும், கடந்த போட்டியின் ஸ்டார்டிங் லெவனில் இடம் பெறாத டி மரியா, ரோயோ, ஹிகுவெய்ன் ஆகியோரும் இந்தப் போட்டியைத் தொடங்கினர். ஃபார்மேஷனும் 4-3-3 என மாறியது. 

ஆட்டத்தின் முதல் 10 நிமிடங்கள் அர்ஜென்டினாவின் வசமே இருந்தது. விங்கில் இருந்து சில நல்ல அட்டாக்குகளை அந்த அணி தொடுத்தது. இரண்டு அணிகளின் அடுத்த சுற்று வாய்ப்புகளுக்குமே இந்தப் போட்டி முக்கியம் என்பதால், இரண்டு அணி வீரர்களும் கொஞ்சம் பதற்றத்துடனேதான் விளையாடினர். தொடர்ச்சியாக எதிரணியிடம் பொசஷன் இழந்தனர். இரு அணியின் பாஸ்களுமே மோசமாக இருந்தது. அணியின் பிரதான வீரரான மாஷரானோ சில மிஸ்பாஸ்கள் செய்து, டிஃபண்டர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கினார். ஆட்டத்தின் 14-வது நிமிடம், எவர் பனேகா கொடுத்த அற்புதமான த்ரூ பாலை மிகச்சிறப்பாக கன்ட்ரோல் செய்து கோலடித்தார் மெஸ்ஸி. இந்தத் தொடரில் தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை ஒருவழியாகச் சமாளித்து, ரஷ்யாவில் தன் முதல் கோலை அடித்தார். இந்த உலகக் கோப்பையின் 100-வது கோல் இதுதான். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மெஸ்ஸிக்கு உத்வேகம் வந்ததும், மொத்த அர்ஜென்டினா அணிக்கும் உத்வேகம் வந்தது. மிகச்சிறப்பாக, நைஜீரிய அணிக்குக் கடும் நெருக்கடியை ஏற்படுத்தினர். அதனால் அந்த அணியால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. முதல் பாதி 1-0 என முடிவுக்கு வந்தது. இரண்டாம் பாதி தொடங்கியதும், நைஜீரியா தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. அதன் பலனாக, 51-வது நிமிடத்தில் அவர்களுக்குப் பெனால்டி கிடைத்தது. மாஷரானோவின் பிழையால் கிடைத்த பெனால்டியை கூலாக கோலாக்கினார் விக்டர் மோசஸ். 1-1. அதன்பிறகு நைஜீரிய அணி தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியது.

அர்ஜென்டினா அணியின் அனைத்து முயற்சிகளையும் தடுத்துக்கொண்டே இருந்தார்கள். அவ்வப்போது அட்டாக்கிலும் அவர்களுக்கு பிரச்னை ஏற்படுத்தினர். அர்ஜென்டினா அணியும் வீரர்களை மாற்றிப் பார்த்தது. ஃபார்மேஷனை மாற்றிப் பார்த்தது. பலன் இல்லை. ஆட்டம் முடிவை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. அர்ஜென்டினா வெற்றி பெறவில்லையெனில் உலகக் கோப்பையிலிருந்து வெளியேற வேண்டும். மெஸ்ஸி வெளியேற வேண்டும். அந்த முடிவும் நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போதுதான் மார்கோஸ் ரோயொவின் அந்தக் கோல்! வலது விங்கில் இருந்து மெர்சாடோ கொடுத்து கிராஸை ஆன் தி வாலியில் கோலடித்து அமர்க்களப்படுத்தினார் ரோயோ. அர்ஜென்டினா உயிர் பெற்றது.

அதன்பிறகு அர்ஜென்டினா வீரர்கள் நேரத்தைக் கடத்தத் தொடங்கினார்கள். அதற்காக மெஸ்ஸியும் கூட யெல்லோ கார்ட் பெற்றார். நைஜீரிய அணியின் கடைசி அட்டாகிங் மூவையும் தடுத்து ஒருவழியாக வெற்றி பெற்றது அர்ஜென்டினா. அந்த அணி அடுத்த சுற்றில் ஃபிரான்ஸை எதிர்கொள்கிறது. ஐஸ்லாந்தை வீழ்த்திய குரோஷியா அணி, அடுத்த சுற்றில் டென்மார்க்கை சந்திக்கிறது. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism