Published:Updated:

``த்ரில்லிங் வெற்றி ஓகே… ஆனா, ஜெர்மனி டிஃபன்ஸ் வீக்!’’ – ராவணன் #WorldCup

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``த்ரில்லிங் வெற்றி ஓகே… ஆனா, ஜெர்மனி டிஃபன்ஸ் வீக்!’’ – ராவணன் #WorldCup
``த்ரில்லிங் வெற்றி ஓகே… ஆனா, ஜெர்மனி டிஃபன்ஸ் வீக்!’’ – ராவணன் #WorldCup

``த்ரில்லிங் வெற்றி ஓகே… ஆனா, ஜெர்மனி டிஃபன்ஸ் வீக்!’’ – ராவணன் #WorldCup

அர்ஜென்டினா - குரோஷியா ஆட்டத்துக்குப் பிறகு கொஞ்சம் இன்னொரு ஹை-பிரஷர் போட்டியைக் கண்டுள்ளது இந்த உலகக் கோப்பை. பால் பொசஷன், ஷாட்ஸ், கடைசி நிமிட த்ரில் கோல் என ஜெர்மனி – ஸ்வீடன் போட்டி எதிர்பார்த்த அளவுக்கு நன்றாகவே இருந்தது. ஜெர்மனி அணியில் செய்திருந்த மாற்றங்கள் கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தாலும், அணியின் பெர்ஃபாமன்ஸில் தாக்கத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து ஜெர்மனிக்காக 26 போட்டிகளில் விளையாடிய ஒசில், நேற்றைய போட்டியில் இல்லை. அவரை அணியில் சேர்க்காதது ஆச்சர்யமாக இருந்தது. கெதிராவையும் மாற்றி விட்டார் லோ. டோனி க்ரூஸ், செபாஸ்டியன் ரூடி இருவரையும் டிஃபன்ஸிவ் மிட் ஃபீல்டராக இறக்கியிருந்தனர். ரியூஸைக் கொண்டு வந்தது நல்ல விஷயம். அவர் இருந்ததால் நம்பர் -10 பொசிஷனில் நல்ல மூவ்மென்ட்ஸ் இருந்தது.

இன்னமும் நடப்பு சாம்பியனின் டிஃபன்ஸ் பலவீனமாக இருக்கிறது. ஸ்வீடன் அடித்த கோல் சூப்பர் கோல். இரண்டு டிஃபண்டர்களுக்கு நடுவே நன்றாக பந்தை மார்பில் வாங்கி, கோல் கீப்பர் அட்வான்ஸாக வந்ததைப் பயன்படுத்தி அட்டகாசமாக கோல் அடித்துவிட்டார் தொய்வானன். அந்த ஒரு ஆப்ஷன் மட்டுமே இருந்தது. மற்றபடி அப்படி வரும் பெளன்ஸிங் பந்தை ஃபினிஷ் பண்ணவே முடியாது. அவர் அடித்தது மெச்சூர்டு கோல். இதுபோன்ற தருணங்களில் ஜெர்மனியின் டிஃபன்ஸ் கொஞ்சம் சறுக்குகிறது. 

ஜெர்மனி கோல் கீப்பர் நூயர் அட்டகாசமாக இரண்டு கோல்களைத் தடுத்தார்.   அதுவும் கோலாகி இருந்தால் ஜெர்மனிக்கு இன்னும் கஷ்டமாக இருந்திருக்கும். ஜெர்மனி ஏன் இவ்வளவு ஓபனாக ஆடுகிறார்கள் எனப் புரியவில்லை. எப்போதுமே, அட்டாக் போய்க்கொண்டிருக்கும்போது கவுன்டர் அட்டாக்கை எதிர்பார்த்து டிஃபன்ஸ் ரெடியாக இருக்க வேண்டும். ஒட்டுமொத்த அணியும் மேலே (அட்டாக்கிங்கில்) இருக்கும்போது, கவுன்டர் அட்டாக்கில் ஒரு பால் கிடைத்தாலும், எதிரணி மேலே ஏறி வந்துவிடுவர். கடந்த போட்டியிலும் இதே தவறு. இந்த மேட்ச்சிலும் அதே தவறு.

கோல் வாங்கிவிட்டு, அடுத்து கோல் அடிப்பது என்பது எப்போதுமே அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஒரு கோல் அடித்துவிட்டால், ஒட்டுமொத்த அணியும் டிஃபன்ஸில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிடும். அந்த மாதிரி நேரங்களில் கார்னர் கிக், ஃப்ரீ கிக் போன்ற செட் பீஸ்களைத்தான் கோல் அடிக்க நம்ப வேண்டும். ஓபன் சான்ஸ் கிடைப்பது கஷ்டம்.

நல்லவேளையாக, ரியூஸ் இந்த இடத்தில் இருந்ததால், ஒரே ஒரு டச்… அது கோலாகி விட்டது. அதேபோல, டோனி க்ரூஸ் அடித்த கடைசி நிமிட கோல் அட்டகாசம். பெனால்டி பாக்ஸின் வலது ஓரத்தில், அந்த ஆங்கிளில் இருந்து அந்த கோலை அடித்தது பெரிய விஷயம். இதுவே பாக்ஸின் லெஃப்ட் சைடில் இருந்து கிடைத்திருந்தால் நேரடியாக கோல் அடித்திருக்க முடியாது. கிராஸ் அல்லது பாஸ்தான் போட்டிருப்பார். அது கோலாக கன்வெர்ட் ஆகியிருக்காது. இந்த வெற்றி ஜெர்மனிக்கு மாரல் பூஸ்ட்' கொடுத்திருக்கும்.

ஜெரோம் போடங் டபுள் யெல்லோ வாங்கி சஸ்பெண்டாகி விட்டார். அடுத்த போட்டியில் ஹம்மல்ஸ் வந்து விடுவார். இருந்தாலும், ஜெர்மனியின் டிஃபன்ஸ் கொஞ்சம் சொதப்பலாகத்தான் இருக்கிறது. அடுத்த போட்டி கொரியாவுடன்… மஸ்ட் வின் மேட்ச். கொரியாவையும் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் வேகமாக இருக்கிறார்கள். அவர்களிடம் டிஃபன்ஸில் இவ்வளவு கேப் விடக் கூடாது. தவிர, கொரியா டோர்னமென்ட்டில் இருந்துது வெளியேறி விட்டதால், அவர்களுக்கு வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம், நெருக்கடி ஏதுமில்லை. அதேநேரத்தில் ஜெர்மனி வென்றால்தான், ரவுண்ட் ஆஃப் 16 போக முடியும். இல்லையெனில், அடுத்த அணிகளின் ரிசல்ட்டுக்காக தேவுடு காக்க வேண்டியிருக்கும். அடுத்தபோட்டியிலும் இதேபோல எல்லா வீரர்களும் அட்டாக்கிங் சென்று, டிஃபன்ஸை அம்போவென விட்டால் கஷ்டம்.

இதுபோன்ற டோர்னமென்ட்களில் கோல் வாங்கவே கூடாது. நூயர் நல்ல கீப்பர்தான். ஜெர்மனி வேர்ல்ட் சாம்பியன்தான். ஆனால், இரண்டு போட்டிகளில் இரண்டு கோல் வாங்கியது, உலக சாம்பியனுக்கு அழகல்ல. அதற்காக, ஜெர்மனி கோல் கிரியேட் பண்ணவே இல்லை என்று சொல்லவில்லை. வாய்ப்புகளை அவர்கள் கோலாக மாற்றவில்லை. ஃபினிஷிங்கில் இன்னும் ஜெர்மனி தடுமாறுகிறது. ஸ்பயெ்ன் வீரர்  டியாகோ கோஸ்டாவைப் பாருங்கள்… பந்தை அவ்வளவாக டச் செய்வதே இல்லை. அதேநேரத்தில் கிடைக்கும் ஓரிரு வாய்ப்பையும் கோல் அடித்து விடுகிறார். அந்தமாதிரி ஒரு பெர்ஃபெக்ட் ஃபினிஷிங் இருக்க வேண்டும். நல்ல பால் பொசஷன் வைத்திருக்கும் அணி, கோல் கன்சீட் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

கடைசி நிமிட த்ரில் வெற்றி பெற்றதில் ஜெர்மனி ரசிகர்களுக்குத் திருப்தியே. அந்த ஒரு கோல் எல்லோருக்கும் நம்பிக்கை அளித்திருக்கிறது. ரசிகர்கள் அடுத்த போட்டியில் இன்னும் உத்வேகத்துடன் ஜெர்மனிக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். ஆனால், எல்லா போட்டிகளிலும் இதுபோல கடைசி நிமிடத்தில் கோல் அடிக்க வாய்ப்பு கிடைக்கும் என சொல்ல முடியாது.  1-1 என இல்லாமல் 2-0 என இருந்திருந்தால் என்ன செய்ய முடியும்? அதனால்தான், டிஃபன்ஸ் ஸ்ட்ராங்க இருந்தால், கடைசி 10 நிமிடத்தில் அட்டாக் ஆடலாம். ஜெர்மனி அடுத்த மேட்ச்சில் டிஃபன்ஸிவ் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் என நம்புகிறேன்.

ராவணன் தர்மராஜ் - தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர். டெம்போ, மோகன் பகான், சர்ச்சில் பிரதர்ஸ் போன்ற முன்னணி ஐ -லீக் அணிகளில் விளையாடிய அனுபவ டிஃபண்டர். இந்திய 23 வயதுக்குட்பட்ட அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடியுள்ளார். புனே சிட்டி அணிக்காக ஐ.எஸ்.எல் தொடரில் 34 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சிட்டி அணிக்கு விளையாடிவருகிறார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு