Published:Updated:

ரொனால்டோவை சமன்செய்த லுகாகு! துனிஷியாவைப் பந்தாடியது பெல்ஜியம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரொனால்டோவை சமன்செய்த லுகாகு! துனிஷியாவைப் பந்தாடியது பெல்ஜியம்
ரொனால்டோவை சமன்செய்த லுகாகு! துனிஷியாவைப் பந்தாடியது பெல்ஜியம்

ரொனால்டோவை சமன்செய்த லுகாகு! துனிஷியாவைப் பந்தாடியது பெல்ஜியம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

உலகக் கோப்பை ஜி பிரிவு போட்டியில் துனிசியா அணியைப் பந்தாடி, ரவுண்ட் ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது பெல்ஜியம். இன்று மாலை மழைக்கு இடையே கோல்களும் பொழிந்த இந்தப் போட்டியில் 5-2 என பெல்ஜியம் வென்றது. 

ஆட்டம் தொடங்கியது முதலே வெறித்தனமான அட்டாகிங் கேமைக் கையில் எடுத்தது பெல்ஜியம். அதன் பலனாக 6-வது நிமிடத்தில் அந்த அணியின் கேப்டன் ஹசார்ட் ஃபௌல் செய்யப்பட்டு பெனால்டி கிடைத்தது. அதை மிகவும் கூலாக கோலடித்து அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார் ஹசார்ட்.

அதன்பிறகும் மெர்டன்ஸ், லுகாகு, டி ப்ருய்ன், ஹசார்ட் நால்வரும் தொடர்ந்து துனிசியாவின் டிஃபன்ஸுக்கு ஆட்டம் காட்டினர். ஹசார்ட் அடுத்தடுத்து இரண்டு ஷாட்கள் கோலாகாமல் போக, 16-வது நிமிடத்தில் லுகாகு இரண்டாவது கோலை அடித்தார். ஆரம்பத்திலேயே இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்த துனிஷியா, உடனடியாக பதில் கோல் திருப்பியது. ஃப்ரீ கிக் மூலம் வாபி கஸ்ரி கொடுத்த கிராஸை டைலன் ப்ரான் கோலடித்தார்.

முதல் போட்டியைப் போலவே, இந்தப் போட்டியிலும் துனிஷிய வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டனர். முதல் பாதியிலேயே இருவர் வெளியேற, மனதளவில் துனிஷியா மிகவும் பின்தங்கியது. பெல்ஜியம் விடாமல் துனிஷியாவின் கோல் போஸ்டை முற்றுகையிட ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்தது. முதல் பாதியின் ஸ்டாப்பேஜ் டைமில் லுகாகு இரண்டாவது கோலடிக்க, 3-1 என்ற ஸ்கோரோடு இரு அணிகளும் டக் அவுட் சென்றன. 

இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் துனிஷிய வீரர்கள் கொஞ்சம் நன்றாக விளையாடினார்கள். ஆனால், உடனடியாக பெல்ஜியம் அணி ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. 51-வது நிமிடத்தில் ஆல்டர்வீரெல்ட் கொடுத்த லாங் பாஸை ஹசார்ட் கோலாக்கினார். அதன்பிறகு முன்னணி வீரர்களை மாற்றி சேஃப் கேம் ஆடினார் பெல்ஜியம் கோச் மார்டினஸ். மாற்று வீரராகக் களமிறங்கிய மிச்சி பாட்ஷுயாயி அடித்த 3 ஷாட்கள் தொடர்ச்சியாக கோலடிக்காமல் மிஸ் ஆனது. ஆனால், ஒருவழியாக 90-வது நிமிடத்தில் தன் முதல் உலகக் கோப்பை கோல் அடித்து ஆசுவாசப்பட்டார் மிச்சி. 

ஸ்டாப்பேஜ் டைம் முடியும்போது துனிஷிய கேப்டன் வாபி கஸ்ரி மன ஆறுதலுக்கு ஒரு கோல் போட, ஆட்டம் 5-2 என முடிவுக்கு வந்தது. இந்த உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடிக்கப்பட்ட போட்டி  இதுதான். ஜி பிரிவில் 6 புள்ளிகளுடன் பெல்ஜியம் முதலிடத்திலும், புள்ளிகள் ஏதும் பெறாத துனிஷியா கடைசி இடத்திலும் இருக்கின்றன. இந்தப் போட்டியில் 2 கோல்கள் அடித்ததன்மூலம், இந்த உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ரொனால்டோவோடு (4 கோல்கள்) சமன் செய்துள்ளார் ரொமேலு லுகாகு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு