Published:Updated:

``நெய்மரிடம் மெச்சூரிட்டி இல்லை... இன்னும் அப்கம்மிங் பிளேயர் மாதிரியே இருக்கிறார்!’’#WorldCup

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``நெய்மரிடம் மெச்சூரிட்டி இல்லை... இன்னும் அப்கம்மிங் பிளேயர் மாதிரியே இருக்கிறார்!’’#WorldCup
``நெய்மரிடம் மெச்சூரிட்டி இல்லை... இன்னும் அப்கம்மிங் பிளேயர் மாதிரியே இருக்கிறார்!’’#WorldCup

சிம்பிளாக கொடுக்க வேண்டிய பாஸை கொஞ்சம் சீன் போட்டுக் கொடுக்கிறார். இது அவசியமே இல்லை. மெஸ்ஸி, ரொனால்டோ அளவுக்குப் பெயர் வாங்க நெய்மர் இன்னும் மெச்சூரிட்டிய அடைய வேண்டும். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கோவா முழுக்க வேர்ல்ட் கப் ஜுரம். மழை நேரம் என்பதால் பீச் ரெஸ்ட்டாரன்ட்களை மூடிவிட்டார்கள். இல்லையெனில், இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். கார், பைக் என எங்கு பார்த்தாலும் பிரேசில், போர்ச்சுகல் கொடிகளைக் கட்டியிருக்கிறார்கள். முகத்தில் பெயின்ட்டிங் பூசி, தங்கள் ஆதர்ச அணிகளை உற்சாகமாக ஆதரித்து வருகிறார்கள். பெரும்பாலான கோவா ரசிகர்களின் சப்போர்ட் போர்ச்சுகலுக்குத்தான்... அது இருக்கட்டும். உலகக் கோப்பையின் முதல் சுற்றுப் போட்டிகள் முடிந்து, அடுத்த சுற்று ஆரம்பித்துவிட்டது. #WorldCup

எதிர்பார்ப்புக்கு மாறாக இந்தமுறை பெரிய அணிகள் தடுமாறுகின்றன. யாரும் எதிர்பார்க்காதவகையில் ரஷ்யாவின் பெர்ஃபாமன்ஸ் கவனம் ஈர்க்கிறது. உலகக் கோப்பையை நடத்தும் நாடு என்ற வகையில், ரசிகர்களின் ஆதரவும் அவர்களுக்கு கிடைக்கிறது. அது அவர்களுக்கு பெரிய ப்ளஸ். அவர்களின் ஆட்டமும் நன்றாக இருக்கிறது. குறிப்பாக, செரிஷேவ் மூன்று கோல்கள் அடித்துவிட்டார். டாப் ஸ்கோரர்கள் பட்டியில் ரொனால்டோவுக்கு அடுத்து இருக்கிறார்.

ரஷ்யா முதலிரண்டு போட்டிகளில் கோல் வாங்கவே இல்லை. கிளீன் ஷீட், எட்டு கோல்கள் என்பது பெரிய விஷயம். ஸ்பெயின், ஜெர்மனி போன்ற பெரிய அணிகளே கோல் அடிக்க தடுமாறுகிறது. அதிலும், ஸ்பெயின் கடைசியாக வென்ற ஆறு உலகக் கோப்பை போட்டிகளில் ஐந்தில் 1-0 என்ற கோல் கணக்கில்தான் வெற்றிபெற்றிருக்கிறது. அப்படியிருக்கையில் ரஷ்யா அசால்ட்டாக இரண்டு போட்டிகளில் எட்டு கோல்கள் அடித்திருக்கிறது. இது சைக்காலஜி ரீதியாக அணி வீரர்களுக்கு புது உற்சாகத்தைக் கொடுக்கும். ரஷ்ய வீரர்கள் பிசிக்கலி ஹைட், பில்ட் என செம ஸ்ட்ராங். ரஷ்யா அரையிறுதிக்கு முன்னேறினாலும் ஆச்சர்யமில்லை.

பெல்ஜியம் எதிர்பார்த்தது போலவே ஓகே. முதல் மேட்ச் ஒன்சைட் போலத் தெரிந்தது. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு பெல்ஜியம் முன்னேறி விடும். நாக் அவுட் சுற்றில் அவர்கள் எப்படி பெர்ஃபார்ம் செய்வர் என்பதை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.  லுகாகு நன்றாக ஃபினிஷ் செய்தாலே பெல்ஜியம் நல்ல இடத்துக்கு வந்துவிடும். கெவின், ஹசார்டு என அழகழகாக பாஸ் போடும் வீரர்கள் இருக்கிறார்கள். நல்ல டிஃபண்டர்கள் இருக்கிறார்கள். அணி நன்றாக இருக்கிறது. 

மெக்ஸிகோ, ஜெர்மனிக்கு எதிராக எதிர்பார்த்தைவிட சிறப்பாகவே விளையாடியது. கவுன்டர் அட்டாக் ரொம்பவே துரிதமாக இருந்தது. டிஃபன்ஸ் வலுவாக இருந்தது. ஒட்டுமொத்தத்தில் இந்த முதல் சுற்றில் நல்ல நல்ல கோல்களைப் பார்க்க முடிந்தது. 

ஸ்பெயின், ஜெர்மனி, அர்ஜென்டினா போன்ற பெரிய அணிகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு ரிசல்ட் கிடைக்கவில்லையே தவிர, பெர்ஃபார்மன்ஸ் நன்றாகவே இருந்தது. உலகக் கோப்பை என்பது டோர்னமென்ட். அது லீக் அல்ல. கோல் போடவில்லையெனில்  பால் பொஷசன், ஷாட் ஆன் டார்கெட் போன்ற புள்ளிவிவரங்கள் எல்லாம் இங்கு செல்லுபடியாகாது. இதுவரையிலான உலகக் கோப்பை போட்டிகள் பார்க்கவே நன்றாக இருக்கிறது.

சுவிட்சர்லாந்துக்கு எதிரான போட்டியின்போது நெய்மர் 10 முறை ஃபவுல் செய்யப்பட்டார்.  20 ஆண்டுகளுக்குப் பின் உலகக் கோப்பையில் ஒரு வீரருக்கு எதிராக அதிக ஃபவுல் செய்யப்பட்டது இதுவே முதன்முறை. நெய்மரை குறிவைத்து ஃபவுல் செய்ததில் அவரது கணுக்காலில் காயம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வந்தன. இதனால் முதல் போட்டி முடிந்தபின் பிரேசில் சார்பில், புகார் தெரிவித்ததாக செய்திகள் வந்தன. ஒரு டிரெய்னிங் செஷனை அவர் மிஸ் செய்துவிட்டார். நேற்றுதான் அவர் மீண்டும் பயிற்சி எடுத்தார். அந்த வீடியோ வைரலானது.

இன்னமும் நெய்மர் அப்கம்மிங் பிளேயர் போலவே ஆடிக்கொண்டிருப்பது வருத்தமாக இருக்கிறது. சிறுவனாக இருக்கும்போது நாமே பந்தை வைத்திருக்க வேண்டும் என நினைப்போம். மெச்சூரிட்டி வந்தபின் பந்தை எப்போது ரிலீஸ் செய்ய வேண்டும், கன்ட்ரோல் செய்ய வேண்டும் என்பது தெரியும். நெய்மர் ஸ்கில்ஃபுல் பிளேயர். மெச்சூரிட்டி வந்ததும் வேற லெவல் போவார் என நினைத்தேன்.  ஏனெனில், ரொனால்டோவும் ஆரம்பத்தில் இப்படித்தான் இருந்தார்.  

ஆனால், சிம்பிளாக கொடுக்க வேண்டிய பாஸை கொஞ்சம் சீன் போட்டுக் கொடுக்கிறார். இது அவசியமே இல்லை. மெஸ்ஸி, ரொனால்டோ அளவுக்குப் பெயர் வாங்க நெய்மர் இன்னும் மெச்சூரிட்டிய அடைய வேண்டும். 

உங்கள் திறமையால் அணிக்கு என்ன பலன்? கோல் அடிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, பெனால்டி வாங்கிக் கொடுப்பது, ஃப்ரீ கிக் வாங்கிக் கொடுப்பது என அணியில் உங்கள் பங்கு என்ன? கடந்த மூன்று ஆண்டுகளாகவே நெய்மரை ரொனால்டோவுடன் ஒப்பிட்டுப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியிருக்கையில், அவருக்கென ஒரு பொறுப்பு இருக்கிறது. தனித்துவத்தைக் காட்ட வேண்டும். தனித்துவத்தையும் கோல் அடிப்பதில், அணிக்கு நல்ல ரிசல்ட் பெற்றுத் தருவதில் காட்ட வேண்டும்.  இன்னொரு விஷயம், தனிப்பட்ட முறையில் பிரேசில் அரையிறுதிக்கு முன்னேறும் என நான் எதிர்பார்க்கவில்லை. 

ஆன் பேப்பரை வைத்து ஒரு அணியை கணிக்க முடியாது. ஒரு அணியாக எப்படி பெர்ஃபார்ம் செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.  உதாரணத்துக்கு, ஸ்பெயின் - போர்ச்சுகல் போட்டியை உன்னிப்பாக கவனித்தால், போர்ச்சுகல் ஆட்டத்தில் ஒன்றுமே இல்லை. பந்தை வைத்துக்கொண்டே இருந்தார்கள். அவர்களுக்குத் தெரியும். ரொனால்டோதான் அவர்கள் பலம் என்று... அதேபோல, கரெக்டாக அவர் ஃப்ரி கிக் வாங்கினார். அதை கோல் அடித்தார்.  அன்று அவர் கோல் அடித்த ஃப்ரீ கிக், பெனால்டி இரண்டுமே அவர் கிரியேட் செய்தது. நெய்மர் இந்த இடத்தில்தான் ரொனால்டோவிடம் கற்றுக்கொள்ள வேண்டும். 

வழக்கம்போல ஸ்பெயின் ஆட்டம் அழகாக இருக்கும். அவர்களிடம் பந்து நகர்ந்துகொண்டே இருக்கும். அவர்கள் ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஒரு வீரர் இந்த மாதிரி விளையாடுவதைத்தான் விரும்புவர். டியாகோ கோஸ்டா மூன்று கோல்கள் அடித்துவிட்டார். அவர் பணியை அழகாகச் செய்துவிட்டார். கோஸ்டா மீதுதான் பிரஷ்ஷர். ஏனெனில், அவர்கள் மொராட்டோவை தேர்வுசெய்யவில்லை. முழுக்க முழுக்க அவர்தான் அந்த அணியின் நம்பிக்கைக்குரிய ஸ்ட்ரைக்கர். இத்தனைக்கும் அவர் இரண்டாவது டிரான்ஸ்ஃபரில்தான் விளையாட ஆரம்பித்தார். அவர் வந்தபின் ஐரோப்பா கோப்பை வென்றனர். போர்ச்சுகலுக்கு எதிரான அவரது முதல் கோல் கிளாசிக் கோல். டி பாக்ஸை ஃபில் செய்தார். 

ரியல் மாட்ரிட், பார்சிலோனா என கிளப் அனுபவம் நிறைந்த வீரர்கள் இருப்பதால், ஸ்பெயின் ரவுண்ட் ஆஃப் 16 வந்துவிடும். பால் பொசஷனுக்கு ஏற்ப அவர்கள் கோல் அடித்தால் நன்றாக இருக்கும்.

மெஸ்ஸி சொதப்புகிறார் என்று சொல்ல முடியாது. அவரும் போராடுகிறார். நாம் சொல்கிறோம் பிரஷ்ஷர் என்று. ஆனால், அவர்கள் இதுபோன்ற சூழல்களைக் கடந்து வந்திருப்பர். இனி, அவர் கோல் அடிப்பார் என நம்புகிறேன். அவர் ஸ்கோர் பண்ணவில்லை என்றாலும், மற்ற வீரர்கள் கோல் அடித்தால், மெஸ்ஸி மீதான நெருக்கடி குறையும். ரொனால்டோ ஒரு பக்கம் கோல் அடிக்க அடிக்க, இங்கு மெஸ்ஸியின் மீது எதிர்பார்ப்பு வருகிறது.

என்னைப் பொறுத்தவரை மெஸ்ஸி - ரொனால்டோ ரைவல்ரி அவசியம். அப்படி இருந்தால்தான் கட்டுக்கோப்புடன் இருக்க முடியும். போட்டி இல்லையெனில் நன்றாக இருக்காது. நம்பர் -1 என ஒருமுறை முடிவு செய்துவிட்டால், வாழ்நாள் முழுக்க அவர் மட்டுமே நம்பர் -1 என்றில்லை. அதைத் தக்க வைக்க போராட வேண்டி இருக்கும். எல்லாம் சரி, நாம்தான் ரைவல்ரி, பிரஷ்ஷர் என்கிறோம். அவர்கள் அதைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். மெஸ்ஸி, தேசிய அணிக்காக கோப்பை வென்றதில்லை. இதுதான் கடைசி வாய்ப்பு. கோல் அடிக்கவில்லையென்றாலும் அணி வெற்றிபெற்றாலே அவருக்குச் சந்தோஷமாகத்தான் இருக்கும்.   

கிறிஸ்டியானோ ரொனால்டோவைப் பொறுத்தவரை இந்தமுறை தலைமைப்பண்பு பக்காவாக இருக்கிறது. அவர் தலைமையில் 2016-ல் யூரோ கோப்பை வென்றதால் இளம் வீரர்கள் ரொனால்டோ மீது நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இவரும் இளம் வீரர்களை ஊக்கப்படுத்துகிறார். இந்தமுறை போர்ச்சுகல் அவர் தலைமையில், இந்த உலகக் கோப்பையில் நல்ல இடத்தைப் பெறும்.

ஜெர்மனிதான் கொஞ்சம் சொதப்புகிறார்கள். ஒசில் அடுத்தப் போட்டியில் பிளேயிங் லெவனில் இருக்க மாட்டார் என்ற செய்தி உலவுகிறது. அதெல்லாம் தவறு. அவரைப் போல அட்டகாசமாக அசிஸ்ட் செய்ய வேறு யார் இருக்கிறார்கள்? அவரையெல்லாம் பெஞ்சில் வைக்க முடியாது. அவரைப் போல வேறு வீரர்கள் பாஸ், சான்ஸ் கிரியேட் பண்ண முடியாது. ஜெர்மனியை எதிர்த்து விளையாடும் அணி, டிஃபண்டிங் சாம்பியனுடன் ஆட வருகிறோம் என்பதால், திட்டமிடலுடன் வருவார்கள்.  ரியூஸ் ஃபர்ஸ்ட் லெவனில் ஸ்டார்ட் செய்தால் நன்றாக இருக்கும். கோச் என்ன நினைக்கிறார் எனத் தெரியாது. அந்த குரூப்பில் ஜெர்மனி, மெக்ஸிகோ இரண்டும் வலுவான அணிகள். மெக்ஸிகோவுடன் மேட்ச் முடிந்துவிட்டதால் ஜெர்மனிக்கு இனி சிக்கல் இருக்காது. 

Video Assistant Refree:

VAR  அவசியம். அதேநேரத்தில் முடிவுகளை விரைந்து எடுக்க வேண்டும். ஃபவுல் போன்ற சின்னச் சின்ன விஷயங்களை களத்தில் இருக்கும் ரெஃப்ரியே தீர்மானிக்க வேண்டும். எந்த வகையிலும் களத்தில் இருக்கும் ரெஃப்ரிக்கு முக்கியத்துவம் குறையக் கூடாது.  இப்போது பெனால்டியை VAR மூலம் பார்க்கச் சொல்வார்கள். அடுத்து ஃபவுலுக்கு VAR பார்க்கச் சொல்வார்கள். ரெட் கார்டு, யெல்லோ கார்டு என கொஞ்சம் கொஞ்சமாக மாறி, அப்புறம் பந்து வெளியே போனது, டச் லைன், சைடு லைன்  என எல்லாவற்றுக்கும் VAR கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். 

மெயின் ரெஃப்ரி VAR-யை பெரிதும் நம்பியிருக்கக் கூடாது. பெனால்டி ஓகே. அதுவும் கூட ஆன் தி ஸ்பாட்டில் கொடுக்க முடிந்தால் கொடுங்கள். ஒருவேளை 50-50 டவுட் இருந்தால் மட்டும் VAR போக வேண்டும். சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் தேர்ட் அம்பயர் மாதிரி VAR போகக் கூடாது. அப்படிப் போனால், 90 நிமிடத்தில் முடிய வேண்டிய ஒவ்வொரு ஆட்டம், எக்ஸ்ட்ரா டைம் வரை நீடிப்பது போல இருக்கும். அது கால்பந்தின் சுவாரஸ்யத்தைக் குறைந்துவிடும்.

ராவணன் தர்மராஜ் - தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர். டெம்போ, மோகன் பகான், சர்ச்சில் பிரதர்ஸ் போன்ற முன்னணி ஐ -லீக் அணிகளில் விளையாடிய அனுபவ டிஃபண்டர். இந்திய 23 வயதுக்குட்பட்ட அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடியுள்ளார். புனே சிட்டி அணிக்காக ஐ.எஸ்.எல் தொடரில் 34 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சிட்டி அணிக்கு விளையாடிவருகிறார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு