Published:Updated:

``ஜெர்மனியின் ஆட்டத்தில் நிறைய தவறுகள்... ஆனால், மீண்டு வருவார்கள்" - ராவணன்

``ஜெர்மனியின் ஆட்டத்தில் நிறைய தவறுகள்... ஆனால், மீண்டு வருவார்கள்" - ராவணன்

``ஜெர்மனியின் ஆட்டத்தில் நிறைய தவறுகள்... ஆனால், மீண்டு வருவார்கள்" - ராவணன்

Published:Updated:

``ஜெர்மனியின் ஆட்டத்தில் நிறைய தவறுகள்... ஆனால், மீண்டு வருவார்கள்" - ராவணன்

``ஜெர்மனியின் ஆட்டத்தில் நிறைய தவறுகள்... ஆனால், மீண்டு வருவார்கள்" - ராவணன்

``ஜெர்மனியின் ஆட்டத்தில் நிறைய தவறுகள்... ஆனால், மீண்டு வருவார்கள்" - ராவணன்

இந்த உலகக் கோப்பையின் மிகப்பெரிய அப்சட், முதல் வாரத்திலேயே நடந்துவிட்டது. நடப்பு சாம்பியன்கள் முதல் போட்டியில் தோற்கும் வாடிக்கை ரஷ்யாவிலும் தொடர்ந்துவிட்டது. மோசமான டிஃபன்ஸால் உலகக் கோப்பையை அதிர்ச்சியோடு தொடங்கியுள்ளது ஃபேவரிட்ஸ் ஜெர்மனி. 

இந்தப் போட்டியை ஜெர்மனி எந்த மனநிலையோடு எதிர்கொண்டது என்பதுதான் தெரியவில்லை. உலக சாம்பியன்கள் என்ற நினைப்பில் ரிலாக்சாக களமிறங்கினார்களோ, இல்லை 'உலக சாம்பியன் தோற்கக் கூடாது' என்ற நெருக்கடியில் களமிறங்கினார்களோ தெரியவில்லை. ஆனால், இது நிச்சயம் ஒரு சாம்பியன் டீமின் பெர்ஃபாமன்ஸ் கிடையாது. முன்களம் எவ்வளவு பலமாக வேண்டுமானாலும் இருக்கட்டும், டிஃபன்ஸ் மிகவும் பலமாக இருக்கவேண்டும். ஆனால், ஜெர்மனி அந்த இடத்தில் கடுமையாகச் சறுக்கிவிட்டது. 

கவுன்ட்டர் அட்டாக்கை மட்டுமே பிராதானமாக நம்பிக் களமிறங்கும் அணிக்கு, இவ்வளவு space கொடுத்து ஆடுவது மிகவும் தவறு. பல தருணங்களில் பின்களத்தில் போடங் மட்டுமே மெக்சிகோ வீரர்களைச் சமாளிக்க வேண்டியிருந்தது. 'சென்டர் பேக்' ஹம்மல்ஸ் கூட பல இடங்களில் சரியான பொசிஷனில் இருக்கத் தவறினார். இடது மற்றும் வலது full back இருவரும் அட்டாக்கில் மட்டுமே கவனம் செலுத்தினார்களே தவிர, கீழே இறங்கவேயில்லை. 

மெக்சிகோ அணி ஜெர்மனியின் இந்தத் தவறைப் பலமுறை பயன்படுத்திக்கொண்டது. லொசானோ கோல் போட்ட பிறகும்கூட, ஜெர்மனி வீரர்கள் டிஃபன்ஸைப் பலப்படுத்திக்கொள்ளவில்லை. போதாக்குறைக்கு, மார்கோ ரியூஸைக் களமிறக்க, கெதிராவை வெளியே எடுத்தார் பயிற்சியாளர் லோ. அந்த இடத்தில் ரியூஸ் நிச்சயம் களமிறக்கப்படவேண்டியவர். ஆனால், யாருக்குப் பதில்? ஏற்கெனவே அனைத்து வீரர்களும் அட்டாக்கிங்கில் ஈடுபட்டிருக்கும்போது, கெதிரா போன்ற வீரரைத் தூக்கியது, நடுகளத்தை மேலும் பலவீனப்படுத்தியது.

ஒருகோல் பின்தங்கியிருக்கும்போது, அவ்வளவு உக்கிரமாக அட்டாக்கில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார்கள். அதனால் பின்களம் மேலும் மேலும் வலுவிழந்தது. முதல் கோல் விட்ட பிறகும், அதைத் திருத்திக்கொள்ளாதது சாம்பியன்களுக்கு அழகல்ல! ஜேவியர் ஹெர்னாண்டஸ் அதிவிரைவாக டிஃபன்ஸை ஏமாற்றி வேலாவுக்குப் பாஸ் கொடுத்தபோது அங்கு இருந்ததும் ஒரே டிஃபண்டர்தான். அந்த பாஸை வேலா கோலாக்கியிருந்தால் ஆட்டம் அப்போதே முடிந்திருக்கும். இதை சரிசெய்துகொண்டால் மட்டுமே இந்தத் தோல்வியிலிருந்து மீண்டுவர முடியும்.

அட்டாக்கைப் பொறுத்தவரை ஜெர்மனி அணியின் செயல்பாடு சிறப்பாகவே இருந்தது. டிராக்ஸ்லர், ரியூஸ், குரூஸ் இடையிலான மூவ்மென்ட் சிறப்பாக இருந்தது. ஆனால், அவர்களிடம் Killer instinct மிஸ்ஸிங். 25 ஷாட்கள் அடித்து ஒன்றுகூட கோல் இல்லை. மெக்சிகோ கோல்கீப்பர் ஒசோவ் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், அவரை ஓரிரு சவாலான ஷாட்கள் மட்டுமே சோதித்தன. நிறைய வாய்ப்புகள் ஏற்படுத்தியிருந்தாலும், அதை அவர்களால் கோலாக மாற்ற முடியவில்லை. கால்பந்தில் ஒரு சொல்லாடல் உண்டு 'It's not about creating chances. It's about converting chances'. அதுவும் உலகக் கோப்பை போன்ற தொடரில் Posession, Chances created போன்ற நம்பர்கள் வேலைக்கு ஆகாது. ரிசல்ட் மிக முக்கியம். இந்த விஷயத்திலும் கொஞ்சம் கவனம் தேவை. என்னைப் பொறுத்தவரை தாமஸ் முல்லர் இடத்தில் மார்கோ ரியூஸ் களமிறங்கியிருந்தால் முதல் பாதியில் இன்னும் நல்ல ரிசல்ட் கிடைத்திருக்கும். 

மெக்சிகோ அணி உலகச் சாம்பியனை எதிர்கொள்கிறோம் என்பதைத் தெரிந்து விளையாடியிருக்கிறது. தடுப்பாட்டத்தில் அரண் அமைத்தவர்கள், எப்போது எப்படி கவுன்ட்டர் அட்டாக்கைத் தொடங்கவேண்டும் என்பதிலும் தெளிவாக இருந்தார்கள். ஓரிரு பாஸ்களில் attacking third அடைந்தார்கள். ஜெர்மனி இந்த இடத்திலும் கொஞ்சம் பின்தங்கியிருந்ததுபோல் தோன்றியது. அவர்கள் வேகமான அட்டாக்குகளை விங்கில் இருந்தோ, நடுவிலோகூட ஆரம்பிக்கவில்லை. நடுகளத்திலிருந்து attacking third அடைய அவர்கள் நான்கைந்து பாஸ்கள் எடுத்துக்கொண்டார்கள். இந்த விஷயத்தில் மெக்சிகோ, ஜெர்மனிக்குப் பாடம் கத்துக்கொடுத்திருக்கிறது. 

கடந்த இரண்டு உலகக் கோப்பைகளிலும் நடப்பு சாம்பியன்கள் முதல் சுற்றோடு வெளியேறியதாலும், இந்தப் போட்டியின் முடிவாலும், ஜெர்மனி மீதான நம்பிக்கை அனைவரிடத்திலும் குறைந்திருக்கிறது. ஆனால், என்னைப் பொறுத்தவரை இதை நான் அப்படி நெகட்டிவாகப் பார்க்கவில்லை. ஜெர்மனி அடுத்தடுத்த போட்டிகளில் தங்களின் சிறந்த ஆட்டத்தைக் காட்டும். ஆனால், அதற்கு முன் தங்களின் இந்தத் தவறுகளையெல்லாம் அவர்கள் சரிசெய்துகொள்ளவேண்டும். 

ராவணன் தர்மராஜ் - தமிழகத்தைச் சேர்ந்த கால்பந்து வீரர். டெம்போ, மோகன் பகான், சர்ச்சில் பிரதர்ஸ் போன்ற முன்னணி ஐ -லீக் அணிகளில் விளையாடிய அனுபவ டிஃபண்டர். இந்திய 23 வயதுக்குட்பட்ட அணிக்காக 3 ஆண்டுகள் விளையாடியுள்ளார். புனே சிட்டி அணிக்காக ஐ.எஸ்.எல் தொடரில் 34 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சிட்டி அணிக்கு விளையாடிவருகிறார்.